search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கபினி அணை"

    • காவிரி மேலாண்மை ஆணையம் 5 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விட உத்தரவு
    • கார்நாடகா சார்பில் தண்ணீர் திறந்து விட வற்புறுத்துவது சரியல்ல எனத் தெரிவிக்கப்பட்டது

    தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவிற்கும் இடையில் காவிரியில் தண்ணீர் திறந்து விடும் விவகாரத்தில மோதல் இருந்து வருகிறது. காவிரியில் தமிழகத்திற்குரிய நீரை கர்நாடக அரசு திறந்து விடவில்லை என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. அப்போது கார்நாடக அரசு சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

    இதற்கிடையே நேற்று முன்தினம் காவிரி மேலாண்மை வாரியம் கூடியது. அப்போது கர்நாடக அரசு வினாடிக்கு 5000 கனஅடி நீர் வீதம், 15 நாளைக்கு திறந்து விட வேண்டும் எனத் உத்தரவிட்டிருந்தது.

    இதற்கு கர்நாடக மாநிலம் மாண்டியாவில் உள்ள விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் ஆதரவு பெற்ற சுயேட்சை எம்.எல்.ஏ. தர்ஷன் புட்டனையாக இந்த போராட்டத்திற்கு ஆதரவாக உள்ளார்.

    விவசாயி நேற்று போராட்டத்தில் ஈடுபட்டு இரவு முழுவதும் போராட்டத்தை தொடர்ந்தனர். மெழுகுவர்த்தி ஏந்தி வைத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    போராட்டத்தை தொடர்ந்து, காவிரி நீர் தொடர்பாக ஆலோசனை நடத்த துணை முதல்வர் டி.கே. சிவகுமார் நாளை டெல்லி செல்ல இருக்கிறார்.

    இதற்கிடையே தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட்டால், அணைகளின் நீர் இருப்புகள் குறைந்து, குடிநீர் பற்றாக்குறை ஏற்படும். இதனால் தண்ணீர் திறந்து விட வாய்ப்பு இல்லை என கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்திருந்தார்.

    நேற்று காவிரில் நீர் வரத்து அதிகரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 4200 கனஅடியாக இருந்து நீர்வரத்து 6300 அடியாக அதிகரித்திருந்தது.

    • கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
    • 84 அடி உயரம் உள்ள கபினி அணையின் நீர்மட்டம் 73.85 அடியாக இருந்தது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி 124.80 அடி உயரம் உள்ள கிருஷ்ணராஜ சாகர்அணையின் நீர்மட்டம் 101.58 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2300 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 4398 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதே போல் 84 அடி உயரம் உள்ள கபினி அணையின் நீர்மட்டம் 73.85 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2594 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    கிருஷ்ண ராஜசாகர், கபினி அணைகளில் இருந்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 6 ஆயிரத்து 398 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    • கிருஷ்ண ராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரத்து 720 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
    • ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது.

    சேலம்:

    கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் ஆகிய அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 அணைகளில் இருந்தும் வினாடிக்கு 17 ஆயிரத்து 960 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. நேற்று கர்நாடக அணையில் இருந்து நீர் திறப்பு வினாடிக்கு 10 ஆயிரத்து 985 கனஅடியாக குறைக்கப்பட்டது.

    இந்த நிலையில் இன்று காலை 2 அணைகளில் இருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது கபினி அணையில் இருந்து ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த அணைக்கு நீர்வரத்து 970 கன அடியாகவும், நீர்மட்டம் 75.72 அடியாகவும் உள்ளது.

    அதே போல் கிருஷ்ண ராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரத்து 720 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த அணைக்கு நீர்வரத்து 3 ஆயிரத்து 491 கன அடியாகவும், நீர்மட்டம் 103.20 அடியாகவும் உள்ளது.

    இந்த 2 அணைகளில் இருந்தும் மொத்தம் 11 ஆயிரத்து 720 கன அடி நீர் தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.

