search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இடையூறு"

    • போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதிப்பு ஏற்பட்டது.
    • மாடுகளை மீட்டுச் செல்ல அதன் உரிமையாளர்கள் தலா ரூ.2,000 அபராதமாக செலுத்த வேண்டும்.

    திருச்சி

    திருச்சி மாவட்டம் ச.கண்ணனூர் பேரூராட்சி பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதிப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து கால்நடைகளை தங்கள் வீடுகளில் கட்டி வைத்து பராமரிக்குமாறு கால்நடை உரிமையாளர்களுக்கு பேரூராட்சி சார்பில் 3 முறை எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    இருந்தபோதிலும் கால்நடைகள் தெருக்களில் சுற்றித் திரிவது வாடிக்கையானது. அதைத்தொடர்ந்து பேரூராட்சி தலைவர் சரவணன் மற்றும் கவுன்சிலர்கள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் பேரூராட்சி செயல் அலுவலர் சந்திரகுமார் உத்தரவின் பேரில் சமயபுரம் வாரச்சந்தை, புதுத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் அனாதையாக சுற்றித்திரிந்த 15-க்கும் மேற்பட்ட மாடுகளை பேரூராட்சி பணியாளர்கள் பறிமுதல் செய்து பேரூராட்சி திருமண மண்டப பகுதியில் நிறுத்தி வைத்தனர்.

    இந்த மாடுகளை மீட்டுச் செல்ல அதன் உரிமையாளர்கள் தலா ரூ.2,000 அபராதமாக செலுத்த வேண்டும். மீண்டும் இதேபோல் சாலைகளில் சுற்றித்திரிந்து மாடுகள் பிடிபட்டால் ரூ.5,000 அபராதமாக செலுத்திய பிறகே மீட்கலாம். அதற்கு பின்னரும் சாலைகளில் வலம் வந்தால் அந்த மாடுகளை பிடித்து ஏலம் விடப்படும் என செயல் அலுவலர் சந்திரகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • திருப்பத்தூரில் சாலையில் திரிந்த மாடுகளை பணியாளர்களை கொண்டு பிடித்து அகற்றினர்.
    • பல்வேறு பகுதிகளில் திரியும் மாடுகள் வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக இருந்தன.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அண்ணா சிலை மதுரை சாலை, சிவகங்கை சாலை, 4 ரோடு, பெரிய கடை வீதி, மூலக்கடை வீதி, அச்சு கட்டு, வானியண் கோவில் தெரு, செட்டிய தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திரியும் மாடுகள் வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக இருந்தன.

    இந்த மாடுகளை பிடித்து அப்புறப்படுத்தக்கோரி திருப்பத்தூர் பேரூராட்சி சேர்மன் கோகிலாராணிக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில் பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட தெருக்கள் வீதிகளில் சுற்றி திரிந்த மாடுகளை பணியாளர்களை கொண்டு மாடுகளை பிடித்து அகற்றினர். இதுபோன்று ஆபத்தை விளைவிக்கும் வகையில் தெருக்களில் உரிமையாளர்கள் மாடுகளை தெருவில் விடாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • சிதம்பரம் அருகே பொதுமக்களுக்கு இடையூறாக நடுரோட்டில் ஆபாசமாக பேசிய 2 பேர் கைது செய்யப்பட்டார்.
    • ஏழுமலை வயது 35 என்பவர் கையில் பெட்ரோல் கேனுடன் நடுரோட்டில் பொதுமக்களுக்கு இடையூறாக ஆபாசமாக திட்டி கொண்டிருந்தார்

    கடலூர்:

