search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கா்ப்பம்"

    • 13 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தெரிகிறது.
    • சிறுமியின் பெற்றோா் கடந்த 2022ல் உடுமலை மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்டம், உடுமலை அமராவதி நகரைச் சோ்ந்தவா் கோகுலகண்ணன் (வயது 21). இவா் அதே பகுதியைச் சோ்ந்த 13 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தெரிகிறது. இதனால் அந்த சிறுமி கா்ப்பமடைந்துள்ளாா். இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் கடந்த 2022ல் உடுமலை மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

    இந்தப் புகாரின் பேரில் போக்சோ பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் கோகுலகண்ணனை கைது செய்தனா். இந்த வழக்கானது திருப்பூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் மீதான இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி பாலு தீா்ப்பு வழங்கினாா். இதில், கோகுலகண்ணனுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தாா். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் பரிந்துரை செய்தாா். இந்த சிறுமிக்கு தற்போது குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×