search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காமராஜர் பிறந்தநாள் விழா"

    • காந்தி சிலைக்கு நிழற்குடை, கல்வெட்டை மத்திய அரசின் கள விளம்பர துறை அதிகாரி தேவி பத்மநாதன் திறந்து வைத்து காமராஜர் படத்திற்கு மலர் தூவி வாழ்த்துரை வழங்கினார்.
    • நிகழ்ச்சியில் தமிழ்நாடு வேதாரணியம் உப்பு சத்தியாகிரக விழிப்புணர்வு இயக்கத்தின் நிர்வாகிகள், தொண்டர்கள், திரளாக கலந்து கொண்டனர்.

    திருச்சி :

    தமிழ்நாடு வேதாரணியம் உப்பு சத்தியாகிரக விழிப்புணர்வு இயக்கத்தின் சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா, பாதயாத்திரை சென்றவர்களுக்கு பாராட்டு விழா மற்றும் காந்தி சிலைக்கு நிழற்குடை கல்வெட்டு திறப்பு விழா திருச்சி ஜங்ஷன் உப்பு சத்தியாகிரக நினைவு ஸ்தூபியில் நடந்தது. மாநிலத் தலைவர் கம்பரசம்பேட்டை தர்மராஜ் தலைமை தாங்கினார்.

    மாநில பொதுச் செயலாளர் ஜங்ஷன் பூக்கடை பன்னீர்செல்வம் முன்னிலை வகித்து பேசினார். காந்தி சிலைக்கு நிழற்குடை, கல்வெட்டை மத்திய அரசின் கள விளம்பர துறை அதிகாரி தேவி பத்மநாதன் திறந்து வைத்து காமராஜர் படத்திற்கு மலர் தூவி வாழ்த்துரை வழங்கினார். மத்திய அரசின் நேரு யுவகேந்திரா அதிகாரி சுருதி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

    நேரு யுவகேந்திரா அதிகாரி சுப்பிரமணியன், ஐ.என்.டி. யூ.சி. தலைவர் முனுசாமி, ஓய்வு பெற்ற கனரா வங்கி அதிகாரி சுப்பிரமணியன், மாஸ்டர் தங்கமணி ஆகியோர் பாதயாத்திரை சென்றவர்களை பாராட்டி சிறப்பித்தனர். முடிவில் திருச்சி மாவட்ட தலைவர் சண்முகம் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு வேதாரணியம் உப்பு சத்தியாகிரக விழிப்புணர்வு இயக்கத்தின் நிர்வாகிகள், தொண்டர்கள், திரளாக கலந்து கொண்டனர்.

    • தாடிக்கொம்பு காமராஜர் வித்யாலயா நர்சரி -பிரைமரி பள்ளியில் காமராஜரின் 120-வது பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது.
    • கலை நிகழ்ச்சிகள் மற்றும் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

    தாடிக்கொம்பு:

    தாடிக்கொம்பு ரோட்டில் உள்ள காமராஜர் வித்யாலயா நர்சரி -பிரைமரி பள்ளியில் காமராஜரின் 120-வது பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது.

    பின்னர் காமராஜர் உருவபடத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஆடிட்டர் சிற்றம்பல நடராஜன் தலைமை தாங்கினார். காந்திகிராம கிராமிய பல்கலைக்கழக தேர்வாணையர் டாக்டர் சிவராமன் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் அருணாசேம்பர் மணிகண்டன், பள்ளியின் முதல்வர் ஜெர்த்நவநீதம் மற்றும் பள்ளி மாணவ- மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியின் முடிவில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    • தேனி மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் சங்கரநாராயணன் தலைமையில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.
    • பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காமராஜர் வரலாறு, சாதனை பட்டியல் சிறப்பு தொகுப்பாக வழங்கப்பட்டது.

    தேனி:

    காமராஜர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தேனி மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் சங்கரநாராயணன் தலைமையில் காமராஜ் பவனில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. மதுரை பேராசிரியர் அசோக்ராஜ், வடுகபட்டிபேரூராட்சி துணைத்தலைவர் அழகர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    அதன்பின் கருணை இல்ல குழந்தைகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், ஏழைப்பெண்களுக்கு சேலைகள், போர்வைகள் வழங்கப்பட்டன.

