search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உரிமையாளர் மீது"

    • அழுத்தம் தாங்காமல் பாய்லர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
    • தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து உரிமையாளர் பாலகிருஷ்ணன் மீது 2 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு வெண்டி பாளையம் பழைய பாலம் அருகே தனியார் பால் பொருள் தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளர் சோலார் ஈ.பி.காலனியை சேர்ந்த பாலகிருஷ்ணன் ஆவார்.

    இங்கு பால்கோவா, பன்னீர் உள்ளிட்ட பால் பொருள் தயாரிக்கப்படுகிறது. பாலும் விற்பனை செய்யப்படுகிறது.

    இங்கு 4 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நேற்று காலை 6 மணி அளவில் மலையம் பாளையத்தை அடுத்த கருமாண்டம் பாளையத்தை சேர்ந்த ராமன் (70) என்பவர் பாய்லர் வெப்பத்தை அதிகரிக்க செய்தார்.

    அப்போது அழுத்தம் தாங்காமல் பாய்லர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

    இதில் சம்பவ இடத்திலேயே ராமன் பரிதாபமாக இறந்தார். பாய்லர் வெடித்ததில் பண்ணை மேற்கூரை ஒரு பகுதியில் விரிசல் விழுந்தது. பொருட்களும் சிதறி கிடந்தன.

    சம்பவ இடத்துக்கு தாலுகா போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் ராமன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து உரிமையாளர் பாலகிருஷ்ணன் மீது கவனக்குறைவாக செயல்பட்டு விபத்து ஏற்பட வைத்தல் 287, 304 ஏ ஆகிய 2 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

    இந்நிலையில் நேற்று மாலை பிரேத பரிசோதனை முடிந்து ராமன் உடல் அவரது உறவினருக்கு ஒப்படைக்கப்பட்டது.

    ஆனால் அவரது உறவினர்கள் தனியார் பால் தயாரிக்கும் நிறுவனம் உரிய நிவாரணத் தொகை வழங்கினால் மட்டுமே ராமனின் உடலை வாங்குவோம் எனக் கூறி உடலை வாங்க மறுத்து விட்டனர்.

    இதனால் அவரது உடல் தொடர்ந்து அரசு மருத்துவமனையில் உள்ளது. இன்று 2-வது நாளாக போலீசார் ராமனின் உறவினரிடம் இது குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கம்ப்யூட்டர் சென்டர் வந்த சில மர்ம நபர்கள் அவர் மீது தாக்குதல் நடத்தினர்.
    • இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை பஸ் நிலையம் எதிரில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வருபவர் தமிழ்ச்செல்வன். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அங்கு வந்த சில மர்ம நபர்கள் அவர் மீது தாக்குதல் நடத்தினர். மேலும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

    இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அழகு முத்து பாண்டியன் (39) என்பவரை போலீசார் கைது செய்து பெருந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

    மேலும் அவர் மீது தாக்குதல் நடத்தியது பல்லடம் பகுதியைச் சேர்ந்த கனகராஜ், விக்கி, முத்து என விசாரணையில் தெரியவந்தது. அவர்கள் தலை மறைவாகி விட்டனர். அவர்கள் 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    ×