search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உணவுப்பட்டியல்"

    • உணவு பழக்கத்தை தவறாக கடைபிடிக்கிறீர்கள்.
    • சர்க்கரை மிக அதிக கலோரிகளை கொண்டது.

    இன்றைய காலகட்டத்தில் உடல் பருமன் பொதுவான ஒன்றாகி விட்டது. உடல் பருமனை குறைக்க சிறந்த வழி, சில வெள்ளை உணவுகளை ஒதுக்கி வைப்பதாகும்.

    கடுமையான உடற்பயிற்சி செய்தாலும் உடல் எடை குறையவில்லை என்றால், நீங்கள் உணவு பழக்கத்தை தவறாக கடைபிடிக்கிறீர்கள் என்று அர்த்தம். மிக முக்கியமாக சில வெள்ளை உணவுகளை உங்கள் டயட்டில் இருந்து முற்றிலுமாக அகற்றினால், உடல் பருமன் வேகமாக குறையும்.

    என்ன செய்தாலும் உடல் எடை குறையவில்லை என்றால் அதற்கு தவறான உணவுப்பழக்கமே காரணம். மிக முக்கியமாக சில வெள்ளை உணவுகளை உங்கள் டயட்டில் இருந்து முற்றிலுமாக அகற்றினால், உடல் பருமன் வேகமாக குறையும்.

    மைதா ஊட்டசத்து இல்லாத காப்போஹைட்ரேட் நிறைந்த மாவு. மைதாவால் செய்யப்பட்ட உணவுகளான பரோட்டா, பிரட்டுகள் என அனைத்துமே, நார்ச்சத்து புரதம் எதுவுமே இல்லாதவை. இவை கலோரிகள் அதிகம் கொண்டவை. எனவே இதனை விலக்குவது மிக அவசியம்.

    உடல் பருமன் குறைய வேண்டும் என்றால் சர்க்கரையை விலக்காமல் சாத்தியமில்லை. சர்க்கரை மிக அதிக கலோரிகளை கொண்டது. எனவே சர்கக்ரை உடல் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். அதற்கு பதிலாக வெல்லம் எடுத்துக் கொள்ளலாம்

    உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவும் உணவுப்பட்டியல்

    முதல் நாள்

    தினமும் காலை டீ, காபி, பால் போன்றவை குடிக்காமல் வெள்ளரி தண்ணீர் குடிக்க வேண்டும். காலை உணவாக ஒரு கிண்ணம் ஓட்ஸ் கஞ்சியில் பால் சேர்த்து சாப்பிடலாம். மதிய உணவாக ஒரு சிறிய கப் பருப்பு, ஏதாவது ஒரு கப் காய்கறி, ஒரு சப்பாத்தி மற்றும் ஒரு கப் சாதம் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம். இரவு உணவாக ஒரு சப்பாத்தி மட்டும் சாப்பிட வேண்டும். பசி அடங்கவில்லை என்றால் பழம் அல்லது ஒரு டம்ளர் மோர் குடிக்கலாம்.

    இரண்டாவது நாள்

    காலை உணவாக 2 சோளமாவு தோசை, அரை கப் தயிர்சேர்த்து சாப்பிடுங்கள். மதிய உணவிற்கு ஒரு சிறிய கிண்ணம் அளவுக்கு பருப்பு, ஒரு சப்பாத்தி, காய்கறி ஒரு கப் எடுத்துக்கொள்ள வேண்டும். இரவு உணவிற்கு இரண்டு சப்பாத்தி மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

    மூன்றாவது நாள்

    காலை உணவாக ஒரு கப் பழங்கள் மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். மதிய உணவிற்கு பன்னீருடன் காய்கறிகள் மட்டும் ஒரு கப் எடுத்துக்கொள்ள வேண்டும். இரவு உணவாக ஒன்று அல்லது 2 சப்பாத்தி எடுத்துக்கொள்ளலாம்.

    நான்காவது நாள்

    காலை உணவாக 2 ஆம்லேட் மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். மதியத்திற்கு ஒரு கப் காய்கறி மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். இரவு உணவாக அரை கப் சாதம் எடுத்துக்கொள்ளலாம்.

    ஐந்தாம் நாள்

    காலை உணவிற்கு காய்கறி உப்புமா, மதியத்திற்கு காய்கறி அல்லது பன்னீரால் சேர்க்கப்பட்ட சப்பாத்தி எடுத்துக்கொள்ளலாம். இரவு உணவிற்கு ஒரு சப்பாத்தி மட்டும் எடுத்துக்கொள்ளலாம்.

    ×