கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளர் மீது தாக்குதல் நடத்திய வாலிபர் கைது

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கம்ப்யூட்டர் சென்டர் வந்த சில மர்ம நபர்கள் அவர் மீது தாக்குதல் நடத்தினர். இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளர் மீது தாக்குதல் நடத்திய வாலிபர் கைது
Published on

சென்னிமலை:

சென்னிமலை பஸ் நிலையம் எதிரில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வருபவர் தமிழ்ச்செல்வன். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அங்கு வந்த சில மர்ம நபர்கள் அவர் மீது தாக்குதல் நடத்தினர். மேலும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அழகு முத்து பாண்டியன் (39) என்பவரை போலீசார் கைது செய்து பெருந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் அவர் மீது தாக்குதல் நடத்தியது பல்லடம் பகுதியைச் சேர்ந்த கனகராஜ், விக்கி, முத்து என விசாரணையில் தெரியவந்தது. அவர்கள் தலை மறைவாகி விட்டனர். அவர்கள் 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com