என் மலர்
இந்தியா

X
கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 3176 கனஅடியாக குறைப்பு
By
Maalaimalar30 Sept 2023 11:27 AM IST

- கிருஷ்ண ராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 2176 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- கபினி அணைக்கு வினாடிக்கு 854 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் கிருஷ்ண ராஜசாகர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு4153 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 2176 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதே போல் கபினி அணைக்கு வினாடிக்கு 854 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த 2 அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் நேற்று வினாடிக்கு 3848 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் இன்று வினாடிக்கு 3176 கனஅடியாக குறைக்கப்பட்டது.
Next Story
×
X