search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கந்திலி பகுதியில் 550 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்
    X

    அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு நல்லதம்பி எம்,எல்.ஏ சைக்கிள் வழங்கிய போது எடுத்த படம். அருகில் ஒன்றிய செயலாளர் மாவட்ட கவுன்சிலர் கே.ஏ.குணசேகரன் உள்ளார்.

    கந்திலி பகுதியில் 550 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்

    • நல்லதம்பி எம்.எல்.ஏ. வழங்கினார்
    • ஆசிரியர், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

    திருப்பத்தூர்:

    கந்திலி ஒன்றியம் கொரட்டி, சுந்தரம் பள்ளி, கண்ணாலப்பட்டி, , நத்தம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தமிழக அரசு வழங்கிய விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு தெற்கு ஒன்றிய செயலாளரும மாவட்ட கவுன்சிலர் கே ஏ.குணசேகரன் தலைமை தாங்கினார். அனைவரையும் ஊராட்சி மன்ற தலைவர்கள் ரங்கசாமி குமார், லட்சுமிகார்த்திகேயன், விஜயலட்சுமி கருணாநிதி மாவட்ட கவுன்சிலர் சி கே சுப்பிரமணி, வரவேற்றனர்.

    மத்திய ஒன்றிய செயலாளர் முருகேசன் முன்னிலை வகித்தார்.

    சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் தொகுதி ஏ. நல்லதம்பி எம்எல்ஏ கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசு வழங்கிய விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் கு.ராஜமாணிக்கம் ஒன்றிய குழு தலைவர் திருமதி திருமுருகன் கூட்டுறவு சங்கத் தலைவர்கள் குலோத்துங்கன், அவைத் தலைவர் ராஜா, ஆசிரியர் ஜெகதீசன் ஆர்.தசரதன், ஒன்றிய கவுன்சிலர்கள் தாமோதரன், கே எம் சக்கரை, சாந்தகுமார் சக்கரவர்த்தி பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர்கள் நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×