search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உபகரணங்கள்"

    • காப்பாற்றுதல் மற்றும் முதலுதவி அளித்தல் பற்றி தத்ரூபமாக விளக்கம் அளிக்கப்பட்டது.
    • தீயணைப்பு வீரர்கள் மிதக்கும் கருவிகளை கொண்டு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தினர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் மேற்கொண்டுள்ள பேரிடர் மேலாண்மை குறித்த முன்னேற்பாடுகள் பணிகள் நடந்தது.

    பாப்பாக்கோவில் பகுதியில் உள்ள கோவில் குளத்தில் தத்ரூபமாக நடைபெற்ற மீட்பு ஒத்திகையை தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் பிரபாகர், நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.

    ஐந்து 108 வாகனங்கள், 4 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு சைரன் சத்தம் ஒலிக்க பரபரப்பாக நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சியில் நீரில் மூழ்கியவர்களை ரப்பர் படகு உள்ளிட்ட உபகரணஙகள் மூலம் வெள்ளத்தில் சிக்கிய வர்களை காப்பாற்றுதல் மற்றும் முதலுதவி அளித்தல் பற்றி தத்ரூபமாக விளக்கம் அளிக்கப்பட்டது.

    ரத்த காயங்களுடன் அடிபட்டவர்களை தூக்குதல், மூச்சுக்குழல் அடைப்பு ஏற்பட்டவருக்கு முதலுதவி அளிப்பது, வெள்ளத்தில் சிக்கிய–வர்களை கண்டுபிடித்து காயத்தின் தன்மைக்கு ஏற்றவாறு கைகளில் வண்ண ரிப்பன்களை கட்டுதல் போன்ற மீட்பு நடவடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன.

    ஸ்கூபா போன்ற அதி நவீன மிதக்கும் கருவிகளை கொண்டு நடந்த ஒத்திகை நிகழ்ச்சியில் தண்ணீரில் தத்தளித்த கால்நடையை காப்பாற்றி கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    பின்னர் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மையின் கீழ் நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆப்தமித்ரா திட்டத்தின்கீழ் பயிற்சி அளிக்கப்பட்ட தன்னார்வலர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அவசர கால பெட்டக உபகரணங்களை ஆய்வு செய்த வருவாய் நிர்வாக ஆணையர் பிரபாகர் ஒத்திகை நிகழ்வில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் தன்னார்வளர்களை பாராட்டினார்.

    ஏராளமான வாகனங்கள் சைரன் ஒளி எழுப்பி நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சியால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • மாற்றுத்திறன் மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி வட்டார வள மையத்தில் நடந்தது.
    • நிகழ்ச்சியில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் செண்பக வடிவு, வட்டார ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்து மாற்று திறன் மாணவர்களுக்கான உபகரணங்களை வழங்கினர்.

    ராசிபுரம்:

    ராசிபுரம் அருகே உள்ள நாமகிரிப்பேட்டை வட்டார வள மையத்திற்கு உட்பட்ட பள்ளிகளில் பயின்று வரும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி வட்டார வள மையத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் செண்பக வடிவு, வட்டார ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்து மாற்று திறன் மாணவர்களுக்கான உபகரணங்களை வழங்கினர். நிகழ்ச்சியில் சிறப்பு பயிற்றுநர்கள் அருள்ராஜா, சரவணன், இயன்முறை மருத்துவர் சுஷ்மிதா ஆகியோர் உபகரணங்களின் பயன்பாட்டினை பெற்றோர்களுக்கு விளக்கிக் கூறினர். ஆசிரியர் பயிற்றுநர்கள் முருகேசன், சியாமளா, பகல் நேர பராமரிப்பு மைய ஆசிரியர் வளர்மதி, உதவியாளர் வரதம்மாள் ஆகியோர் கலந்து கொண்டனர். 

    • 250 பள்ளி குழந்தைகளுக்கு தேவையான பென்சில், ரப்பர், சிற்றுண்டி, உள்ளிட்டவை வழங்கப்பட்டது.
    • அரசு தொடக்கப் பள்ளி சார்பில் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கப்பட்டது.

    சாம்பவர்வடகரை:

    வடகரை அரசு தொடக்கப்பள்ளி மத்தியில் மாணவ- மாணவிகளுக்கு கல்விக்கு தேவையான உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியர் ராஜ செல்வி தலைமை தாங்கினார்.

    சாம்பவர்வடகரை ஹரி பிரியாணி கடை உரிமையாளர் ஹரிஹர செல்வன் 250 பள்ளி குழந்தைகளுக்கு தேவையான பென்சில், ரப்பர், சிற்றுண்டி, பெண், ஸ்கட்டர், எண் சுவடி, ஸ்கெட்ச், பென்சில் டப்பா ஆகியவற்றை வழங்கினார்.

