search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலவச சைக்கிள்"

    • தெற்குவாசல் நாடார் மேல்நிலைப்பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.
    • 53-வது வார்டு கவுன்சிலர் அருண்குமார், தெற்குவாசல் பகுதி செயலாளர் ஜீவன் ரமேஷ்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.

    மதுரை

    மதுரை தெற்குவாசல் நாடார் வித்தியாபிவிருத்தி சங்கம் உறவின்முறைக்குப் பாத்தியப்பட்ட நாடார் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலை யில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது. பள்ளிச்செயலர் குணசேகரன் தலைமை தாங்கினார். உறவின்முறை தலைவர் கணபதி, செயலாளர் மயில்ராஜன் முன்னிலை வகித்தனர். பள்ளிக்குழு தலைவர் பார்த்திபன் வரவேற்றார்.

    மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் சிறப்பரையாற்றி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கி ள்களை வழங்கினார். 53-வது வார்டு கவுன்சிலர் அருண்குமார், தெற்குவாசல் பகுதி செயலாளர் ஜீவன் ரமேஷ்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். நாடார் மேல்நிலை பள்ளி பள்ளிக்குழு கவுரவ தலைவர் ராஜன், உறவின்முறை துணைச்ெசயலாளர் அருஞ்சுனைராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்ற னர். தலைமை,ஆசிரியர் நாகநாதன் நன்றி கூறினார்.

    விழாவிற்கான ஏற்பாடு களை ஆசிரியர்கள் அன்புச்செல்வன், ரமேஷ், வெற்றிவேல், காசி, அலுவலர்கள் மாரிச்செல்வம், பொன்மணி, பாண்டியராஜன், சுரேஷ்பாபு ஆகியோர் செய்திருந்தனர். விழா நிகழ்ச்சிகளை பட்டதாரி தமிழாசிரியை பிரேமலதா தொகுத்து வழங்கினார்.

    • விஜய்வசந்த் எம்.பி.வழங்கினார்
    • 123 மாணவர்கள் மற்றும் 140 மாணவிகள் பயன்பெற்றனர்.

    கன்னியாகுமரி:

    கொட்டாரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ- மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சை்கிள் வழங்கும் நிகழ்ச்சி இன்று காலை நடந்தது. கொட்டாரம் பேரூராட்சி தலைவி செல்வக்கனி தலைமை தாங்கினார் துணைத் தலைவி விமலா, பள்ளி உதவி தலைமை ஆசிரியை தங்கதீபா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி ஆசிரியர் மன்ற செயலாளர் ராஜலிங்கம் வரவேற்றார்.

    இந்த நிகழ்ச்சியில் 123 மாணவர்கள் மற்றும் 140 மாணவிகளுக்கும் சேர்த்து மொத்தம் 263 மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது. இவற்றை விஜய் வசந்த் எம்.பி. வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட தி.மு.க. பிரதிநிதி வினோத், அகஸ்தீஸ்வரம் தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் முருகேசன், முதுநிலை பொருளியல் பிரிவு ஆசிரியர் வெங்கட சுப்பிரமணியன், கொட்டாரம் பேரூராட்சி வார்டு கவுன்சிலர் கிறிஸ்டோபர், சந்திரகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அம்பேத்குமார் எம்.எல்.ஏ. வழங்கினார்
    • ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர், பேரூராட்சியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை மூலம் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சிக்கு வந்தவாசி தொகுதி அம்பேத்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 186 மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கினர்.

    இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அரங்காவலர் குழு உறுப்பினர் பாண்டுரங்கன், ஒன்றிய குழு தலைவர் இந்திரா இளங்கோவன், பெரணமல்லூர் பேரூராட்சி மன்ற தலைவர் வேணி ஏழுமலை, துணைத் தலைவர் ஆண்டாள் அண்ணாதுரை, ஆண்கள் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமசாமி, ஒன்றிய செயலாளர் மனோகரன், காங்கிரஸ் பொறுப்பாளர் பழக்கடை பாலையா, ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கர், பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நல்லதம்பி எம்.எல்.ஏ. வழங்கினார்
    • 600 பேர் பயனடைந்தனர்

    திருப்பத்தூர்:

    ஜவ்வாது மலை நெல்லிவாசல், புதூர்நாடு வனத்துறை மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள மாணவ, மாணவி களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி அந்தந்த பள்ளிகளில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு தலைவர் விஜியா அருணாச்சலம் தலைமை வகித்தார் அனைவரையும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கே. சந்திரகுமார், கே. ஆறுமுகம், வரவேற்றனர் வனச்சரக அலுவலர்கள் எம். பிரபு, ரமேஷ் குமார் முன்னிலை வகித்தனர். 600 மலைவாழ் மாணவ மாணவிகளுக்கு விலையில் சைக்கிள்களை ஏ.நல்லதம்பி எம்எல்ஏ வழங்கி பேசினார்.

    நிகழ்ச்சியில் உதவி வன பாதுகாவலர் ஆர்.ராஜ்குமார், மின்சார வாரிய செயற்பொறியாளர் அருள்பாண்டியன், மாவட்ட கவுன்சிலர் சத்தியவாணி வில்வம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.அலமேலு செல்வம், ஒன்றிய கவுன்சிலர்கள் பிருந்தாவதி வைகுந்தராவ், துக்கன், கூட்டுறவு சங்க தலைவர் சின்னப் பையன், உட்பட பலர் பேசினார்கள் இறுதியில் உதவி தலைமை ஆசிரியர்கள் ஜி சதாசிவம் டி.வாசுதேவன், நன்றி கூறினார்கள்.

    • ஒ.ஜோதி எம்.எல்.ஏ. வழங்கினார்
    • 6 அரசு பள்ளிகளில் வழங்கப்பட்டது

    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த அனக்காவூர் ஒன்றியத்தை சேர்ந்த செங்காடு, கோவிலூர், அனக்காவூர், புரிசை, ஆக்கூர், உக்கல் ஆகிய ஊர்களில் உள்ள 6 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சிகள் அந்தந்த பள்ளிகளில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் தலைமை வகித்தார். ஒன்றிய குழு தலைவர் திலகவதி ராஜ்குமார், மாவட்ட கல்வி அலுவலர் நளினி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினராக ஓ.ஜோதி எம்.எல்.ஏ கலந்துகொண்டு, நல்லாசிரியர் விருது பெற்ற பள்ளியின் தலைமை ஆசிரியர் அன்பரசுக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டு தெரிவித்தார்.

    பின்னர் மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிளை வழங்கி பேசினார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ கமலக்கண்ணன், ஒன்றிய செயலாளர்கள் ஞானவேல், ரவிக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மு.பெ.கிரி எம்.எல்.ஏ. பங்கேற்பு
    • 527 பேர் பயன்பெற்றனர்

    செங்கம்:

    செங்கம் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி கலந்து கொண்டார்.

    செங்கம் பேரூராட்சி தலைவர் சாதிக்பாஷா, வட்டாட்சியர் முனுசாமி, மாவட்ட கவுன்சிலர்கள் ராமஜெயம், செந்தில்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் செங்கம் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் 527 பேருக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் பணியை செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

    இதில் ஒன்றிய செயலாளர்கள் செந்தில்குமார், மனோகரன், நகர செயலாளர் அன்பழகன், பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கிருபாகரன், பள்ளி மேலாண்மை குழு முருகமணிரேவதி, மணி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    • படவேடு அனந்தபுரம் குப்பம் பள்ளிகளில் வழங்கினர்
    • புதுமைப்பெண் திட்ட ஊக்கத்தொகையை நல்ல முறையில் பயன்படுத்த அறிவுரை

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த படவேடு ரேணுகொண்டாபுரம் அரசு மேநிலைப்பள்ளி, அனந்தபுரம் மேநிலைப்பள்ளி, குப்பம் மேநிலைப்பள்ளி ஆகிய இடங்களில் தனித்தனியே நடந்த விழாவில் 374 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதி வண்டிகளை கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் வழங்கினார்.

