search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கரும்புகை"

    • தொழிற்சாலையில் வடமாநில தொழிலாளர்கள் மட்டுமே பணியில் உள்ளனர்.
    • தொழிற்சாலையிலிருந்து வெளிவரும் கரும்புகையினால் துர்நாற்றம் மற்றும் மூச்சுதிணறல் ஏற்பட்டது.

     திருப்பூர் :

    உடுமலை பெரியபாப்பனூத்து ஊராட்சி அந்தியூர் விவசாயிகள் திருப்பூர் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- அந்தியூர் ஊராட்சியில் தனியார் தொழிற்சாலை கடந்த ஒரு வருடமாக இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் வடமாநில தொழிலாளர்கள் மட்டுமே பணியில் உள்ளனர்.இந்த தொழிற்சாலை முதலில் தேங்காயில் இருந்து எண்ணெய் எடுக்கும் ஆலை என்று அதன் உரிமையாளரால் சொல்லப்பட்டது.நாளடைவில் இந்த தொழிற்சாலையிலிருந்து வெளிவரும் கரும்புகையினால் துர்நாற்றம் மற்றும் மூச்சுதிணறல் ஏற்பட்டது. இது தொடர்பாக இந்த தொழிற்சாலையில் என்ன உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த தொழிற்சாலை முறையான அனுமதியை மாவட்ட நிர்வாகத்திடமும், வட்டார வளர்ச்சி துறையிடமும் ஊராட்சி நிர்வாகத்திடமும் பெறப்பட்டுள்ளதா என தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் தகவல் கோரினோம்.ஆனால் இந்த தகவல் கோரிய மனு மீது எந்த பதிலும் கொடுக்கப்படவில்லை. எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    நாளடைவில் இந்த தொழிற்சாலையினால் பல்வேறு வகையான நோய்களுக்கு மக்கள் உட்படுகின்றனர்.பள்ளிக்குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் இந்த தொழிற்சாலை வழியாகச்செல்ல வேண்டியுள்ளது. இதனால் மூச்சு திணறல் மற்றும் வாந்தி ஏற்படுகிறது. ஊராட்சி நிர்வாகத்திடம்பலமுறை பொதுமக்கள் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    தற்காலிகமாக நடவடிக்கையாக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் நிறுத்திவைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் இந்த தொழிற்சாலை இயங்குகிறது.ஆழ்துளை கிணறு அமைத்து கழிவு நீரை அதனுள் இறக்குகின்றனர். இதனால் நிலத்தடிநீர் மாசுபடுகிறது. இதனால் கால் நடைகளுக்கும் மற்றும் விவசாய பொது மக்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த நச்சுப்புகை காற்றில் பரவுவதால் அருகில் உள்ள ஊர்பொதுமக்களுக்கு பல்வேறு வகையான நோய் தொற்று பாதிப்பு ஏற்படுகிறது. எனவே இந்ததொழிற்சாலையை உடனே நிறுத்தி வைத்து பொதுமக்களை காக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.  

    • பலர் குப்பைகளை கொட்டி எரித்து வருவதால் நச்சப்புகை ஏற்படுகிறது.
    • புகையை காட்டிலும் சற்று மாறுபட்டதாக இருந்ததால் ஏதேனும் வேதிப்பொருள் கலக்கப்பட்டிருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் எம்.வி.எம். கல்லூரி ரெயில்வே கேட் அருகே பயன்பாடற்ற இடம் உள்ளது. இங்கு சுற்றுப்புற பகுதியை சேர்ந்த பலர் குப்பைகளை கொட்டி எரித்து வருகின்றனர். மேலும் ஒர்க்‌ஷாப்புகளில் இருந்து ஆயில் உள்ளிட்ட கழிவு பொருட்களும் கொட்டப்படுகின்றன.

    மாசடைந்து வந்த இந்த இடத்தில் இன்று பகல் பொழுதில் கரும்புகை வெளிப்பட்டது. இதனால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். தீயினால் வைக்கப்பட்ட புகையை காட்டிலும் சற்று மாறுபட்டதாக இருந்ததால் ஏதேனும் வேதிப்பொருள் கலக்கப்பட்டிருக்குேமா என்ற அச்சம் ஏற்பட்டது.

    தொடர்ந்து இதேபோல் நச்சுக்கழிவுகள் இப்பகுதியில் கொட்டப்படுவதால் நிலத்தடி நீர் மாசுபடுவதோடு சுற்றுச்சூழலுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×