என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.
குண்டடம் அருகே ஆம்னி பஸ் மீது வாகனம் மோதல் ஒருவர் பலி -2 பேர் படுகாயம்
- ஆம்னி பஸ் பலத்த சேதம் அடைந்தது.
- விபத்தை ஏற்படுத்தி சென்ற வாகனத்தையும் டிரைவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
காங்கேயம் :
நெல்லையில் இருந்து இன்று ஆம்னி பஸ் ஒன்று திருப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. குண்டடம் நால்ரோடு அருகே வந்தபோது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் நேருக்கு நேர் மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
இதில் ஆம்னி பஸ் பலத்த சேதம் அடைந்தது. இதில் பஸ்சில் பயணித்த திருப்பூர் முதலிப்பாளையத்தை சேர்ந்த சிவசுப்ரமணி (வயது42) என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் 2 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு திருப்பூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். குண்டடம் போலீசார் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தையும் டிரைவரையும் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Next Story






