search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மோட்டோ ஏ10"

    கம்யூடெக்ஸ் 2018 நிகழ்வில் குவால்காம் நிறுவனம் தனது புத்தம் புதிய ஸ்னாப்டிராகன் 850 பிராசஸரை அறிமுகம் செய்துள்ளது. #Windows10 #Snapdragon850
    தைபே:

    தாய்வான் நாட்டு தலைநகரில் நடைபெறும் கம்ப்யூடெக்ஸ் 2018 நிகழ்வில் குவால்காம் நிறுவனம் ஸ்னாப்டிராகன் 850 மொபைல் சிப்செட்-ஐ அறிமுகம் செய்தது. விண்டோஸ் 10 சாதனங்களுக்கான உருவாக்கப்பட்டு இருக்கும் புதிய பிராசஸர் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும் என குவால்காம் தெரிவித்துள்ளது.

    10என்எம் சார்ந்து உருவாக்கப்பட்டு இருக்கும் ஸ்னாப்டிராகன் 850 சிப்செட் க்ரியோ 385 சிபுயு மற்றும் 8 கோர்களையும் அதிகபட்சம் 2.95 ஜிகாஹெர்ட்ஸ் கிளாக் வேகம் கொண்டிருக்கிறது. இந்த சிப்செட் செயல்திறன் வேகத்தை 30 சதவிகிதம் வரை அதிகரித்தும், பேட்டரி திறனை 20 சசதவிகிதம் வரை அதிகரித்தும், 20 சதவிகித வேகமான ஜிகாபிட் எல்டிஇ வேகம் வழங்குகிறது. 

    புதிய குவால்காம் ஸ்னாப்டிராகன் 850 சிப்செட் அதிக ஃபிடிலிட்டி பில்ட்-இன் ஆடியோ, விர்ச்சுவல் சரவுன்டு சவுன்டு,  aptX ஹெச்டி சப்போர்ட் கொண்டுள்ளது. இத்துடன் அல்ட்ரா ஹெச்டி தரத்தில் அதிக துல்லியமான தரவுகளை பிளேபேக் செய்யவும், 4K வீடியோ பதிவு செய்யும் வசதி உள்ளிட்டவற்றை வழங்குகிறது.



    செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லெர்னிங் தொழில்நுட்பங்களுக்கு பெரும்பாலான நிறுவனங்கள் முக்கியத்துவம் அளித்து வரும் நிலையில், குவால்காம் தனது புதிய பிராசஸரில் இதற்கான வசதியை வழங்குகிறது. இத்துடன் மைக்ரோசாஃப்ட் மெஷின் லெர்னிங் எஸ்டிகே சேவையை பயன்படுத்த டெவலப்பர்களுக்கு வழி செய்கிறது.  

    ஸ்னாப்டிராகன் 850 பிராசஸரில் குவால்காம் நிறுவனம் ஸ்மார்ட்போன் உதிரி பாகங்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு புதிய அமைப்புகள் மூலம் மெல்லிய மற்றும் அதிநவீன வடிவமைப்புகளுக்கு வழி செய்கிறது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 850 சிப்செட் கொண்டு இயங்கும் விண்டோஸ் 10 சாதனங்கள் வரும் மாதங்களில் சந்தையில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஹெச்பி, அசுஸ் மற்றும் இதர நிறுவனங்கள் முதற்கட்ட ஆல்வேஸ் கனெக்ட்டெட் கணினிகளை வெளியிட்ட நிலையில், குவால்காம் ஸ்னாப்டிராகன் 850 கொண்டு வெளியாகும் சாதனங்களை எந்த நிறுவனங்கள் வெளியிடும் என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
    ஹூவாயின் ஹானர் பிரான்டு தனது புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இதன் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    லண்டன்:

    ஹூவாய் ஹானர் பிரான்டு புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் லண்டனில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. ஹானர் 10 என அழைக்கப்படும் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் முன்னதாக சீனாவில் அறிமுகமானது. 5.84 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் 2.5D வளைந்த கிளாஸ் நாட்ச் ரக டிஸ்ப்ளே, 19:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, ஆக்டா-கோர் ஹைசிலிகான் கிரின் 970 சிப்செட், i7 கோ-பிராசஸர், ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் EMUI 8.1 வழங்கப்பட்டுள்ளது.

