search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆம்னி பஸ்"

    • விடுமுறை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து நேற்று இரவு முதல் பலர் சென்னை திரும்பினர்.
    • பெரும்பாலான பஸ்கள் சாதாரண நாட்களைவிட அதிக கட்டணத்தையே வசூலித்ததாக புகார்.

    சென்னை :

    சுதந்திர தினத்தையொட்டி சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை 3 நாட்கள் தொடர் விடுமுறை வந்தது. இதையடுத்து, சென்னையில் பணிபுரியும் பெரும்பாலானோர் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டனர். இதுபோன்ற தொடர் விடுமுறை நாட்களில் ஆம்னி பஸ்களில் கிடுகிடுவென கட்டணத்தை உயர்த்திவிடுவது வாடிக்கை.

    அந்தவகையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ஆம்னி பஸ்களின் கட்டணமும் தாறுமாறாக உயர்த்தப்பட்டிருந்தது.

    இது தொடர்பான செய்திகள் வெளியிடப்பட்ட நிலையில், போக்குவரத்துத்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு நடத்தி, அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பஸ்களின் பயணிகளுக்கு கட்டணத்தை திருப்பி பெற்றுக்கொடுத்ததாக கூறப்பட்டது.

    அதுமட்டுமில்லாமல், அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பஸ்களின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கையும் விடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. இந்த நிலையில் விடுமுறை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து நேற்று இரவு முதல் பலர் சென்னை திரும்பினர்.

    எப்போதும்போல நேற்றும் சென்னை திரும்புவதற்கான ஆம்னி பஸ் கட்டணம் உயர்ந்தே காணப்பட்டது. உதாரணமாக திருநெல்வேலி, நாகர்கோவில், மதுரையில் இருந்து புறப்பட்ட ஆம்னி பஸ்களின் கட்டணம் அதிகபட்சமாக ரூ.3 ஆயிரத்து 500 வரை நிர்ணயிக்கப்பட்டு இருந்ததாகவும், திருச்சி, கோவை, சேலம், ஓசூரில் இருந்து புறப்பட்ட பஸ்களின் கட்டணம் அதிகபட்சமாக ரூ.3 ஆயிரம் என்ற அளவில் இருந்ததாகவும் பயணிகள் குற்றஞ்சாட்டினர்.

    சில பஸ்கள் மட்டும் வழக்கமான கட்டணத்தை நிர்ணயித்திருந்தாலும், பெரும்பாலான பஸ்கள் சாதாரண நாட்களைவிட அதிக கட்டணத்தையே வசூலித்ததாக கூறப்படுகிறது. அரசின் எச்சரிக்கையையும் மீறி அடாவடியாக அதிக கட்டண வசூல் தொடர்ந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    • விழுப்புரம் அருகே லாரி மீது ஆம்னி பஸ் மோதியது டிரைவர் கவலைக்கிடமாக உள்ளார்.
    • இந்த விபத்தில் ஆம்னி பஸ் முன் பகுதி முழுவதும் சேதமானது.

    விழுப்புரம்: 

    சென்னையில் இருந்து திருச்சி நோக்கி அரிசிலோடு ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று வந்தது. அது விழுப்புரம் அய்யலூர் அகரம் மேம்பாலம் அருகே வந்தபோது லாரியின் பின்னால் சென்னையில் இருந்து தூத்துக்குடி நோக்கி ஆம்னி பஸ் ஒன்று வந்தது. சுமார் 40 பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்த இந்த பஸ்சை தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த முனுசாமி என்பவர் ஓட்டி வந்தார். அப்போது ஆம்னி பஸ் டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து லாரியின் பின்புறம் வேகமாக மோதியது. இந்த விபத்தில் ஆம்னி பஸ் முன் பகுதி முழுவதும் சேதமானது.

