search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கணேச மூர்த்தி"

    • கணேச மூர்த்தி துணிச்சலானவர், மன உறுதி கொண்டவர்.
    • கணேச மூர்த்தி இறந்துவிட்டார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை.

    கோவை :

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கோவை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    கணேசமூர்த்தியும், நானும் உயிருக்கு உயிராக பழகினோம். அவர் கொள்கை பிடிப்புடன் பணியாற்றியவர். கொங்கு மண்டலத்தின் சிங்கமாக இருந்தவர். அவர் இப்படி ஒரு முடிவுக்கு வருவார் என்று நினைக்கவில்லை. எனக்கு இடி விழுந்தது போல் இருக்கிறது.

    பாராளுமன்ற தேர்தலில் கூட்டணியில் 2 சீட்டுகள் கிடைத்தால் நானும், துரையும் போட்டியிடுகிறோம் என்றார். ஒரு சீட் கிடைத்தால் துரையே நிற்கட்டும் என்றார். அதன்பிறகும் அவர் மகிழ்ச்சியாக தான் இருந்தார்.

    எம்.பி. சீட் கிடைக்காததால் இப்படி ஒரு முடிவை அவர் எடுத்தார் என்று கூறப்படுவதில் துளி கூட உண்மை இல்லை. என்னை அவர் நட்டாற்றில் விட்டு விட்டு போவது போல செல்வார் என நினைக்கவில்லை. அவர் மறைந்த செய்தியை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மனஉறுதி கொண்டவர் மருந்து குடித்தார் என்பதை நம்ப முடியவில்லை. அவரது மன உளைச்சலுக்கு காரணம் அவரது குடும்பத்தினரிடம் கேட்டால் தான் தெரியும். கணேசமூர்த்தி என்றும் திராவிட இயக்கத்தின் அழியா நட்சத்திரமாக இருப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஈரோடு தொகுதி மக்களவை உறுப்பினரும் மதிமுகவின் மூத்த தலைவருமான கணேச மூர்த்தி உயிரிழந்த செய்திகேட்டு துயருற்றேன்.
    • மறைந்த கணேசமூர்த்தியின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

    சென்னை:

    ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி இன்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட கணேச மூர்த்தியின் உடலானது மாலை 5 மணியளவில் அவரது சொந்த ஊரான குமாரவலசு பகுதியில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

    இதையடுத்து கணேசமூர்த்தியின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    ஈரோடு தொகுதி மக்களவை உறுப்பினரும் மதிமுகவின் மூத்த தலைவருமான கணேச மூர்த்தி உயிரிழந்த செய்திகேட்டு துயருற்றேன்.

    அன்னாரை இழந்துவாடும் அவரது குடும்பத்தாருக்கும், மதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த கணேசமூர்த்தியின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என கூறியுள்ளார்.

    • மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக தகவல்.
    • மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் உயிரிழந்தார்.

    ஈரோடு மக்களவை தொகுதி எம்.பி.யாக இருந்தவர் கணேச மூர்த்தி. 2019-ம் ஆண்டு மதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இவர் மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

    மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் 72 மணி நேர சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை கணேச மூர்த்தி காலமானார். சிகிச்சை பெற்று வந்த நிலையில் மாரடைப்பால் உயிர் பிரிந்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக கடந்த 24 -ந்தேதி கணேச மூர்த்தியை பார்ப்பதற்காக அவரது மகன் கபிலன் வீட்டிற்கு சென்றார். அப்போது கணேச மூர்த்தி மயக்க நிலையில் இருந்தார்.

    இதை பார்த்ததும் அதிர்ச்சியான அவர் உடனடியாக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தார். அப்போது அவர் தென்னை மரத்துக்கு பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மாத்திரையை தின்று தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. உடனடியாக அவர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். தொடர்ந்து அவருக்கு எக்மோ கருவி பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வரப்பட்டது. இந்த நிலையில்தான் இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

    ×