என் மலர்
உள்ளூர் செய்திகள்

காமராஜர் வேடத்தில் மாணவர்கள்.
காமராஜர் பிறந்தநாள் விழா
- ஜோலார்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடந்தது
- மலர் தூவி மரியாதை செலுத்தினர்
ஜோலார்பேட்டை :
ஜோலார்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக நேற்று கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சி. எஸ். பெரியார்தாசன் தலைமை தாங்கினார். தி.மு.க நகர செயலாளர் அன்பழகன், துணைத் தலைவர் பி. ஆர். முகிலன், கமிட்டி உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். பள்ளியின் தலைமையாசிரியர் ஐ. ஆஜம் வரவேற்றார். பள்ளி வளாகத்தில் காமராஜரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
Next Story






