search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிருஷ்ண ராஜசாகர் அணை"

    • கிருஷ்ண ராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரத்து 720 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
    • ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது.

    சேலம்:

    கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் ஆகிய அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 அணைகளில் இருந்தும் வினாடிக்கு 17 ஆயிரத்து 960 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. நேற்று கர்நாடக அணையில் இருந்து நீர் திறப்பு வினாடிக்கு 10 ஆயிரத்து 985 கனஅடியாக குறைக்கப்பட்டது.

    இந்த நிலையில் இன்று காலை 2 அணைகளில் இருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது கபினி அணையில் இருந்து ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த அணைக்கு நீர்வரத்து 970 கன அடியாகவும், நீர்மட்டம் 75.72 அடியாகவும் உள்ளது.

    அதே போல் கிருஷ்ண ராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரத்து 720 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த அணைக்கு நீர்வரத்து 3 ஆயிரத்து 491 கன அடியாகவும், நீர்மட்டம் 103.20 அடியாகவும் உள்ளது.

    இந்த 2 அணைகளில் இருந்தும் மொத்தம் 11 ஆயிரத்து 720 கன அடி நீர் தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.

    இந்த நீர்வரத்தை தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுவில் மத்திய நீர்வள ஆணைய அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை 11 ஆயிரத்து 22 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை வெகுவாக சரிந்து வினாடிக்கு 7 ஆயிரத்து 978 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    டெல்டா பாசனத்திற்கு அணையில் இருந்து நீர் மின் நிலையங்கள் வழியாக காவிரியில் 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    கடந்த ஒரு வார காலமாக அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருந்தது. இதனால் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வந்தது. தற்போது நீர்வரத்து குறைந்துள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் மீண்டும் சரிய தொடங்கி உள்ளது.

    நேற்று காலையில் 55.75 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் 55.48 அடியாக குறைந்தது. இனி வரும் நாட்களில் இதே நிலை நீடித்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட வாய்ப்புள்ளது.

    ×