search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சி உப்பு சத்தியாகிரக நினைவு ஸ்தூபியில் காமராஜர் பிறந்த நாள் விழா
    X

    திருச்சி உப்பு சத்தியாகிரக நினைவு ஸ்தூபியில் காமராஜர் பிறந்த நாள் விழா

    • காந்தி சிலைக்கு நிழற்குடை, கல்வெட்டை மத்திய அரசின் கள விளம்பர துறை அதிகாரி தேவி பத்மநாதன் திறந்து வைத்து காமராஜர் படத்திற்கு மலர் தூவி வாழ்த்துரை வழங்கினார்.
    • நிகழ்ச்சியில் தமிழ்நாடு வேதாரணியம் உப்பு சத்தியாகிரக விழிப்புணர்வு இயக்கத்தின் நிர்வாகிகள், தொண்டர்கள், திரளாக கலந்து கொண்டனர்.

    திருச்சி :

    தமிழ்நாடு வேதாரணியம் உப்பு சத்தியாகிரக விழிப்புணர்வு இயக்கத்தின் சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா, பாதயாத்திரை சென்றவர்களுக்கு பாராட்டு விழா மற்றும் காந்தி சிலைக்கு நிழற்குடை கல்வெட்டு திறப்பு விழா திருச்சி ஜங்ஷன் உப்பு சத்தியாகிரக நினைவு ஸ்தூபியில் நடந்தது. மாநிலத் தலைவர் கம்பரசம்பேட்டை தர்மராஜ் தலைமை தாங்கினார்.

    மாநில பொதுச் செயலாளர் ஜங்ஷன் பூக்கடை பன்னீர்செல்வம் முன்னிலை வகித்து பேசினார். காந்தி சிலைக்கு நிழற்குடை, கல்வெட்டை மத்திய அரசின் கள விளம்பர துறை அதிகாரி தேவி பத்மநாதன் திறந்து வைத்து காமராஜர் படத்திற்கு மலர் தூவி வாழ்த்துரை வழங்கினார். மத்திய அரசின் நேரு யுவகேந்திரா அதிகாரி சுருதி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

    நேரு யுவகேந்திரா அதிகாரி சுப்பிரமணியன், ஐ.என்.டி. யூ.சி. தலைவர் முனுசாமி, ஓய்வு பெற்ற கனரா வங்கி அதிகாரி சுப்பிரமணியன், மாஸ்டர் தங்கமணி ஆகியோர் பாதயாத்திரை சென்றவர்களை பாராட்டி சிறப்பித்தனர். முடிவில் திருச்சி மாவட்ட தலைவர் சண்முகம் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு வேதாரணியம் உப்பு சத்தியாகிரக விழிப்புணர்வு இயக்கத்தின் நிர்வாகிகள், தொண்டர்கள், திரளாக கலந்து கொண்டனர்.

    Next Story
    ×