    சிதம்பரம் அருகே அண்ணாமலை நகர் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் சென்றனர். அப்போது மண் ரோடு பகுதி அருகே அதே பகுதியைச் சேர்ந்த ஏழுமலை வயது 35 என்பவர் கையில் பெட்ரோல் கேனுடன் நடுரோட்டில் பொதுமக்களுக்கு இடையூறாக ஆபாசமாக திட்டி கொண்டிருந்தார். இதேபோல் சிதம்பரம் அருகே சிவபுரி பஸ் நிறுத்தம் அருகில் நடுரோட்டில் வடகிரப்பு மேலத்தெரு பகுதியைச் சேர்ந்த சாமிநாதன் என்பவர் இடைவிடாத ஆபாசமாக பேசி கொண்டிருந்தார். இதனைப் பார்த்த போலீசார் அவர்கள் இருவரையும் பிடித்து அவர்கள் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    • பெறப்பட்ட மனுக்கள் மீதான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என்று பொதுமக்களிடம் உறுதி அளித்தார்.
    • கள்ளச்சாராய விற்பனை, கஞ்சா விற்பனை மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள பிரச்சினைகள் குறித்து நேரடியாக புகார் தெரிவிக்கலாம்.

    நாகப்பட்டினம்:

    நாகையில் பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களது குறைகளை போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் கேட்டறிந்து 31 மனுக்களை பெற்றார்கள். பெறப்பட்ட மனுக்கள் மீதான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என்று பொதுமக்களிடம் உறுதி அளித்தார். மேலும் பொதுமக்கள் இலவச எண்கள் மூலம் கள்ளச்சாராய விற்பனை, கஞ்சா விற்பனை மற்றும் பொதுமக்களுக்கு இடை யூறாக உள்ள பிரச்சினைகள் குறித்து நேரடியாக புகார் தெரிவிக்கலாம் என்று கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் நாகை உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், துணை போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) கீதா, நகர இன்ஸ்பெக்டர்கள் சரவணன், தியாகராஜன், சிவராமன், ஆனந்தராஜ், பசுபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • உடல் மற்றும் மனதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் மன அழுத்தத்தை குறைக்கவும் சிறப்பு யோகா வகுப்பு நடைபெற்றது.
    • பயிற்சியில் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் கூடும் கூட்டத்தை கலைக்கவும், பயிற்சிகள் நடத்தப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவின்படி இ. ஜி.எஸ். பிள்ளை கல்லூரியில் காவலர்கள் உடல் மற்றும் மனதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் மன அழுத்தத்தை குறைக்கவும் சிறப்பு யோகா வகுப்பு நடைபெற்றது.

    இந்த வகுப்பில் பயிற்சிக் காவலர்கள் மற்றும் தாலுகா காவல் நிலைய காவலர்கள் 150 -க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து நாகை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் கலவர தடுப்பு ஒத்திகை நடைபெற்றது.

    இந்த பயிற்சியில் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் கூடும் கூட்டத்தை கலைக்கவும், பயிற்சிகள் வழங்கப்பட்டது.

    • ராமநாதபுரம் புதிய பஸ் நிலையத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
    • போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மத்திய பகுதியில் சிறிய இடத்தில் இயங்கி வரும் பஸ் நிலையத்திற்கு நாள்தோறும் பயணிகள் அதிகளவில் வருவதால் காலை, மாலை நேரங்களில் கூட்டம் அதிகளவில் உள்ளது.

    அரசு, தனியார் பஸ்களிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. போக்குவரத்தை சரி செய்ய போலீசார் புதிய வழிமுறைகளை கொண்டு வந்தாலும் பொதுமக்கள் அதை கடைபிடிப்பதில்லை.

    ராமநாதபுரம் புதிய பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் திருச்சி, சென்னை, பெங்களூரு, தஞ்சாவூர், நாகப்பட்டினம் பஸ்கள் நிறுத்த பகுதியில் அதிகளவில் இருசக்கர வாகனங்களை நிறுத்தி விட்டு செல்கின்றனர். இந்த வழியாகத்தான் பஸ் நிலையத்திற்கு வரும் அனைத்து பஸ்களும் வெளியே செல்ல வேண்டும்.

