search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆடிட்டர்கள்"

    டாக்டர்கள் மற்றும் ஆடிட்டர்களையும் வருமான வரி கட்ட வைக்க மத்திய நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளது. #IncomeTax #CentralGovernment

    புதுடெல்லி:

    நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக, வரி வருவாயை அதிகரிக்கச் செய்யும் முயற்சிகளில் மத்திய நிதி அமைச்சகம் தீவிரமாக மேற்கொண்டுள்ளது.

    கடந்த 4 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட கடுமையான நடவடிக்கைகள் காரணமாக சுமார் 7 கோடி பேர் வருமான வரி செலுத்தும் பட்டியலுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். இதன் மூலம் வரி செலுத்தும் தனி நபர்கள் எண்ணிக்கை 68 சதவீதம் உயர்ந்துள்ளதாக வருமான வரித்துறை கூறி உள்ளது.

    வருமான வரி செலுத்துபவர்களில் 90 சதவீதம் பேர் பணிகளில் இருப்பவர்கள்தான். தொழில் செய்பவர்களில் கணிசமானவர்கள் வருமான வரி வளையத்துக்குள் வராமல் உள்ளனர். இது பற்றிய தகவல்களை வருமான வரித்துறை திரட்டியுள்ளது.

    இந்தியாவில் சுமார் 9 லட்சம் டாக்டர்கள் உள்ளனர். இவர்களில் சுமார் 50 சதவீதம் பேர் வருமான வரி செலுத்தும் பட்டியலில் இல்லை.

    அதுபோல நாடு முழுவதும் சுமார் 13 லட்சம் வழக்கறிஞர்கள் உள்ளனர். இவர்களில் வெறும் 2 லட்சத்து 60 ஆயிரம் பேர்தான் முறையாக கணக்கு காட்டி வருமான வரி கட்டுவதாக தெரிய வந்துள்ளது.

    நாடு முழுவதும் சுமார் 3 லட்சம் ஆடிட்டர்கள் உள்ளனர். பெரிய, பெரிய தொழில் நிறுவனங்களின் நிதி கணக்கை கையாள்வது இவர்கள்தான். இதற்காக மாதம் தோறும் லட்சக்கணக்கில் சம்பளம் பெறுகிறார்கள்.

    ஆனால் இவர்களில் 3-ல் ஒருவர்தான் வருமான வரி செலுத்துவது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த வகையில் பல லட்சம் டாக்டர்கள், ஆடிட்டர்கள் முறையாக வருமான வரி செலுத்தாமல் இருப்பது தெரிய வந்துள்ளது.

    எனவே இவர்களை வருமான வரி செலுத்த வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. #IncomeTax #CentralGovernment

    ×