என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  நாமகிரிபேட்டை வட்டார வள மையம் சார்பில் மாற்று திறன் மாணவர்களுக்கு உபகரணங்கள்
  X

  மாற்றுத்திறன் மாணவர்களுக்கான உபகரணங்களை வழங்கிய காட்சி.

  நாமகிரிபேட்டை வட்டார வள மையம் சார்பில் மாற்று திறன் மாணவர்களுக்கு உபகரணங்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மாற்றுத்திறன் மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி வட்டார வள மையத்தில் நடந்தது.
  • நிகழ்ச்சியில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் செண்பக வடிவு, வட்டார ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்து மாற்று திறன் மாணவர்களுக்கான உபகரணங்களை வழங்கினர்.

  ராசிபுரம்:

  ராசிபுரம் அருகே உள்ள நாமகிரிப்பேட்டை வட்டார வள மையத்திற்கு உட்பட்ட பள்ளிகளில் பயின்று வரும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி வட்டார வள மையத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் செண்பக வடிவு, வட்டார ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்து மாற்று திறன் மாணவர்களுக்கான உபகரணங்களை வழங்கினர். நிகழ்ச்சியில் சிறப்பு பயிற்றுநர்கள் அருள்ராஜா, சரவணன், இயன்முறை மருத்துவர் சுஷ்மிதா ஆகியோர் உபகரணங்களின் பயன்பாட்டினை பெற்றோர்களுக்கு விளக்கிக் கூறினர். ஆசிரியர் பயிற்றுநர்கள் முருகேசன், சியாமளா, பகல் நேர பராமரிப்பு மைய ஆசிரியர் வளர்மதி, உதவியாளர் வரதம்மாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

  Next Story
  ×