நாடார் மேல்நிலைப்பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கல்

தெற்குவாசல் நாடார் மேல்நிலைப்பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கப்பட்டது. 53-வது வார்டு கவுன்சிலர் அருண்குமார், தெற்குவாசல் பகுதி செயலாளர் ஜீவன் ரமேஷ்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.
நாடார் மேல்நிலைப்பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கல்
Published on

மதுரை

மதுரை தெற்குவாசல் நாடார் வித்தியாபிவிருத்தி சங்கம் உறவின்முறைக்குப் பாத்தியப்பட்ட நாடார் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலை யில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது. பள்ளிச்செயலர் குணசேகரன் தலைமை தாங்கினார். உறவின்முறை தலைவர் கணபதி, செயலாளர் மயில்ராஜன் முன்னிலை வகித்தனர். பள்ளிக்குழு தலைவர் பார்த்திபன் வரவேற்றார்.

மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் சிறப்பரையாற்றி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கி ள்களை வழங்கினார். 53-வது வார்டு கவுன்சிலர் அருண்குமார், தெற்குவாசல் பகுதி செயலாளர் ஜீவன் ரமேஷ்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். நாடார் மேல்நிலை பள்ளி பள்ளிக்குழு கவுரவ தலைவர் ராஜன், உறவின்முறை துணைச்ெசயலாளர் அருஞ்சுனைராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்ற னர். தலைமை,ஆசிரியர் நாகநாதன் நன்றி கூறினார்.

விழாவிற்கான ஏற்பாடு களை ஆசிரியர்கள் அன்புச்செல்வன், ரமேஷ், வெற்றிவேல், காசி, அலுவலர்கள் மாரிச்செல்வம், பொன்மணி, பாண்டியராஜன், சுரேஷ்பாபு ஆகியோர் செய்திருந்தனர். விழா நிகழ்ச்சிகளை பட்டதாரி தமிழாசிரியை பிரேமலதா தொகுத்து வழங்கினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com