    அந்த பகுதியில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால் பஸ்கள் செல்வதற்கும், பஸ்களை திருப்பி நிறுத்துவதற்கும் டிரைவர்கள் சிரமப்படுகின்றனர். இதுதவிர இந்த இருசக்கர வாகனங்கள் நடந்து செல்லும் பயணிகளுக்கும், பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகளுக்கும் இடையூறாக உள்ளன.

    பஸ்கள் உள்ளே வரும் பகுதியில் நெரிசலை தவிர்க்க போலீசார் இருசக்கர வாகனங்களை நிறுத்த கூடாது என அறிவிப்பு செய்துள்ளனர்.

    இதை கண்டுகொள்ளாமல் பஸ் நிலையத்திற்கு இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் அறிவிப்பு பலகை அருகிலேயே வாகனங்களை நிறுத்தி விட்டு பஸ் நிலையத்திற்குள் செல்கின்றனர்.

    இதனால் தினந்தோறும் அந்த பகுதியில் பஸ்களை நிறுத்த முடியாமல் டிரைவர்கள் அவதியடைந்து வருகின்றனர்.ஏற்கனவே நெரிசலாக உள்ள பகுதியில் தொடர்ந்து வாகனங்களை நிறுத்துவதால் ஏற்படும் பிரச்சினைகளை உணர்ந்து பொதுமக்கள் இருசக்கர வாகனங்களை வெளியிடங்களில் நிறுத்த வேண்டும்.

    போலீசார் கண்டு கொள்ளாமல் இருப்பதால் பொதுமக்களும் வாகனங்களை பஸ் நிலையத்தில் இஷ்டம் போல் நிறுத்துகின்றனர். இதுகுறித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • பல்வேறு இடங்களில் சுற்றிதிரிந்தன 50-க்கும் மேற்பட்ட பன்றிகள் வலை வைத்து உயிரோடு பிடித்து லாரியில் ஏற்றி கொண்டு சென்றனர்.
    • பன்றி வளர்ப்பவர்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் பொதுமக்கள், குடியிருப்பு வாசிகள் வரவேற்றுள்ளனர்.

    சீர்காழி:

    சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட 24 வார்டுகளில் பெரும்பாலான வார்டுகளான ஈசானியத் தெரு, நங்கநலத் தெரு, கீழ தென்பாதி ஊழியக்காரன் தோப்பு, பனங்காட்டு தெரு உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக பன்றிகள் சுற்றி திரிந்தன.

    இதனை பிடித்து அப்புறப் படுத்த வேண்டும் என பொதுமக்கள், நகர்மன்ற உறுப்பினர்கள், சீர்காழி நகர்மன்றத் தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகரனிடம் கோரிக்கை விடுத்தனர். அதனைத் தொடர்ந்து நகர்மன்ற தலைவர் உத்தரவின்படி பன்றிகள் பிடிக்க ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு சீர்காழி போலீசார் உதவியுடன், தூய்மை பணியாளர்கள் ஒத்துழைப்புடன் எம்.எஸ்.கே. நகர், இரணியன் நகர், ஊழியக்காரன் தோப்பு, கிருஷ்ணமூர்த்தி நகர், கற்பக நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் முதல் கட்டமாக 50 -க்கும் மேற்பட்ட பன்றிகள் வலை வைத்து உயிரோடு பிடித்து லாரியில் ஏற்றி கொண்டு சென்றனர்.

    பன்றி வளர்ப்பவர்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும், பொதுமக்கள், குடியிருப்பு வாசிகள் வரவேற்றுள்ளனர். அப்போது நகராட்சி ஆணையர் (பொ) ராஜகோபாலன், நகராட்சி மேலாளர் காதர்தான், நகரமைப்பு ஆய்வாளர் நாகராஜன், சுகாதார ஆய்வாளர் செல்லதுரை, பணி மேற்பார்வையாளர் விஜயேந்திரன், வருவாய் ஆய்வாளர் ராஜகணேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

    ×