    காமராஜரால் திறந்து வைக்கப்பட்ட அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காமராஜர் வரலாறு, சாதனை பட்டியல் சிறப்பு தொகுப்பாக வழங்கப்பட்டது. தேனி நாடார் பள்ளியில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து உறவின்முறை தலைவர் ராஜ்மோகனிடம் சாதனை பட்டியல் வழங்கப்பட்டது.

    சுக்காங்கால்பட்டி, ஓடைப்பட்டி ஆகிய கிராமபள்ளிகளுக்கும் நேரடியாக சென்று காமராஜர் சாதனைபட்டியல் தொகுப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கம்பம் மனோகரன், கண்ணுச்சாமி, மெல்வின், கணேஷ்மிஷ்ரா, முருகன், கஜேந்திரன், வசந்தம் சுப்புராமன், ஈஸ்வரன், ஹக்கீம், ஆரோக்கியராஜ், ராமகிருஷ்ணன், மகாராஜன், போடி ஹரிகரன், பாலையா, ராஜேந்திர பிரசாத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ஜோலார்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடந்தது
    • மலர் தூவி மரியாதை செலுத்தினர்

    ஜோலார்பேட்டை :

    ஜோலார்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக நேற்று கொண்டாடப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சி. எஸ். பெரியார்தாசன் தலைமை தாங்கினார். தி.மு.க நகர செயலாளர் அன்பழகன், துணைத் தலைவர் பி. ஆர். முகிலன், கமிட்டி உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். பள்ளியின் தலைமையாசிரியர் ஐ. ஆஜம் வரவேற்றார். பள்ளி வளாகத்தில் காமராஜரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    • விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளியின் தமிழ்த்துறையைச் சார்ந்த ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
    • முன்னதாக நிகழ்ச்சிக்கு ஏ.வி.பி. கல்விக் குழுமங்களின் தாளாளர் கார்த்திகேயன் அருள்ஜோதி தலைமை தாங்கி தலைமையுரை ஆற்றினார்.

    திருப்பூர்:

    திருப்பூர், காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள ஏ.வி.பி. டிரஸ்ட் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில் காமராஜரின் 120- வது பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்பட்டது.

    பள்ளியின் திறந்தவெளி மைதானத்தில் நடைபெற்ற நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 20 மாணவர்கள் காமராஜர் போல் வேடமணிந்து காமராஜரின் பிள்ளைப் பருவம் முதல் முதுமைப் பருவம் வரை பல்வேறு நிகழ்வுகளை நாடகமாக மாணவர்களுக்கு வழங்கினர். மேலும் காமராஜரின் புகழ்பாடும் பாடல், கல்விக்கு காமராஜர் ஆற்றிய அரும்பணிகள் பற்றிய பேச்சு, காமராஜர் பற்றிய குறும்படம் முதலியவற்றை மாணவர்களுக்குத் திரையிட்டு காட்டி காமராஜரின் பிறந்தநாள் விழாவினை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

    முன்னதாக நிகழ்ச்சிக்கு ஏ.வி.பி. கல்விக் குழுமங்களின் தாளாளர் கார்த்திகேயன் அருள்ஜோதி தலைமை தாங்கி தலைமையுரை ஆற்றினார். ஏ.வி.பி.கல்விக் குழுமங்களின் பொருளாளர் லதா கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். பள்ளியின் 9-ம் வகுப்பு மாணவி சுஷ்மா வரவேற்றார்.பள்ளியின் முதல்வர் பிரமோதினி மாணவர்களிடையே காமராஜரின் வாழ்க்கை நமக்கு ஒரு பாடம் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். பள்ளியின் தமிழ்த் துறையைச் சேர்ந்த ஆசிரியை ஜூலியட் சாந்தகுமாரி நன்றி கூறினார். விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளியின் தமிழ்த்துறையைச் சார்ந்த ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    ×