search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கபினி அணை"

    • நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்தது.
    • கர்நாடகாவில் உள்ள கபினி அணைக்கு இன்று காலை வினாடிக்கு 244 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

    சேலம்:

    மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விட்டதால் நீர்மட்டம் குறைந்தது. இதனால் கடந்த மாதம் 10-ந் தேதியுடன் பாசனத்துக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.

    இதற்கிடையே நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்தது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 52.73 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2899 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் குடிநீருக்காக வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கடந்த 30-ந் தேதி நடந்த காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் நவம்பர் 1-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 2600 கனஅடி தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டது.

    ஆனால் இந்த உத்தரவுப்படி நேற்று கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கவில்லை. அதே போல் 2-வது நாளாக இன்றும் தண்ணீர் திறக்கவில்லை.

    கர்நாடகாவில் உள்ள கபினி அணைக்கு இன்று காலை வினாடிக்கு 244 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 300 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதே போல் கிருஷ்ண ராஜசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 505 கனஅடியாக இருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 567 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டு உள்ளது.

    • கிருஷ்ணராஜசாகர் அணை நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 99.48 அடியாக இருந்தது.
    • கபினி அணைக்கு வினாடிக்கு 258 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணை நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 99.48 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 710 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து காவிரி ஆறு மற்றும் வாய்க்காலில் வினாடிக்கு 567 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதேபோல் கபினி அணைக்கு வினாடிக்கு 258 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 300 கனஅடி தண்ணீர் ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • கிருஷ்ண ராஜசாகர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 2691 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
    • கபிணி அணைக்கு வினாடிக்கு 438 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் உள்ள கிருஷ்ண ராஜசாகர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 2691 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

    அணையில் இருந்து காவிரி ஆறு மற்றும் கால்வாயில் வினாடிக்கு 4748 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதே போல் கபிணி அணைக்கு வினாடிக்கு 438 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 300 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 2 அணைகளில் இருந்தும் வினாடிக்கு 5 ஆயிரத்து 48 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    • கபிணி அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 800 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
    • கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் 101.06 அடியாக இருந்தது.

    கர்நாடகா:

    கர்நாடகாவில் உள்ள கபினி அணைக்கு இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 1864 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 800 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதேபோல் கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் 101.06 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 5ஆயிரத்து 884 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து காவிரி ஆறு மற்றும் கால்வாயில் வினாடிக்கு 3ஆயிரத்து 701 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் 100.84 அடியாக இருந்தது.
    • கடந்த திங்கட்கிழமை 2 அணைகளில் இருந்தும் வினாடிக்கு 5ஆயிரத்து 607 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

    சேலம்:

    கர்நாடகாவில் உள்ள கபினி அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 76.11 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2ஆயிரத்து 64 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதேபோல் கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் 100.84 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 5ஆயிரத்து 682 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 1688 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 2 அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் வினாடிக்கு 2ஆயிரத்து 688 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    கடந்த திங்கட்கிழமை 2 அணைகளில் இருந்தும் வினாடிக்கு 5ஆயிரத்து 607 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. நேற்று நீர்திறப்பு 5ஆயிரத்து 598 கனஅடியாக இருந்த நிலையில் இன்று 2ஆயிரத்து 688 கனஅடியாக குறைக்கப்பட்டது.

    • மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளி கிராமத்தில் கபினி அணை அமைந்துள்ளது.
    • கபினி அணைக்கு வினாடிக்கு 2,684 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

    சேலம்:

    கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி கிராமத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) அணையில் இன்று காலை நிலவரப்படி 100. 64 அடி (மொத்த கொள்ளளவு 124.80 அடி) தண்ணீர் இருந்தது.

    இந்த அணைக்கு வினாடிக்கு 5,578 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 3,598 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

    இதேபோல் மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளி கிராமத்தில் கபினி அணை அமைந்துள்ளது. கபினி அணைக்கு வினாடிக்கு 2,684 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 2,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 5,598 கனஅடி தண்ணீர் காவிரியில் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது.

    • கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 2179 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
    • கபினி அணையின் நீர்மட்டம் 73.85 அடியாக உள்ளது.

    சேலம்:

    கர்நாடக மாநிலம் கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 98 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 4156 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 2179 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    கபினி அணையின் நீர்மட்டம் 73.85 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 4565 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 2 அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் வினாடிக்கு 3179 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • கிருஷ்ண ராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 2176 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
    • கபினி அணைக்கு வினாடிக்கு 854 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் கிருஷ்ண ராஜசாகர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு4153 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 2176 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதே போல் கபினி அணைக்கு வினாடிக்கு 854 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த 2 அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் நேற்று வினாடிக்கு 3848 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் இன்று வினாடிக்கு 3176 கனஅடியாக குறைக்கப்பட்டது.