    மாணவ மாணவிகள் நல்ல முறையில் படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும். போதை வஸ்துகள் புகையிலை, சிகரெட் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும்.

    புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு, தமிழக முதல்வர் வழங்கும் தலா ரூ.1000 ஊக்கத்தொகையை பெற்று நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

    போளூர் ஒன்றிய குழு தலைவர் சாந்தி பெருமாள், ஒன்றிய கவுன்சிலர்கள் மனோகரன், சுரேஷ்கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர்கள் ரேணுகொண்டாபுரம் ஆனந்தன், அனந்தபுரம் சீனிவாசன், குப்பம் மகேஷ் ஆகியோர் வரவேற்றனர்.

    இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள் படவேடு சீனிவாசன், அனந்தபுரம் வளர்மதிஅண்ணாமலை, குப்பம் துணை தலைவர் வீரமணிகண்டன், முன்னாள் கவுன்சிலர் சீதாராமன், போளூர் ஒன்றிய செயலாளர் ஆர் வி சேகர், படவேடு முருகன், ஜெகந்நாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் ஆசிரியர் ரெஜினா நன்றி கூறினார்.

    • ஒ.ஜோதி எம்.எல்.ஏ. வழங்கினார்
    • 7அரசு மேல்நிலைபள்ளிகளில் வழங்கினர்

    செய்யாறு:

    செய்யாறு டவுன், அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசினர் மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஒன்றியத்தில் நெடும்பிறை, வாழ்குடை, கொற்க்கை, முனுகப்பட்டு, பல்லி உள்ளிட்ட 7அரசு மேல்நிலைபள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்தின் கீழ் 1354 மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றது.

    நிகழ்ச்சிகளுக்கு செய்யாறு ஒன்றிய குழு தலைவர் நாவல் பாக்கம் பாபு தலைமை வகித்தார். நகர மன்ற தலைவர் மோகனவேல், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினராக ஒ.ஜோதி எம்.எல்.ஏ கலந்துகொண்டு 1354 மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிளை வழங்கி சிறப்புரையாற்றினர்.

    நிகழ்ச்சியில் நகர செயலாளர் வழக்கறிஞர் கே விஸ்வநாதன், வழக்கறிஞர் அசோக், மாவட்ட சிறுபான்மை செயலாளர் வழக்கறிஞர் பாஷா, பள்ளி மேலாண்மை குழு தலைவர் சின்னதுரை, மற்றும் திமுக பிரமுகர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கலசப்பாக்கம் எம்.எல்.ஏ. வழங்கினார்
    • 374 மாணவர்கள் பயன் பெற்றனர்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த படவேடு ரேணுகொண்டாபுரம் அரசு மேநிலைப்பள்ளி, அனந்தபுரம் மேநிலைப்பள்ளி, குப்பம் மேநிலைப்பள்ளி ஆகிய இடங்களில் தனித்தனியே நடந்த விழாவில் நேற்று 374 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் வழங்கினார்.

    போளூர் ஒன்றிய குழு தலைவர் சாந்தி பெருமாள், ஒன்றிய கவுன்சிலர்கள் மனோகரன், சுரேஷ்கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர்கள் ரேணுகொண்டாபுரம் ஆனந்தன், அனந்தபுரம் சீனிவாசன், குப்பம் மகேஷ் ஆகியோர் வரவேற்றனர்.

    இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள் படவேடு சீனிவாசன், அனந்தபுரம் வளர்மதிஅண்ணாமலை, குப்பம் துணை தலைவர் வீரமணிகண்டன், முன்னாள் கவுன்சிலர் சீதாராமன், போளூர் ஒன்றிய செயலாளர் ஆர் வி சேகர், படவேடு முருகன், ஜெகந்நாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் ஆசிரியர் ரெஜினா நன்றி கூறினார்.