    செயற்கை நுண்ணறிவு 2.0 தொழில்நுட்பம் கொண்டு இயங்கும் புதிய ஸ்மார்ட்போனின் வடிவைப்பு ஹூவாய் P20 போன்றே காட்சியளிக்கிறது. புகைப்படங்களை எடுக்க 16 எம்பி + 24 எம்பி பிரைமரி கேமரா செட்டப், முன்பக்கம் 24 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. புதிய ஹானர் 10 ஸ்மார்ட்போனில் ஹூவாய் நிறுவனத்தின் அதிநவீன AI (செயற்கை நுண்ணறிவு) 2.0 தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் முன்பக்க கேமராவினை பயன்படுத்தி அழகிய போர்டிரெயிட் செல்ஃபிக்களை வழங்கும்.

    3400 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் ஹானர் 10 ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, டூயல் சிம் ஸ்லாட் மற்றும் டூயல் 4ஜி வோல்ட்இ வசதி கொண்டிருக்கிறது. இதன் அல்ட்ராசோனிக் கைரேகை சென்சார் விரல்கள் ஈரமாக இருந்தாலும் வேலை செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 



    ஹானர் 10 சிறப்பம்சங்கள்:

    - 5.84 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் 1080x2240 பிக்சல் எல்சிடி, 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் ஹைசிலிகான் கிரின் 970 சிப்செட்
    - மாலி-G72 MP12 GPU
    - 6 ஜிபி ரேம்
    - 16 எம்பி + 24 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.8
    - 24 எம்பி செல்ஃபி கேமரா
    - 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம் ஸ்லாட்
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
    - அல்ட்ராசோனிக் கைரேகை சென்சார்
    - 4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
    - 3400 எம்ஏஹெச் பேட்டரி
    - குவிக் சார்ஜிங் வசதி

    இந்தியாவில் ஹானர் 10 ஸ்மார்ட்போன் ஃபேன்டம் புளு மற்றும் மிட்நைட் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கும் ஹானர் 10 விலை ரூ.32,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    ஹானர் 10 அறிமுக சலுகைகள்:

    - ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்யும் போது ரூ.5000 வரை தள்ளுபடி
    - வட்டியில்லா மாத தவனை முறை வசதி
    - தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது 10% உடனடி தள்ளுபடி
    - ரிலையன்ஸ் ஜியோ சார்பில் ரூ.1200 கேஷ்பேக், 100 ஜிபி கூடுதல் டேட்டா மற்றும் ரூ.3300 மதிப்புடைய வவுச்சர்கள் வழங்கப்படுகிறது.
    சாம்சங் நிறுவன ஸ்மார்ட்போன்களில் இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார் தொழில்நுட்பம் அதிகம் எதிர்பார்க்கப்படும் நிலையில், கேலக்ஸி எஸ்10 மாடலில் இது வழங்கப்படும் என கூறப்படுகிறது.
    புதுடெல்லி:

    ஸ்மார்ட்போன் சந்தையில் ஹூவாய், விவோ போன்ற நிறுவனங்கள் இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார் தொழில்நுட்பத்தை வழங்கி வரும் நிலையில், சாம்சங் ஸ்மார்ட்போன்களில் இந்த தொழில்நுட்பம் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. 

    சாம்சங் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களின் பத்தாவது ஆண்டு விழாவை சிறப்பிக்கும் மாடலில் இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. முன்னதாக வெளியான தகவல்களில் சாம்சங் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனில் இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார் வழங்கப்படலாம் என கூறப்பட்டது, எனினும் சாம்சங் கேலக்ஸி எஸ்10 மாடலில் தான் இந்த தொழில்நுட்பத்தை சாம்சங் வழங்கும் என தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார் வழங்குவது குறித்த இறுதி முடிவினை சாம்சங் விரைவில் எடுக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில், சாம்சங் முடிவு செய்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும் உதிரிபாகங்களை வழங்கும் நிறுவனங்களிடம் கேலக்ஸி நோட் 9 மாடலில் இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார் வழங்கும் முடிவை திரும்ப பெற்றுவிட்டதாக அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது. 


    கோப்பு படம்

    சர்வதேச சந்தையில் சீன நிறுவனங்கள் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த துவங்கிவிட்ட நிலையில், சாம்சங் சாதனங்களில் இந்த அம்சம் முற்றிலும் சிறப்பாக வேலை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங் நிறுவன ஸ்மார்ட்போன்களில் வழங்க அல்ட்ராசோனிக் இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சாரை உருவாக்கி வருவதாகவும், இது தற்சமயம் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை விட மிக துல்லியமாக இயங்கும் என கூறப்படுகிறது. 