    • அணையில் இருந்து வினாடிக்கு 3ஆயிரத்து 575 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
    • நேற்று 6ஆயிரத்து 337 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    பெங்களூரு:

    கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து கடந்த 23-ந் தேதி முதல் வினாடிக்கு 5ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இன்று காலை நிலவரப்படி கிருஷ்ணராஜசாகர் அணைக்கு வினாடிக்கு 7ஆயிரத்து 451 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 3ஆயிரத்து 575 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    இதேபோல் கபினி அணைக்கு வினாடிக்கு 1180 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 2ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 2 அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் வினாடிக்கு 6ஆயிரத்து 75 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நேற்று 6ஆயிரத்து 337 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • கர்நாடகாவில் விவசாயிகள் மற்றும் பல்வேறு கன்னட அமைப்புகள் சார்பில் போராட்டம் நடந்து வருகிறது.
    • தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாகவும், கர்நாடகாவில் திறக்கப்பட்ட தண்ணீரும் வரத்தொடங்கியதாலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    சேலம்:

    மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

    இதையடுத்து காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் முறையிடப்பட்டது. இதையடுத்து தமிழகத்துக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் 15 நாட்களுக்கு திறந்து விட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் விவசாயிகள் மற்றும் பல்வேறு கன்னட அமைப்புகள் சார்பில் போராட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில் கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்து கடந்த 3 நாட்களாக வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடிக்கு மேல் காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து கடந்த 23-ந் தேதி வினாடிக்கு 5 ஆயிரத்து 473 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று 24-ந் தேதி வினாடிக்கு 6 ஆயிரத்து 338 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இன்று காலை வினாடிக்கு 6 ஆயிரத்து 605 கனஅடியாக அதிகரித்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 4105 கனஅடியும், கபினி அணையில் இருந்து வினாடிக்கு 2500 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டு வருகிறது. இதே போல் கிருஷ்ண ராஜசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 5993 கனஅடியாகவும், கபினி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2126 கன அடியாகவும் உள்ளது.

    இதற்கிடையே தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாகவும், கர்நாடகாவில் திறக்கப்பட்ட தண்ணீரும் வரத்தொடங்கியதாலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 37.85 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 8 ஆயிரத்து 181 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 6500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு நீர்வரத்து இதே அளவில் இருந்தால் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை.

    • 5 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடக்கோரி காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது.
    • கபினி அணையில் இருந்து 2,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் இன்று 1,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

    கர்நாடகத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்துவிட்டது. இதற்கிடையே காவிரியில் தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடக்கோரி காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது.

    இதையடுத்து கடந்த 3 நாட்களாக மண்டியாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) அணையில் இருந்து வினாடிக்கு 7 ஆயிரம் கன அடி வீதத்துக்கு குறையாமலும், மைசூரு மாவட்டத்தில் உள்ள கபினி அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி வீதமும் என மொத்தம் காவிரியில் தமிழகத்துக்கு வினாடிக்கு 9 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இந்நிலையில் இன்று காலை கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 7,436 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது கே.ஆர்.எஸ் அணையில் இருந்து நேற்று வினாடிக்கு 7,128 கன அடி நீர் திறந்து விடப்பட்ட நிலையில் இன்று 6, 436 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது

    அதுபோல் கபினி அணையில் இருந்து 2,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் இன்று 1,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

    இந்த 2 அணைகளில் இருந்தும் 7,436 கன அடி நீர் காவிரி ஆற்றில் தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.

    • காவிரி மேலாண்மை ஆணையம் 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விட உத்தரவு
    • காவிரியில் நேற்றை அளவைவிட இன்று அதிக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது

    காவிரி மேலாண்மை வாரியம் செப்டம்பர் 12-ந்தேதி வரை தமிழகத்திற்கு வினாடிக்கு 5,000 கனஅடி நீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

    இந்த உத்தரவு தங்களுக்கு சாதகமாக இல்லை என்று கருதிய போதிலும், உத்தரவை பின்பற்றும் வகையில் நேற்றில் இருந்து தண்ணீர் திறக்கும் பணியை தொடங்கியுள்ளது. இதை காவிரி மேலாண்மை ஆணைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதன்காரணமாக கே.ஆர்.எஸ். அணை, கபினி அணையில் இருந்து நேற்று 6398 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில், இன்று 9279 கனஅடியாக அதிகரித்துள்ளது.

    முதலில் 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விட கேட்டுக்கொள்ளப்பட்டது. அப்போது போதிய மழையின்மை காரணத்தினால் அணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால், அவ்வளது நீர் திறந்து விடமுடியாது என்று கர்நாடகா தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து 5 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளது.

    தமிழகம் மற்றும் கர்நாடகா என இரண்டு அரசுகளும் இது தொடர்பாக உச்சநீதிமன்றம் செல்ல இருப்பதாக தெரிவித்துள்ளன. கர்நாடக மாநில துணை முதல்வர் சிவக்குமார் நாளை டெல்லி செல்ல இருக்கிறார்.

    ×