    • நல்லதம்பி எம்.எல்.ஏ. வழங்கினார்
    • ஆசிரியர், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

    திருப்பத்தூர்:

    கந்திலி ஒன்றியம் கொரட்டி, சுந்தரம் பள்ளி, கண்ணாலப்பட்டி, , நத்தம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தமிழக அரசு வழங்கிய விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு தெற்கு ஒன்றிய செயலாளரும மாவட்ட கவுன்சிலர் கே ஏ.குணசேகரன் தலைமை தாங்கினார். அனைவரையும் ஊராட்சி மன்ற தலைவர்கள் ரங்கசாமி குமார், லட்சுமிகார்த்திகேயன், விஜயலட்சுமி கருணாநிதி மாவட்ட கவுன்சிலர் சி கே சுப்பிரமணி, வரவேற்றனர்.

    மத்திய ஒன்றிய செயலாளர் முருகேசன் முன்னிலை வகித்தார்.

    சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் தொகுதி ஏ. நல்லதம்பி எம்எல்ஏ கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசு வழங்கிய விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் கு.ராஜமாணிக்கம் ஒன்றிய குழு தலைவர் திருமதி திருமுருகன் கூட்டுறவு சங்கத் தலைவர்கள் குலோத்துங்கன், அவைத் தலைவர் ராஜா, ஆசிரியர் ஜெகதீசன் ஆர்.தசரதன், ஒன்றிய கவுன்சிலர்கள் தாமோதரன், கே எம் சக்கரை, சாந்தகுமார் சக்கரவர்த்தி பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர்கள் நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • செய்யாறு ஒ.ஜோதி எம்.எல்.ஏ. வழங்கினார்
    • அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்

    வெம்பாக்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் பகுதியில் உள்ள 13 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு செய்யாறு ஓ.ஜோதி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 1,384 பேருக்கு இலவச சைக்கிள்களை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

    நிகழ்ச்சிக்கு வெம்பாக்கம் ஒன்றிய குழு தலைவர் மாமண்டூர் டி ராஜு தலைமை தாங்கினார்.

    மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் முன்னிலை வகித்தார். வெம்பாக்கம் மத்திய ஒன்றிய கழகச் செயலாளர் ஜே சி கே சீனிவாசன் வெம்பாக்கம் கிழக்கு ஒன்றிய செயலாளர் என் சங்கர் வெம்பாக்கம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் தினகரன் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

    • விழாவுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி தலைமை தாங்கினார்.
    • அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு, 535 மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கி பேசினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி விக்டோரியா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நேற்று மாலை நடந்தது.

    விழாவுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை கலைச்செல்வி வரவேற்று பேசினார்.

    சிறப்பு அழைப்பாளராக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு, 535 மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கி பேசினார்.

    தன்னம்பிக்கை

    அப்போது, தமிழக முதல்-அமைச்சர் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார். பெண்கள் நல்ல, தரமான உயர்கல்வி பெற வேண்டும், பாலின சமத்துவம் இருக்க வேண்டும் என்ற வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். நல்ல வேலைவாய்ப்பு, தொழில் தொடங்கும் வகையில் திறன் மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்.

    மாணவிகள் தன்னம்பிக்கையோடு இருக்க வேண்டும். மதிப்பெண் முக்கியமல்ல. ஒவ்வொருவரும், அவர்கள் திறமைக்கு ஏற்ப பாடங்களை தேர்வு செய்து படிக்க வேண்டும். பெற்றோருக்கு கீழ்படிந்து இருக்க வேண்டும். நன்றாக படியுங்கள். உங்களுக்கு நல்ல எதிர்காலம் அமையட்டும் என்று கூறினார்.

    நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் பிரேம்குமார் ராஜாசிங், கவுன்சிலர் சுரேஷ்குமார், வட்ட செயலாளர் கீதா செல்வமாரியப்பன் மற்றும் ஆசிரியைகள், மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    ×