    பின்பு குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கினார். ஹரிஹரசெல்வனுக்கு அரசு தொடக்கப் பள்ளி சார்பில் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கப்பட்டது.

    • கட்டுமான பணியில் ஈடுபடும் கொத்தனார்களுக்கு தலைக்கவசம், முழு பாதுகாப்பு கவசம், கையுறை , முகக்கவசம் உள்ளிட்ட 7 வகையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
    • பெரியாள் தொழிலாளர்களுக்கு 5 வகையான பாதுகாப்பு உபகரணங்கள், சித்தாள் தொழிலாளர்களுக்கு 7 வகையான பாதுகாப்பு உபகரணங்கள் உள்பட கட்டுமான பணிகளில் ஈடுபடும் அனைத்து தொழிலாளர்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    தஞ்சாவூர்:

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று தஞ்சையில் நடைபெற்றது.

    விழாவுக்கு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி கட்டுமான தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் குறித்து பேசினார்.விழாவில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய செயலாளர் செந்தில்குமாரி வரவேற்புரை ஆற்றினார்.எம்.எல்.ஏ.க்கள் துரை சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம் ஆகியோர் கட்டுமான தொழிலாளர்களுக்கு அரசு செய்துள்ள நலத்திட்ட உதவிகள் குறித்து பேசினர்.பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன், தமிழக அரசின் தலைமை கொறடா கோவி செழியன், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் பொன்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றினர்.

    இதில் கட்டுமான பணியில் ஈடுபடும் கொத்தனார்களுக்கு தலைக்கவசம், முழு பாதுகாப்பு கவசம், கையுறை , முகக்கவசம் உள்ளிட்ட 7 வகையான பாதுகாப்பு உபகரணங்கள், பெரியாள் தொழிலாளர்களுக்கு 5 வகையான பாதுகாப்பு உபகரணங்கள், சித்தாள் தொழிலாளர்களுக்கு 7 வகையான பாதுகாப்பு உபகரணங்கள் உள்பட கட்டுமானப் பணிகளில் ஈடுபடும் அனைத்து தொழிலாள ர்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மொத்தம் 718 தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன. இது தவிர கல்வி உதவித் தொகையாக 179 பயனாளிகளுக்கு ரூ.4 லட்சத்து 61 ஆயிரத்து 300-ம், திருமண உதவித் தொகையாக 1 பயனாளிக்கு ரூ. 5 ஆயிரமும் என்பது உள்ளிட்ட மொத்தம் 945 பயனாளிகளுக்கு ரூ.18 லட்சத்து 8 ஆயிரத்து 410 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா, தாசில்தார் மணிகண்டன், மாநகராட்சி மேயர்கள் தஞ்சாவூர் சண்.ராமநாதன், கும்பகோணம் சரவணன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சி தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, துணைத்தலைவர் முத்து செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் திருச்சி தொழிலாளர் இணை ஆணையர் கோவிந்தன் நன்றி கூறினார்.

    • 102 மாற்றுத்திறானாளிகளுக்கு ரூ.12.71 லட்சம் மதிப்பிலான உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
    • மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகை ரூ.1500-ல் இருந்து ரூ.2000-ஆக உயர்த்தி வழங்கப்படும்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம் அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் நடைபெற்றது. கலெக்டர் செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முகாமில் 102 மாற்றுத்திறானாளிகளுக்கு ரூ.12.71 லட்சம் மதிப்பிலான உதவி உபகரணங்கள் மற்றும் உதவித்தொகைக்கான ஆணைகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் தேர்வானவர்களுக்கு பணி நியமன உத்தரவினை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.

    மேலும் மாற்றுத் திறனாளிகளுக்கான யு.டி.ஐ. அடையாள அட்டை சுமார் 50 பேருக்கு வழங்கப்பட்டது. பின்னர் அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது:-

    மாற்றுத் திறனாளிகளுக்கு மத்திய அரசு வழங்கக்கூடிய யு.டி.ஐ. அடையாள அட்டை என்பது ஆதார் அட்டை போன்றது. முதல்-அமைச்சர் அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    மாற்றுத் திறனாளி களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.1500-ல் இருந்து ரூ.2000-ஆக உயர்த்தி வழங்கப்படும். தமிழக முதல்-அமைச்சர் உத்தரவுப்படி தகுதியுள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவித்தொகை வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் மகளிர் திட்டம் திட்ட அலுவலர் வீரபுத்திரன், மாவட்ட தொழில் மையம் மேலாளர் சொர்ணலதா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன், தூத்துக்குடி தாசில்தார் செல்வக்குமார், வ.உ.சி. கல்லூரி முதல்வர் வீரபாகு மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    ×