search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒர்க் ஷாப்"

    • புருேஷாத்தம்மன் டூவீலர் ஒர்க் ஷாப் வைத்து நடத்தி வருகிறார்.
    • 2.50 லட்சம் பணம் மற்றும் மோட்டார் சைக்கிள் திருடியது தெரியவந்தது.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே எம்.ஏரிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜாராமன். இவரது மகன் புருேஷாத்தம்மன் (வயது 45) இவர் பண்ருட்டி திருவதிகை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் டூவீலர் ஒர்க் ஷாப் வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு புருேஷாத்தம்மன் ஒர்க் ஷாப்பை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.பின் நேற்று காலை ஒர்க் ஷாப் வந்து பார்த்து போது மர்ம நபர்கள் ஒர்க் ஷாப் கடையின் பூட்டை உடைத்து ஒர்க் ஷாப்பில் இருந்த 2.50 லட்சம் பணம் மற்றும் மோட்டார் சைக்கிள் திருடியது தெரியவந்தது.

    இதுகுறித்து பண்ருட்டி போலீசில் புருேஷாத்தம்மன் கொடுத்த புகாரின்பேரில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், குற்றப்பிரிவு சப் -இன்ஸ்பெக்டர் தங்கவேல் ஆகியோர் வழக்குபதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். மேலும் கடலூரில் இருந்து மோப்ப நாய் கூப்பர், கைரேகை நிபுணர் ஸ்ரீதர் தலைமையில் தடயங்கள் சேகரித்தனர்.

    • 2 மோட்டார் சைக்கிள் எரிந்து நாசம்
    • தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் இருளப்பபுரத்தை சேர்ந்தவர் மாரியப்பன்.

    இவர் ஏ.ஆர். கேம்ப் ரோட்டில் லாரி ஒர்க் ஷாப் வைத்துள்ளார். நேற்று காலை வழக்கம் போல் மாரியப்பன் ஒர்க் ஷாப்பை திறந்து பணியில் ஈடுபட்டார். வேலை முடிந்து இரவு 7.45 மணிக்கு ஒர்க் ஷாப்பை பூட்டி விட்டு மாரியப்பன் வீட்டிற்கு சென்றார். இரவு 9.30 மணி அளவில் அவரது ஒர்க் ஷாப்பில் தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்த அந்த பகுதி மக்கள் மாரியப்பனுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக மாரியப்பன் சம்பவ இடத்திற்கு வந்தார்.

    நாகர்கோவில் தீய ணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது லாரி ஒர்க் ஷாப்பில் நிறுத்தப்பட்டு இருந்த 2 மோட்டார் சைக்கிள்க ளும் அங்கு நின்ற லாரியும் தீயில் எரிந்தது.தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

    இதுகுறித்து நேசமணி நகர் போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீ சார் சம்பவ இடத் திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள். முதல் கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக தீப்பிடித்திருப்பது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    லாரி ஒர்க் ஷாப்பில் நிறுத்தப்பட்டு இருந்த 2 மோட்டார் சைக்கிள்கள் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நேற்று முன்தினம் இரவு ஒர்க் ஷாப் பினை பூட்டி விட்டு நேற்று காலை ஒர்க் ஷாப் திறக்க வந்த போது முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது
    • அப்பகுதி சாலை ஓரங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

    கன்னியாகுமரி :

    இரணியல் அருகே திங்கள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மோகன் (வயது 62). இவர் பேருந்து பணிமனை அருகே கார் பழுது பார்க்கும் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார் நேற்று முன்தினம் இரவு ஒர்க் ஷாப் பினை பூட்டி விட்டு நேற்று காலை ஒர்க் ஷாப் திறக்க வந்த போது முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே நின்ற வெள்ளை நிற அம்பாசிடர் கார் திருட்டு போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து இரணியல் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இரணியல் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர் மூர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதி சாலை ஓரங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

    ×