    சாம்சங் உருவாக்கி வரும் தொழில்நுட்பம் அல்ட்ராசோனிக் பல்ஸ்-ஐ டிரான்ஸ்மிட் செய்யும். ஒவ்வொரு கைரேகையிலும் இருக்கும் மிக நுனுக்கமான தகவல்களை அதிவேகமாக சேகரித்து சென்சாருக்கு அனுப்பும். இதனால் கூடுதல் தகவல்களை டிரான்ஸ்மிட் செய்து கைரேகையை மிக நுனுக்கமாக பிரதிபலிக்கும். 

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் 2019 ஜனவரி மாதம் நடைபெற இருக்கும் சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சம் குறித்த தகவல்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.
    புதுடெல்லி:

    சாம்சங் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் குறித்த பெரும்பாலான தகவல்கள் இணையத்தில் கசிந்து வரும் நிலையில், இந்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் வழங்கப்பட இருக்கும் மிகமுக்கிய அம்சம் குறித்த விவரங்கள் தெரியவந்துள்ளது.

    ட்விட்டரில் ஐஸ் யுனிவர்ஸ் வெளியிட்டிருக்கும் தகவல்களின் படி கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனில் இன்ஸ்கிரீன் கைரேகை சென்சார் வழங்கப்படும் என தகவல்கள் வெளியான நிலையில், புதிய சாம்சங் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் வழக்கமான கைரேகை செனசார் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

    இம்முறை கிடைத்திருக்கும் தகவல்கள் ஐஸ் யுனிவர்ஸ் மூலம் வெளியாகியுள்ளதால், இது அதிக நம்பகத்தன்மை கொண்டதாக பார்க்கப்படுகிறது. முன்னதாக கேலக்ஸி நோட் 8 உண்மையான புகைப்படங்கள், கேலக்ஸி எஸ்8 மற்றும் கேலக்ஸி எஸ்9 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களின் விவரங்களை ஐஸ் யுனிவர்ஸ் மூலம் சரியாக வெளியனது குறிப்பிடத்தக்கது.


    புகைப்படம்: நன்றி DBSDESIGNING

    புதிய ஸ்மார்ட்போனில் இன்டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படாததற்கான காரணங்கள் அறியப்படவில்லை. எனினும் முந்தைய கேலக்ஸி நோட் 8 மற்றும் கேலக்ஸி எஸ்9 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களில் இந்த தொழில்நுட்பம் எதிர்பார்த்த அளவு சீராக வேலை செய்யவில்லை என்பதால் வழங்கப்படாமல் இருந்தது. இதே காரணத்திற்காகவே புதிய ஸ்மார்ட்போனில் இருந்தும் இந்த தொழில்நுட்பம் நீக்கப்பட்டிருக்கலாம்.

    விவோ போன்ற நிறுவனங்கள் தங்களது ஸ்மார்ட்போனில் இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார் தொழி்ல்நுட்பத்தை வழங்கும் போது சாம்சங் வழங்க ஏன் தாமதமாகிறது என்ற கேள்வி பெருமளவு எழுகிறது. இதற்கு முக்கிய காரணமாக விவோ தனது X20 பிளஸ் UD ஸ்மார்ட்போனினை குறைந்த அளவு தயாரிப்பது தான் கூறப்படுகிறது. 

    சாம்சங் நிலையில் இந்த தொழில்நுட்பத்தை வழங்குவது பெரிய திட்டமாகும். இதனால் தயாரிப்பு பணிகளில் விவோ போன்று சாம்சங் அதிரடி முடிவுகளை எடுக்க முடியாத சூழலில் உள்ளதாக கூறப்படுகிறது. 

    எதுவானாலும் கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போனில் சாம்சங் இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார் தொழில்நுட்பத்தை வழங்க இருப்பது சமீபத்தில் வெளியான தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது எஸ் சீரிஸ் 10-வது ஆண்டு விழாவை குறிக்கும் என்பதால், இந்த தொழில்நுட்பம் வழங்கப்பட அதிக வாய்ப்புகள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஏற்கனவே வெளியான கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனின் கான்செப்ட் வீடியோவை கீழே காணலாம்..,


    ×