search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏ.வி.பி.டிரஸ்ட்"

    • விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளியின் தமிழ்த்துறையைச் சார்ந்த ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
    • முன்னதாக நிகழ்ச்சிக்கு ஏ.வி.பி. கல்விக் குழுமங்களின் தாளாளர் கார்த்திகேயன் அருள்ஜோதி தலைமை தாங்கி தலைமையுரை ஆற்றினார்.

    திருப்பூர்:

    திருப்பூர், காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள ஏ.வி.பி. டிரஸ்ட் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில் காமராஜரின் 120- வது பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்பட்டது.

    பள்ளியின் திறந்தவெளி மைதானத்தில் நடைபெற்ற நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 20 மாணவர்கள் காமராஜர் போல் வேடமணிந்து காமராஜரின் பிள்ளைப் பருவம் முதல் முதுமைப் பருவம் வரை பல்வேறு நிகழ்வுகளை நாடகமாக மாணவர்களுக்கு வழங்கினர். மேலும் காமராஜரின் புகழ்பாடும் பாடல், கல்விக்கு காமராஜர் ஆற்றிய அரும்பணிகள் பற்றிய பேச்சு, காமராஜர் பற்றிய குறும்படம் முதலியவற்றை மாணவர்களுக்குத் திரையிட்டு காட்டி காமராஜரின் பிறந்தநாள் விழாவினை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

    முன்னதாக நிகழ்ச்சிக்கு ஏ.வி.பி. கல்விக் குழுமங்களின் தாளாளர் கார்த்திகேயன் அருள்ஜோதி தலைமை தாங்கி தலைமையுரை ஆற்றினார். ஏ.வி.பி.கல்விக் குழுமங்களின் பொருளாளர் லதா கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். பள்ளியின் 9-ம் வகுப்பு மாணவி சுஷ்மா வரவேற்றார்.பள்ளியின் முதல்வர் பிரமோதினி மாணவர்களிடையே காமராஜரின் வாழ்க்கை நமக்கு ஒரு பாடம் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். பள்ளியின் தமிழ்த் துறையைச் சேர்ந்த ஆசிரியை ஜூலியட் சாந்தகுமாரி நன்றி கூறினார். விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளியின் தமிழ்த்துறையைச் சார்ந்த ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    ×