search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காமராஜ் சிலை"

    • 4 வழிச்சாலை பணிக்காக காமராஜர் சிலையை வேறு இடத்திற்கு மாற்ற முடிவெடுக்கப்பட்டது.
    • காமராஜரின் வெண்கல சிலையானது மினி லாரியில் கொண்டு வரப்பட்டது.

    தென்காசி:

    ஆலங்குளத்தில் 9 அடி உயரம் மற்றும் 680 கிலோ எடை கொண்ட காமராஜரின் முழு உருவ வெண்கல சிலை மேளதாளங்கள் முழங்க அதன் பீடத்தில் நிறுவப்பட்டது. அதன் திறப்பு விழா வருகிற 15 -ந்தேதி தேதி நடைபெறுகிறது.

    காமராஜர் சிலை

    நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலை பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வரும் சூழ்நிலையில் ஆலங்குளம் பஸ் நிலையம் எதிரே ஏற்கனவே உள்ள காமராஜர் சிலையானது 4 வழிச்சாலை பணிக்காக அகற்றப்பட்டு வேறு இடத்திற்கு மாற்ற முடிவெடுக்கப்பட்டது.

    இந்நிலையில் ஆலங்குளம் பஸ் நிலையத்தின் கீழ்புறம் இருந்த வேன் ஸ்டாண்ட் இருந்த பகுதியில் காமராஜர் சிலை மாற்றி அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு ஆர்.டி.ஓ. மற்றும் அரசு அதிகாரிகளின் உத்தர வின் பெயரில் சிலை நிறுவுவதற்கான பணிகள் நடைபெற்று வந்தன.

    வருகிற 15-ந்தேதி காமராஜர் பிறந்தநாள் கொண்டாடப்பட இருக்கும் நிலையில் அதற்கு முன்பாக தேர்வு செய்யப்பட்ட இடத்தில் புதிய காமராஜர் சிலை அமைப்பதற்கு சுமார் 680 கிலோ எடை கொண்ட 9 அடி உயரத்தில் காமராஜரின் முழு உருவ வெண்கல சிலையானது மினி லாரியில் கொண்டு வரப்பட்டது.

    சாலையில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட சிலைக்கு இளைஞர்கள் மற்றும் ஆலங்குளம் பொதுமக்கள் சார்பில் பட்டாசுகள் வெடித்து, மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பின்பு கிரேன் உதவியுடன் காமராஜர் சிலையானது தேர்வு செய்யப்பட்ட இடத்தில் நிறுவப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன், தென்காசி எம்.எல்.ஏ. பழனி நாடார், நெல்லை பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் ராமசுப்பு, சிலை அமைப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் ஜாண் ரவி, எம்.எஸ். காமராஜ், , பேரூராட்சித் தலைவர் சுதா மோகன்லால், காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவர் ஆர்.கண்ணன், ஒன்றியக் குழுத் தலைவர் திவ்யா மணிகண்டன், நகர செயலாளர் வில்லியம் தாமஸ், வட்டார தலைவர் ரூபன் தேவதாஸ், சிறுபான்மை பிரிவு செயலாளர் ஞான பிரகாஷ், வக்கீல்கள் நெல்சன், சாந்தகுமார், இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது, வக்கீல் ஜாண்சன், ச.ம.க. ஒன்றிய செயலாளர் ஜெயபாலன் ஜெகன், சோனா மகேஷ்,பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த சிலையை முன்னாள் எம்.பி. எச். வசந்த குமாரின் குடும்பம் சார்பில் அவரது மகன் விஜய் வசந்த் அன்பளிப்பாக வழங்கி உள்ளார்.


    காமராஜர் சிலை கட்டுமான பணிக்காக ரூ.1 லட்சம் நிதியினை யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் வழங்கிய போது எடுத்த படம்.

    காமராஜர் சிலை கட்டுமான பணிக்காக ரூ.1 லட்சம் நிதியினை யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் வழங்கிய போது எடுத்த படம்.


     


    • ஆறுமுகநேரி மெயின் பஜார் பகுதியில் காமராஜர் பூங்கா உள்ளது.
    • பூங்கா விரைவில் மேம்படுத்தப்படும் என்று அமைச்சர், கலெக்டர் ஆகியோர் அறிவித்ததாக மனுவில் கூறப்பட்டுள்ளது.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி நகர அ.தி.மு.க. முன்னாள் செயலாளர் அமிர்தராஜ், பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம், துணைத் தலைவர் கல்யாணசுந்தரம், செயல் அலுவலர் கணேசன் ஆகியோரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    ஆறுமுகநேரி மெயின் பஜார் பகுதியில் காமராஜர் பூங்கா உள்ளது. இது 1958-ம் ஆண்டில் அப்போதைய பேரூராட்சி தலைவரான இயேசுதாசன்வேதமுத்து மற்றும் எம்.எல்.ஏ வாக இருந்த எம்.எஸ். செல்வராஜன் ஆகியோரின் முயற்சியால் அமைக்கப்பட்டது. இதனை சில நாட்களுக்கு முன்பு பார்வையிட்ட நகராட்சி துறை அமைச்சர் கே.என். நேரு, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோர் காமராஜர் பூங்கா நவீன வசதிகளுடன் விரைவில் மேம்படுத்தப்படும் என்று அறிவித்தனர்.

    இது ஆறுமுகநேரி மக்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் முன்னாள் முதல்-அமைச்சரான பெருந்தலைவர் காமராஜர் பெயரில் அமைந்துள்ள இந்த பூங்கா வளாகத்தில் பேரூராட்சியின் சார்பில் காமராஜரின் முழு உருவ சிலை அமைக்கப்பட உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு இந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    ×