search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆறுமுகநேரி பூங்கா வளாகத்தில் காமராஜருக்கு சிலை- அ.தி.மு.க. கோரிக்கை
    X

    ஆறுமுகநேரி பூங்கா வளாகத்தில் காமராஜருக்கு சிலை- அ.தி.மு.க. கோரிக்கை

    • ஆறுமுகநேரி மெயின் பஜார் பகுதியில் காமராஜர் பூங்கா உள்ளது.
    • பூங்கா விரைவில் மேம்படுத்தப்படும் என்று அமைச்சர், கலெக்டர் ஆகியோர் அறிவித்ததாக மனுவில் கூறப்பட்டுள்ளது.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி நகர அ.தி.மு.க. முன்னாள் செயலாளர் அமிர்தராஜ், பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம், துணைத் தலைவர் கல்யாணசுந்தரம், செயல் அலுவலர் கணேசன் ஆகியோரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    ஆறுமுகநேரி மெயின் பஜார் பகுதியில் காமராஜர் பூங்கா உள்ளது. இது 1958-ம் ஆண்டில் அப்போதைய பேரூராட்சி தலைவரான இயேசுதாசன்வேதமுத்து மற்றும் எம்.எல்.ஏ வாக இருந்த எம்.எஸ். செல்வராஜன் ஆகியோரின் முயற்சியால் அமைக்கப்பட்டது. இதனை சில நாட்களுக்கு முன்பு பார்வையிட்ட நகராட்சி துறை அமைச்சர் கே.என். நேரு, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோர் காமராஜர் பூங்கா நவீன வசதிகளுடன் விரைவில் மேம்படுத்தப்படும் என்று அறிவித்தனர்.

    இது ஆறுமுகநேரி மக்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் முன்னாள் முதல்-அமைச்சரான பெருந்தலைவர் காமராஜர் பெயரில் அமைந்துள்ள இந்த பூங்கா வளாகத்தில் பேரூராட்சியின் சார்பில் காமராஜரின் முழு உருவ சிலை அமைக்கப்பட உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு இந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×