search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆருத்ரா நிதி நிறுவனம்"

    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
    • ராஜீ உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையேயும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜீ(வயது 36).இவருக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. 6 வயது மற்றும் 4 வயதில் 2 குழந்தைகள் உள்ளன. ராஜீ தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த ஒரு மாதமாக வீட்டு உபயோக பொருட்கள் மார்க்கெட்டிங் தொழிலையும் செய்து வந்தார்.

    இந்நிலையில் ராஜீ தனது நண்பர்கள் அக்கம் பக்கத்தினர் மற்றும் தெரிந்தவர்கள் என பலரிடம் பணம் பெற்று ஆருத்ரா, மற்றும் ஐ.எப்.எஸ். நிதி நிறுவனங்களில் ரூ. 7லட்சம் வரை பணம் கட்டியுள்ளார். இந்த நிறுவனங்கள் மோசடியில் ஈடுபட்டு வழக்கில் சிக்கியதையடுத்து ராஜீ பணத்தை இழந்து தவித்தார். இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த ராஜீ என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வந்தார். இதற்கிடையே பணம் கொடுத்தவர்களின் நெருக்கடியும் அதிகரித்தது.

    இந்நிலையில் ராஜீ வீட்டில் தனியாக இருந்த வந்துள்ளார். நீண்ட நேரமாகியும் ராஜீ வெளியில் வராததால் அவரது பெரியம்மா நீலா என்பவர் கதவை தட்டினார். அப்போதும் திறக்காததால் அக்கம் பக்கத்தினர் உதவியோடு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது சிமெண்ட் சீட் போட்ட இரும்பு கம்பியில் வேட்டியால் தூக்கு போட்டு ராஜீ தற்கொலை செய்தது தெரிய வந்தது.

    இது பற்றி தகவல் கிடைத்ததும் சிவகாஞ்சி போலீசார் விரைந்து வந்து ராஜீயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். ராஜீ தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களை அதிர்ச்சி அடைய செய்து உள்ள நிலையில் மனைவி மற்றும் குழந்தைகள் கண்ணீருடன் தவித்து வருகிறார்கள்.

    ராஜீ உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையேயும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆருத்ரா, ஐ.எப்.எஸ். நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் பலர் மன உளைச்சலில் தவித்து வரும் நிலையில் இது போன்று மேலும் பலர் தற்கொலை செய்து கொள்ளும் முன்னர் பணத்தை இழந்தவர்களுக்கு அதனை திருப்பி கொடுக்க போலீசார் ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதே பாதிக்கப்பட்டவர்களின் குரலாக உள்ளது.

    • போலீசார் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 5 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    • சென்னை, போரூரில் வைத்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

    சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஆருத்ரா நிதி நிறுவனம், மோசடியில் ஈடுபட்டது அம்பலமானது.

    இந்த வழக்கு தொடர்பாக 16 பேர் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொதுக்களிடமிருந்து ரூ.2 ஆயிரத்து 400 கோடிக்கு மேல் பணத்தை சுருட்டி இருப்பதாக அரூத்ரா நிறுவனம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    பொதுமக்களிடம் வசூல் செய்த பணத்துக்கு 25 சதவீதத்தில் இருந்து 30 சதவீதம் வரை வட்டி தருவதாக கூறியதால் ஏராளமானோர் போட்டி போட்டுக் கொண்டு முதலீடு செய்திருந்தனர்.

    ஆனால் சொன்னபடி பணத்தை கொடுக்காததாலேயே ஆருத்ரா நிறுவனம் மோசடி புகாரில் சிக்கியது.

    இதுதொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 5 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    இந்நிலையில், ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த இயக்குனர்களில் ஒருவரான தீபக் பிரசாத் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    சென்னை, போரூரில் வைத்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

    • ஆருத்ரா நிதி நிறுவனம், மோசடியில் ஈடுபட்டது அம்பலமானது தொடர்பாக 16 பேர் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • இதுதொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 5 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஆருத்ரா நிதி நிறுவனம், மோசடியில் ஈடுபட்டது அம்பலமானது தொடர்பாக 16 பேர் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பொதுக்களிடமிருந்து ரூ.2 ஆயிரத்து 400 கோடிக்கு மேல் பணத்தை சுருட்டி இருப்பதாக அரூத்ரா நிறுவனம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    பொதுமக்களிடம் வசூல் செய்த பணத்துக்கு 25 சதவீதத்தில் இருந்து 30 சதவீதம் வரை வட்டி தருவதாக கூறியதால் ஏராளமானோர் போட்டி போட்டுக் கொண்டு முதலீடு செய்திருந்தனர். ஆனால் சொன்னபடி பணத்தை கொடுக்காததாலேயே ஆருத்ரா நிறுவனம் மோசடி புகாரில் சிக்கியது.



    இதுதொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 5 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த வழக்கில் நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஆருத்ரா நிறுவனம் ஏஜெண்டாக செயல்பட்டு வந்த ரூசோ என்பவரிடம் இருந்து ஆர்.கே.சுரேஷ் ரூ.15 கோடி வரையில் பணம் வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



    இது தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். வெளிநாட்டில் இருக்கும் ஆர்.கே. சுரேஷ் கடந்த 5 மாதமாக சென்னை திரும்பாமலேயே உள்ளார். போலீஸ் விசாரணைக்கு பயந்து அவர் அங்கேயே தலைமறைவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதையடுத்து ஆர்.கே.சுரேசின் வங்கி கணக்குகள் ஆய்வு செய்துள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.



    ஆருத்ரா நிதி நிறுவன மோசடி தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முதல்கட்ட குற்றப்பத்திரிகையை கடந்த சில நாட்களுக்கு முன்பு தாக்கல் செய்துள்ளனர். அப்போது ஆருத்ரா நிதி நிறுவனம் தொடர்பான ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள் ஆகியவையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதே போன்று மோசடி நிதி நிறுவனங்கள் தொடர்பான வழக்கு விசாரணைகள் அனைத்தையும் விரைந்து முடிக்க பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி.ஆசியம்மாள் தலைமையிலான போலீசார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • ஆருத்ரா நிதி நிறுவன இயக்குனர், முகவர்கள் என பலர் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
    • கடந்த 2022 ஏப்ரல் மாதம் ஆருத்ரா நிதி நிறுவனம் மோசடி அம்பலமாகி வங்கி கணக்குகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கினர்.

    காஞ்சிபுரம்:

    சென்னையை மையமாக கொண்டுள்ள ஆருத்ரா நிதி நிறுவனம் சென்னை, காஞ்சிபுரம் திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் லட்சக்கணக்கான பொதுமக்களிடம் அதிக வட்டி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து ஆருத்ரா நிதி நிறுவன இயக்குனர், முகவர்கள் என பலர் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில், செய்யார், உத்திரமேரூர் மற்றும் மானாமதி பகுதிகளில் ஆருத்ரா நிதி நிறுவன முகவர் நாகராஜ் என்பவர் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஓரிக்கை ஜெம் நகர் அருகாமையில் வசித்து வரும் முதியோர்களான ஸ்டீபன் (63) மற்றும் சுகுணா தேவி (59) தம்பதியின் வீட்டை ரூ.26 லட்சத்திற்கு தனது பெயருக்கு நாகராஜ் மாற்றியுள்ளார். அதில் ரூ.6 லட்சத்தை முதியவர் ஸ்டீபனின் வங்கி கணக்கில் செலுத்தி விட்டு, மீதமுள்ள ரூ.20 லட்சத்தை ஆருத்ரா நிதி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார்.

    கடந்த 2021-ம் ஆண்டு ஆருத்ரா நிதி நிறுவனத்தில் ரூ.20 லட்சம் முதலீடு செய்து 3 மாதங்கள் மட்டுமே மாதம் ரூ.1 லட்சம் கிடைத்த நிலையில், கடந்த 2022 ஏப்ரல் மாதம் ஆருத்ரா நிதி நிறுவனம் மோசடி அம்பலமாகி வங்கி கணக்குகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கினர்.

    ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் காஞ்சிபுரத்தை சேர்ந்த முகவர் நாகராஜ் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் முகவர் நாகராஜ் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நிலையில் நாகராஜ் ஒரு சிலருடன் ஸ்டீபன், சுகுணா தேவி வசிக்கும் வீட்டுக்கு சென்று அவர்களின் செல்போனை பறித்து கொண்டு அவர்களை வீட்டை விட்டு வெளியேற்றினர். வீட்டில் இருந்த பொருட்களை வெளியே தூக்கி வீசி விட்டு வீட்டின் கதவை பூட்டிவிட்டு சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த காஞ்சிபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேசில் ஆனந்த் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகராஜை கைது செய்து காஞ்சிபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

    ×