    இந்த விபத்து குறித்த தகவல் அறிந்த விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பலத்த படுகாயங்களுடன் கிடந்த டிரைவர் முனுசாமி மற்றும் காயமடைந்த 4 பயணிகளையும் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த விபத்தினால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. போலீசார் லாரி மற்றும் ஆம்னி பஸ்சை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிர்ஷ்டவசமாக ஆம்னி பஸ்சில் இருந்த சகபயணிகள் எந்தவித காயம் இன்றி உயிர் தப்பினர். 

    • ஆம்னி பஸ் பலத்த சேதம் அடைந்தது.
    • விபத்தை ஏற்படுத்தி சென்ற வாகனத்தையும் டிரைவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    காங்கேயம் :

    நெல்லையில் இருந்து இன்று ஆம்னி பஸ் ஒன்று திருப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. குண்டடம் நால்ரோடு அருகே வந்தபோது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் நேருக்கு நேர் மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

    இதில் ஆம்னி பஸ் பலத்த சேதம் அடைந்தது. இதில் பஸ்சில் பயணித்த திருப்பூர் முதலிப்பாளையத்தை சேர்ந்த சிவசுப்ரமணி (வயது42) என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் 2 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு திருப்பூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். குண்டடம் போலீசார் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தையும் டிரைவரையும் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    அரசு விரைவு பஸ்களில் கட்டணம் குறைக்கப்பட்டதை தொடர்ந்து ஆம்னி பஸ்களிலும் அதிரடியாக கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. #OmniBus #SETC
    சென்னை:

    தமிழக அரசின் விரைவு போக்குவரத்து கழகத்தில் (எஸ்.இ.டி.சி.) இயக்கப்படும் பஸ்களில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் பயணிகள் கூட்டம் இருப்பதாகவும் மற்ற நாட்களில் எதிர்பார்த்த அளவுக்கு பயணிகள் வராததால் நிறைய இருக்கைகள் காலியாகவே இருக்கும்.

    ஆனால் அரசு பஸ்களுக்கு போட்டியாக இயக்கப்படும் தனியார் ஆம்னி பஸ்களில் கட்டணம் அதே அளவு இருந்தாலும் வேகமாக பஸ்கள் செல்வதால் குறிப்பிட்ட நேரத்திற்குள் ஊருக்கு சென்று விடலாம் என்ற எண்ணம் மக்கள் மனதில் உருவாகி விட்டது.

    இதனால் பெரும்பாலான பயணிகள் ஆம்னி பஸ்களை நாடி சென்றனர். அரசு பஸ்களில் பயணிப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வந்தது.

    இதனால் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதை ஈடுசெய்யும் வகையில் திங்கட்கிழமை முதல் வியாழக்கிழமை வரை அரசு ஏசி பஸ்களில் கட்டணம் ரூ.150 வரை அதிரடியாக குறைக்கப்பட்டது.

    படுக்கை வசதியுடன் கூடிய ஏசி பஸ்கள், கழிவறையுடன் கூடிய ஏசி பஸ்கள் என 54 பஸ்களில் இந்த கட்டண குறைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

    அரசின் இந்த நடவடிக்கை ஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. பயணிகளை தங்கள் பக்கம் தக்க வைப்பதற்கான முயற்சியாக கட்டணத்தை மேலும் குறைப்பது என ஆம்னி பஸ் உரிமையாளர்கள் முடிவு எடுத்தனர். அதன்படி ஆம்னி ஏசி பஸ்களில் ரூ.300 முதல் ரூ.455 வரை கட்டணத்தை குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.



    சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஏசி இல்லாத ஆம்னி பஸ்களில் கட்டணம் ரூ.900 ஆக இருந்தது. இப்போது ரூ.600 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல் படுக்கை வசதியுடன் கூடிய ஏசி பஸ்சில் ரூ.1,200 வாங்கப்பட்ட கட்டணத்தை இப்போது ரூ.745 ஆக குறைத்துள்ளனர்.

    இதேபோல் ஒவ்வொரு ஊர்களுக்கும் அதிரடியாக பஸ் கட்டணத்தை குறைத்துள்ளனர். இதற்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் அரசு விரைவு பஸ்களுக்கும், ஆம்னி பஸ்களுக்கும் இடையில் மீண்டும் கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது.
    ×