search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருணாநிதி பிறந்தநாள்"

    • ஒவ்வொரு மாவட்டத்திலும் எந்தெந்த கடைகளை மூடலாம் என்று பட்டியல் எடுக்கப்பட்டு வருகிறது.
    • 500 கடைகளை கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3-ந்தேதி முதல் மூடுவதற்கு அரசு ஏற்பாடு செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் 5329 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இந்த கடைகள் மூலம் ஆண்டு ஒன்றுக்கு ரூ.44 ஆயிரம் கோடி வரை அரசுக்கு வருமானம் கிடைத்து வருகிறது.

    இந்த வருமானம் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் டாஸ்மாக் மதுக்கடைகளை ஒரு இடத்தில் மூடினாலும் இன்னொரு இடத்தில் திறந்து விடுவதாக மக்கள் குறை கூறி வருகின்றனர்.

    இந்த நிலையில் மாநிலம் முழுவதும் 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி கடந்த மாதம் சட்டசபையில் அறிவித்திருந்தார்.

    இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் எந்தெந்த கடைகளை மூடலாம் என்று பட்டியல் எடுக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள கோவில்கள் அருகில் இருக்கும் கடைகளை மூடுவது, 500 மீட்டர் சுற்றளவில் 2 கடைகள் இருந்தால் அதில் ஒரு கடையை மூடுவது என்று பட்டியல் எடுக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி 500 கடைகளை கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3-ந்தேதி முதல் மூடுவதற்கு அரசு ஏற்பாடு செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சென்னை கிழக்கு மாவட்டம் துறைமுகம் தொகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி பின்னி மில் மைதானம் அந்தோனியார் சர்ச் அருகில் நடைபெற்றது.
    • தையற்கலை மாணவர்கள் 271 பேருக்கு தையல் இயந்திரங்களையும் கணினி பயின்ற 309 மாணவிகளுக்கு மடிகணினிகளையும் கல்லூரி மாணவர்கள் 500 பேருக்கு ரூ. 5000 வீதம் கல்வி உபகரணங்களையும் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாளையொட்டி சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அமைச்சர் சேகர்பாபு ஏற்பாட்டில் தொடர் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.

    இதன் தொடர்ச்சியாக சென்னை கிழக்கு மாவட்டம் துறைமுகம் தொகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி பின்னி மில் மைதானம் அந்தோனியார் சர்ச் அருகில் நடைபெற்றது.

    அமைச்சர் பி.கே சேகர்பாபு முன்னிலை வகித்தார். இதில் தி.மு.க இளைஞரணி செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு அன்னை தயாளு அம்மாள் தொண்டு நிறுவனத்தில் பயின்ற தையற்கலை மாணவர்கள் 271 பேருக்கு தையல் இயந்திரங்களையும் கணினி பயின்ற 309 மாணவிகளுக்கு மடிகணினிகளையும் கல்லூரி மாணவர்கள் 500 பேருக்கு ரூ. 5000 வீதம் கல்வி உபகரணங்களையும் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் தயாநிதி மாறன் எம். பி. பர்வீன் சுல்தானா, எம்.எல்.ஏ.க்கள் தாயகம் கவி, எ.வெற்றியழகன், ஜோசப் சாமுவேலு மற்றும் பகுதி கழக செயலாளர் எஸ். முரளி, எஸ்.ராஜசேகர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மகேஷ் குமார்,மண்டல தலைவர்கள் கூ.பி. ஜெயின் சோ வேலு, டி, எஸ்.பி ராஜகோபால், கவுன்சிலர்கள் வே. பரிமளம், பி.ஸ்ரீராமுலு, இசட். ஆசாத், ராஜெஷ் ஜெயின், கே.சரஸ்வதி பகுதி செயலாளர்கள் சுதாகர், முரளிதரன், ஏன், நாகராஜன், டிஎஸ்பி எம்.டி.ஆர் நாகராஜ், செ. தமிழ்வேந்தன், என். சாமி, வே.வாசு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் டி.வி செம்மொழி, எம், விஜயகுமார், மாவட்ட பிரதிநிதிகள் டீ. தம்பிதுரை, ஜி.பாலாஜி எஸ்.எம் ஹாஜி,எம்.எம். மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் பார்த்திபன், கே. கவியரசு ஆகியோர் நன்றி கூறினர்.

    • சென்னை அகரம் ஜெயின் பள்ளி வளாகத்தில் “குறளோவியரின் புகழரங்கம்” என்ற பெயரில் கருத்தரங்கம் நடந்தது.
    • பகுதி செயலாளர்கள் ஐ.சி.எப்.முரளிதரன், எ.நாகராஜன் ஆகியோர் வரவேற்று பேசினர். மேயர் பிரியாராஜன், எம்.பிக்கள் கலாநிதி வீராசாமி, கிரிராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சென்னை:

    இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான பி.கே.சேகர்பாபு ஏற்பாட்டில் கருணாநிதி பிறந்தநாள் விழா "வேருக்கு விழா" என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வருகிறது.

    இதன் தொடர்ச்சியாக சென்னை அகரம் ஜெயின் பள்ளி வளாகத்தில் "குறளோவியரின் புகழரங்கம்" என்ற பெயரில் கருத்தரங்கம் நடந்தது. கே.ஜார்ஜ்குமார் தலைமை தாங்கினார். பகுதி செயலாளர்கள் ஐ.சி.எப்.முரளிதரன், எ.நாகராஜன் ஆகியோர் வரவேற்று பேசினர். மேயர் பிரியாராஜன், எம்.பிக்கள் கலாநிதி வீராசாமி, கிரிராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் சாலமன் பாப்பையா, ராஜா, பாரதி பாஸ்கர் ஆகியோர் பங்கேற்று பேசினார்கள். அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ப.ரங்கநாதன், சங்கரி நாராயணன், சரிதா மகேஷ்குமார், தேவஜவகர், கே.சந்துரு, சி.மகேஷ்குமார், எஸ்.பன்னீர் செல்வம், எம்.தாவுத்பீ, துரைகண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் ந.பொன்முடி நன்றி கூறினார்.

    ×