search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருமகவுண்டம்பாளையம்"

    • நாமக்கல் மாவட்டம் கருமகவுண்டம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் கலெக்டர் திடீர் ஆய்வு செய்தார்.
    • ஆசிரியர்கள் எடுக்கும் பாடங்கள் விபரம் குறித்தும், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகளின் வருகை பதிவு குறித்தும் தலைமை ஆசிரியரிடம் கேட்டு கலெக்டர் ஆய்வு செய்தார்.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள, கருமகவுண்டம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் ஆய்வு செய்தார். இந்த ஆய்வுகளின் போது, பள்ளியில் அனைத்து வகுப்பறைகளுக்கும் சென்று மாணவ, மாணவிகளின் வருகைப்பதிவேடுகளை கலெக்டர் பார்வையிட்டார்.

    மேலும், பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை குறித்தும், ஆசிரியர்கள் எடுக்கும் பாடங்கள் விபரம் குறித்தும், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகளின் வருகை பதிவு குறித்தும் தலைமை ஆசிரியரிடம் கேட்டறிந்தார்.

    மேலும் நீண்ட நாட்களாக பள்ளிக்கு வராமல் உள்ள மாணவர்களின் விவரங்கள் குறித்து கேட்டு, அந்த மாணவர்களின் பெற்றோரிடம் வகுப்பாசி–ரியர்கள் பேசினார்களா என்றும், ஏன் அவர்கள் வரவில்லை என்றும், அவர்களை பள்ளிக்கு வர எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் விவரம் கேட்டார். பள்ளிக்கு வராத மாணவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று அவர்கள் தொடர்ந்து பள்ளிaக்கு வர தக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

    பின்னர், கருமகவுண்டம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தை நேரில் பார்வையிட்டு, அங்கன்வாடி மையத்தில் பரமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளையும், குழந்தைகளின் வருகை எண்ணிக்கை குறித்து அங்கன்வாடி பணியாளர்களிடம் கேட்டறிந்தார். மேலும், அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளுடன் கலந்துரையாடி கல்வி தரத்தை ஆய்வு செய்தார்.

    அதனைத்தொடர்ந்து உயர்நிலை பள்ளி சத்துணவு கூடத்தில் மாணவ, மாணவிகளுக்கு வழங்க சமைக்கப்பட்ட சத்துணவினை கலெக்டர் சாப்பிட்டு ருசி பார்த்தார். மேலும் சத்துணவு மையத்தில் உணவுப் பொருட்கள் இருப்பு குறித்த பதிவேடுகளை பார்வையிட்டு உணவு பொருட்களின் அளவு மற்றும் முட்டைகளின் எண்ணிக்கையை சரிபார்த்தார்.

    பின்னர், திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியம், வரகூராம்பட்டி கிராம நிர்வாக அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், நில ஆவணங்கள் உள்ளிட்ட பல்வேறு பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பல்வேறு சான்றுகள் கோரி விண்ணப்பிக்கும் போது விரைந்து ஆவணங்கள் சரிப்பார்க்கப்பட்டு ஒப்புதல் அளிக்க வேண்டுமென கிராம நிர்வாக அலுவலருக்கு அறிவுறுத்தினார். மேலும், வரகூராம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

    முன்னதாக திருச்செங்கோடு வட்டத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் மகளிர் வாழ்வாதார சேவை மைய அலுவலகத்தை திறந்து வைத்து, மகளிர் சுயஉதவி குழுவினரின் உற்பத்தி பொருட்களை பார்வையிட்டார். ஆய்வின் போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிரிஜா, டேவிட் அமல்ராஜ் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×