    இந்த நீர்வரத்தை தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுவில் மத்திய நீர்வள ஆணைய அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை 11 ஆயிரத்து 22 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை வெகுவாக சரிந்து வினாடிக்கு 7 ஆயிரத்து 978 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    டெல்டா பாசனத்திற்கு அணையில் இருந்து நீர் மின் நிலையங்கள் வழியாக காவிரியில் 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    கடந்த ஒரு வார காலமாக அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருந்தது. இதனால் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வந்தது. தற்போது நீர்வரத்து குறைந்துள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் மீண்டும் சரிய தொடங்கி உள்ளது.

    நேற்று காலையில் 55.75 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் 55.48 அடியாக குறைந்தது. இனி வரும் நாட்களில் இதே நிலை நீடித்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட வாய்ப்புள்ளது.

    • காவிரி பிறப்பிடமான தலைகாவிரியில் நிற்காமல் மழை பெய்தது.
    • மைசூரில் உள்ள கபினி அணையில் 2284 அடி மொத்த கொள்ளளவு கொண்டது.

    தருமபுரி:

    கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் கே.ஆர்.எஸ். மற்றும் கபினி ஆகிய 2 அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.

    இதற்கிடையே மைசூரு, குடகு, மாண்டியா, சாம்ராஜ் நகர், ராம் நகர் போன்ற காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.

    காவிரி பிறப்பிடமான தலைகாவிரியில் நிற்காமல் மழை பெய்தது. இதன்காரணமாக குடகு பகுதியில் காவிரி ஆற்றில் தண்ணீர் சீறிபாய்ந்து ஓடியது.

    தற்போது பெய்த கனமழை காரணமாக மாண்டியாவில் உள்ள கே.ஆர்.எஸ். அணையின் மொத்த கொள்ளளவு 124.80 அடியில் அணையின் நீர்மட்டம் சற்று உயர்ந்து 82 அடி காணப்பட்டது. அணைக்கு நேற்று நீர்வரத்து வினாடிக்கு 13ஆயிரத்து 449 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

    இந்த நிலையில் மழை சற்று குறைவாக பெய்ததன் காரணமாக இன்று காலை சற்று குறைந்து 11 ஆயிரத்து 695 கனஅடியாக சரிந்தது. அணையில் இருந்து இன்று 289 கனஅடியாக தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    மைசூரில் உள்ள கபினி அணையில் 2284 அடி மொத்த கொள்ளளவு கொண்டது. தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் 2266.40 அடியாக உள்ளது.

    இதில் அணைக்கு நீர்வரத்து நேற்று 16 ஆயிரத்து 580 கனஅடி வந்து கொண்டிருந்த நிலையில் இன்று காலை சற்று குறைந்து 13 ஆயிரத்து 453 கனஅடியாக சரிந்து வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு நீர் திறப்பு இன்று 500 கனஅடி அளவில் திறந்து விடப்பட்டது.

    இரு அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் மொத்தம் 789 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.

    கர்நாடகா மாநிலத்தில் உள்ள கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள நீர் திறப்பால், பிலிக்குண்டுலு வழியாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் வழியாக செல்லும் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.

    இதன்காரணமாக ஒகேனக்கல்லில் கடந்த சில நாட்களாக குறைந்த அளவிலான இருந்த நீர்வரத்து நேற்று 700 கனஅடியாக உயர்ந்தது. கே.ஆர்.எஸ். மற்றும் கபினி ஆகிய அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளதால், ஒகேனக்கல்லுக்கு இன்று நீர்வரத்து சற்று குறைந்து 400 கனஅடியாக சரிந்தது.

    தொடர்ந்து பிலிக்குண்டுலு பகுதியில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் நீர்வரத்தை கண்காணித்து வருகின்றனர்.

    • கர்நாடக அணைகளில் இருந்து இன்று 24 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
    • கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் காவிரி ஆறு வழியாக தமிழகத்தை அடைகிறது.

    மேட்டூர்:

    கேரளாவில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்ததால் கர்நாடகத்தில் உள்ள கபினி அணை மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளில் நீர்வரத்து பலமடங்கு அதிகரித்தது. இதனால் அந்த அணைகள் நிரம்பி காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது.

    இந்நிலையில், கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் 24,286 ஆயிரம் கன அடி தண்ணீர் இன்று திறக்கப்பட்டது. கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணையில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் காவிரி ஆற்றில் தமிழகத்தை நோக்கி சீறிப்பாய்ந்து வருகிறது.

    ×