search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.18 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் - அமைச்சர்கள் வழங்கினர்
    X

    கட்டுமான தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.18 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் - அமைச்சர்கள் வழங்கினர்

    • கட்டுமான பணியில் ஈடுபடும் கொத்தனார்களுக்கு தலைக்கவசம், முழு பாதுகாப்பு கவசம், கையுறை , முகக்கவசம் உள்ளிட்ட 7 வகையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
    • பெரியாள் தொழிலாளர்களுக்கு 5 வகையான பாதுகாப்பு உபகரணங்கள், சித்தாள் தொழிலாளர்களுக்கு 7 வகையான பாதுகாப்பு உபகரணங்கள் உள்பட கட்டுமான பணிகளில் ஈடுபடும் அனைத்து தொழிலாளர்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    தஞ்சாவூர்:

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று தஞ்சையில் நடைபெற்றது.

    விழாவுக்கு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி கட்டுமான தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் குறித்து பேசினார்.விழாவில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய செயலாளர் செந்தில்குமாரி வரவேற்புரை ஆற்றினார்.எம்.எல்.ஏ.க்கள் துரை சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம் ஆகியோர் கட்டுமான தொழிலாளர்களுக்கு அரசு செய்துள்ள நலத்திட்ட உதவிகள் குறித்து பேசினர்.பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன், தமிழக அரசின் தலைமை கொறடா கோவி செழியன், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் பொன்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றினர்.

    இதில் கட்டுமான பணியில் ஈடுபடும் கொத்தனார்களுக்கு தலைக்கவசம், முழு பாதுகாப்பு கவசம், கையுறை , முகக்கவசம் உள்ளிட்ட 7 வகையான பாதுகாப்பு உபகரணங்கள், பெரியாள் தொழிலாளர்களுக்கு 5 வகையான பாதுகாப்பு உபகரணங்கள், சித்தாள் தொழிலாளர்களுக்கு 7 வகையான பாதுகாப்பு உபகரணங்கள் உள்பட கட்டுமானப் பணிகளில் ஈடுபடும் அனைத்து தொழிலாள ர்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மொத்தம் 718 தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன. இது தவிர கல்வி உதவித் தொகையாக 179 பயனாளிகளுக்கு ரூ.4 லட்சத்து 61 ஆயிரத்து 300-ம், திருமண உதவித் தொகையாக 1 பயனாளிக்கு ரூ. 5 ஆயிரமும் என்பது உள்ளிட்ட மொத்தம் 945 பயனாளிகளுக்கு ரூ.18 லட்சத்து 8 ஆயிரத்து 410 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா, தாசில்தார் மணிகண்டன், மாநகராட்சி மேயர்கள் தஞ்சாவூர் சண்.ராமநாதன், கும்பகோணம் சரவணன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சி தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, துணைத்தலைவர் முத்து செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் திருச்சி தொழிலாளர் இணை ஆணையர் கோவிந்தன் நன்றி கூறினார்.

    Next Story
    ×