search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Honor 10"

    சீன ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் சமீபத்திய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் விற்பனை துவங்கிய மூன்று மாதங்ளில் முப்பது லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #Honor10



    ஹூவாய் பிரான்டு ஹானர் சமீபத்திய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான ஹானர் 10 சர்வதேச சந்தையில் முப்பது லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஸ்மார்ட்போன் அறிமுகமாகி மூன்றே மாதங்களில் இத்தகைய மைல்கல் எட்டப்பட்டு இருப்பதாக ஹானர் தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக சீனாவில் வெளியிடப்பட்ட ஹானர் 10 பின் இரண்டு மாதங்கள் கழித்து லண்டனில் நடைபெற்ற விழாவில் சர்வதேச சந்தையில் வெளியிடப்பட்டது.

    ஹானர் குளோபல் அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில் ஹானர் 10 ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் சுமார் முப்பது லட்சம் யூனிட்கள் விற்பனையாகியுள்ளதை அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது. மே மாதத்தில் சுமார் பத்து லட்சம் ஹானர் 10 யூனிட்களை விற்பனை செய்ததை அந்நிறுவனம் அறிவித்திருந்தது. அந்த வகையில் இதுவரை மாதம் சுமார் பத்து லட்சம் ஹானர் 10 யூனிட்களை விற்பனை செய்திருக்கிறது.

    ஆன்லைன் தளத்தில் அதிகம் விற்பனையான ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் என்ற வகையில் ஹானர் 10 சாதனை படைத்திருந்தது. ரஷ்யாவில் RUB 25,000-30,000 (இந்திய மதிப்பில் ரூ.27,500-ரூ.33,000) விலையில் விற்பனையாகும் ஹானர் 10 அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக இருப்பதாக XDA டெவலப்பர்கள் வெளியிட்டிருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று ஃபிரான்ஸ் நாட்டிலும் ஹானர் 10 ஸ்மார்ட்போன் அதிகம் விற்பனையாகி வருகிறது.



    ஹானர் 10 சிறப்பம்சங்கள்:

    - 5.84 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் 1080x2240 பிக்சல் எல்சிடி, 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் ஹைசிலிகான் கிரின் 970 சிப்செட்
    - மாலி-G72 MP12 GPU
    - 6 ஜிபி ரேம்
    - 16 எம்பி + 24 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.8
    - 24 எம்பி செல்ஃபி கேமரா
    - 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம் ஸ்லாட்
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
    - அல்ட்ராசோனிக் கைரேகை சென்சார்
    - 4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
    - 3400 எம்ஏஹெச் பேட்டரி
    - க்விக் சார்ஜிங் வசதி

    இந்தியாவில் ஹானர் 10 ஸ்மார்ட்போன் ஃபேன்டம் புளு மற்றும் மிட்நைட் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. 
    இந்தியாவில் இதன் விலை ரூ.32,999 என நிர்ணயம் செய்யப்பட்டு, ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது. 

    சீனாவில் ஹானர் 10 CNY 2,599 (இந்திய மதிப்பில் ரூ.26,600) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஐரோப்பாவில் இதன் விலை 399.90 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.31,800) என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. #Honor10 #smartphone
    ஹூவாயின் ஹானர் பிரான்டு தனது புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இதன் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    லண்டன்:

    ஹூவாய் ஹானர் பிரான்டு புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் லண்டனில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. ஹானர் 10 என அழைக்கப்படும் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் முன்னதாக சீனாவில் அறிமுகமானது. 5.84 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் 2.5D வளைந்த கிளாஸ் நாட்ச் ரக டிஸ்ப்ளே, 19:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, ஆக்டா-கோர் ஹைசிலிகான் கிரின் 970 சிப்செட், i7 கோ-பிராசஸர், ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் EMUI 8.1 வழங்கப்பட்டுள்ளது.

    செயற்கை நுண்ணறிவு 2.0 தொழில்நுட்பம் கொண்டு இயங்கும் புதிய ஸ்மார்ட்போனின் வடிவைப்பு ஹூவாய் P20 போன்றே காட்சியளிக்கிறது. புகைப்படங்களை எடுக்க 16 எம்பி + 24 எம்பி பிரைமரி கேமரா செட்டப், முன்பக்கம் 24 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. புதிய ஹானர் 10 ஸ்மார்ட்போனில் ஹூவாய் நிறுவனத்தின் அதிநவீன AI (செயற்கை நுண்ணறிவு) 2.0 தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் முன்பக்க கேமராவினை பயன்படுத்தி அழகிய போர்டிரெயிட் செல்ஃபிக்களை வழங்கும்.

    3400 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் ஹானர் 10 ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, டூயல் சிம் ஸ்லாட் மற்றும் டூயல் 4ஜி வோல்ட்இ வசதி கொண்டிருக்கிறது. இதன் அல்ட்ராசோனிக் கைரேகை சென்சார் விரல்கள் ஈரமாக இருந்தாலும் வேலை செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 



    ஹானர் 10 சிறப்பம்சங்கள்:

    - 5.84 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் 1080x2240 பிக்சல் எல்சிடி, 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் ஹைசிலிகான் கிரின் 970 சிப்செட்
    - மாலி-G72 MP12 GPU
    - 6 ஜிபி ரேம்
    - 16 எம்பி + 24 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.8
    - 24 எம்பி செல்ஃபி கேமரா
    - 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம் ஸ்லாட்
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
    - அல்ட்ராசோனிக் கைரேகை சென்சார்
    - 4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
    - 3400 எம்ஏஹெச் பேட்டரி
    - குவிக் சார்ஜிங் வசதி

    இந்தியாவில் ஹானர் 10 ஸ்மார்ட்போன் ஃபேன்டம் புளு மற்றும் மிட்நைட் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கும் ஹானர் 10 விலை ரூ.32,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    ஹானர் 10 அறிமுக சலுகைகள்:

    - ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்யும் போது ரூ.5000 வரை தள்ளுபடி
    - வட்டியில்லா மாத தவனை முறை வசதி
    - தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது 10% உடனடி தள்ளுபடி
    - ரிலையன்ஸ் ஜியோ சார்பில் ரூ.1200 கேஷ்பேக், 100 ஜிபி கூடுதல் டேட்டா மற்றும் ரூ.3300 மதிப்புடைய வவுச்சர்கள் வழங்கப்படுகிறது.
    ×