search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏவுகணை தாக்குதல்"

    • உக்ரைன் மின் உற்பத்தி நிலையங்களை குறி வைத்து ரஷியா 85 ஏவுகணைகளை வீசியது.
    • உக்ரைனின் பல நகரங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது

    கீவ்:

    உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியா, அந்நாட்டு முக்கிய பகுதிகளில் தொடர்ந்து போரிட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று ரஷிய படைகள் குறைந்த பட்சம் 85 ஏவுகணைகளை வீசியதாகவும், அவற்றில் பெரும்பாலானவை உக்ரைன் மின் உற்பத்தி கட்டமைப்புகளை தாக்கியதில் பல நகரங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது என்று அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார். எனினும் நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்து இழந்த அனைத்தையும் மீட்டெடுப்போம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ரஷிய ஏவுகணைத் தாக்குதல்கள் பழிவாங்கும் மற்றொரு முயற்சி என்றும், குளிர் காலத்திற்குள் உக்ரைன் மின் உற்பத்தி மற்றும் எரிசக்தி நிலைகளுக்கு அதிகபட்ச சேதத்தை ஏற்படுத்த ரஷியா முயற்சிக்கும் என்றும் உக்ரைன் மந்திரி ஹெர்மன் ஹலுஷெங்கோ குறிப்பிட்டுள்ளார்.

    இந்நிலையில் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி வீசப்பட்ட ரஷிய ஏவுகணை ஒன்று தாக்கியதில் உக்ரைன் அண்டை நாடான மால்டோவா பாதிக்கப்பட்டது. உக்ரைனில் இருந்து அந்நாட்டிற்கு செல்லும் முக்கிய மின்வழி தடம் இந்த தாக்குதலால் சேதம் அடைந்ததால், மின்வெட்டு ஏற்பட்டதாக அந்நாடு அறிவித்துள்ளது.

    இதனிடையே ரஷிய வீசிய ஏவுகணை ஒன்று குறி தவறி போலந்து நாட்டின் ப்ரெஸெவோடோவா கிராமத்தில் தானியங்களை உலர்த்தும் பகுதியை தாக்கியது. இதில் இரண்டு பேர் உயிரிழந்ததாக அமெரிக்க உளவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    எனினும் ரஷிய ஏவுகணை தாக்குதல் குறித்து போலந்து அரசு செய்தித் தொடர்பாளர் உறுதிபடுத்தவில்லை. ஆனால் போலந்து உயர்மட்டத் தலைவர்களின் அவசர கூட்டம் நடைபெற உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.
    • வட கொரியா ஒரே நாளில் 8 ஏவுகணைகளை ஏவி பரிசோதித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சியோல் :

    வட கொரியா ஒரே நாளில் 8 ஏவுகணைகளை ஏவி பரிசோதித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களையும், உலக நாடுகளின் எதிர்ப்பையும் கண்டுகொள்ளாமல் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. மேலும், தென்கொரியாவுடன் போர் பயிற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அமெரிக்காவுக்கு அதிர்ச்சி வைத்தியமாகவும் இந்த சோதனைகள் அமைந்துள்ளன.

    இந்த ஏவுகணை சோதனைகளையொட்டி அதன் அண்டை நாடுகளான தென்கொரியாவும், ஜப்பானும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கி உள்ளன. இதனிடையே, வடகொரியாவின் ஏவுகணை சோதனைகளுக்கு பதிலடியாக அமெரிக்கா மற்றும் தென்கொரியா, 8 ஏவுகணைகளை சோதனை செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    அதன்படி, இன்று அதிகாலை தென் கொரியாவும் அமெரிக்காவும் தென் கொரியாவின் கிழக்கு கடற்கரையில் இருந்து எட்டு நிலப்பரப்பு ஏவுகணைகளை ஏவியது என்று தென் கொரிய பாதுகாப்பு அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். திங்கள்கிழமை அதிகாலை 4.45 மணிக்கு தொடங்கி சுமார் 10 நிமிடங்களுக்கு தென் கொரியா மற்றும் அமெரிக்க ராணுவத்தினர் ஏவுகணைகளை சோதனைகளை நடத்தினர்.

    ×