search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Auditor"

    • மதுரையில் பெண் ஆடிட்டர் வீட்டில் 25 பவுன் நகைகள், ரூ2 லட்சம் திருட்டு சம்பந்தமாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • பெண் வேலையாள் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மதிச்சியம் காந்தி நகர் ஆசாத் தெருவை சேர்ந்தவர் கீதா. இவர் செராமிக்ஸ் கடையில் ஆடிட்டராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவரது வீட்டில் வைத்திருந்த 25 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கப்பணம் ஆகியவை திருட்டு போனது.

    திருட்டு

    நகைகள் மற்றும் பணத்தை திருடி சென்றது யார்? என்பது தெரியவில்லை. இந்த திருட்டு குறித்து ஆடிட்டர் கீதா மதிச்சியம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அவர் தனது புகாரில், தன்னுடைய வீட்டில் வேலை செய்யும் பெண் வேலையாள் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். திருட்டு போன நகைகள் மற்றும் பணத்தின் மொத்த மதிப்பு ரூ.14 லட்சம் என்று கூறப்படுகிறது. திருட்டு சம்பவம் தொடர்பாக ஆடிட்டர் கீதா வீட்டில் பணிபுரியும் பெண் ஊழியர் மற்றும் சிலரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    மதுரை புதூர் மண்மலைச் சாமி தெருவை சேர்ந்தவர் ஆனந்த். இவர் செக்யூரிட்டி சர்வீஸ் மற்றும் ஈவன்ட் மேனேஜ்மென்ட் நடத்தி வருகிறார். இவருடைய அலுவலகம் திலகர்திடல் பகுதியில் உள்ளது. இவர் வெளியே சென்றிருந்தபோது அலுவலகத்துக்குள் புகுந்த மர்ம நபர், அங்கு வைக்கப் பட்டிருந்த

    ரூ.36ஆயிரம் பணம் மற்றும் கம்ப்யூட்டர் மானிட்டர், சி.பி.யூ., கீபோர்டு, மவுஸ் முதலியவைகளையும் திருடிச் சென்றுவிட்டார்.

    இந்த திருட்டு குறித்து திலகர்திடல் போலீசில் ஆனந்த் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அலுவலகத்தில் புகுந்து பணம் மற்றும் பொருட்களை திருடி சென்ற மர்மநபர் யார்? என்று துப்பு துலக்குகின்றனர்.

    • நிறுவனத்தில் முதலீட்டு தொகைக்கு 15 சதவீதம் வட்டி தருவதாகவும் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளனர்.
    • ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பவுன் குமார் திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.

    திருச்சி:

    சென்னை புரசைவாக்கம் ரித்தர்டன் சாலை சர்ச் லைன் பகுதியைச் சேர்ந்தவர் பவுன்குமார் (வயது 35). ஆடிட்டரான இவர் புதிய தொழில் தொடங்கும் ஆர்வத்தில் இருந்து வந்தார். அதற்காக பணம் முதலீடு செய்யவும் தயாராக இருந்தார்.

    இதனை அறிந்துகொண்டு அவரிடம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சேலம் மாசிநாயக்கன்பட்டியை சேர்ந்த சங்கர்பாபு, திருப்பூர் மாவட்டம் மூலனூரை சேர்ந்த கிருஷ்ணபிரகாஷ் ஆகியோர் அறிமுகம் ஆனார்கள்.

    அப்போது வெட்ரா கேப்பிட்டல்ஸ் என்ற வணிக நிறுவனத்தை மைக் கேல் என்பவர் நடத்தி வருவதாகவும், அவரது நிறுவனத்தில் முதலீட்டு தொகைக்கு 15 சதவீதம் வட்டி தருவதாகவும் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளனர். இதனை முழுமையாக நம்பிய ஆடிட்டர் பவுன் குமார் பணத்தை முதலீடு செய்யவும் தயாரானார்.

    அதன்படி சென்னையில் இருந்து திருச்சி வந்த அவர், நெம்பர் 1 டோல் கேட்டில் அலுவலகம் அமைத்துள்ள சங்கர்பாபு, கிருஷ்ணபிரகாஷ் ஆகியோரிடம் கடந்த 10.7.2019-ல் முதல் கட்டமாக ரூ.8.50 லட்சம் பணத்தை வழங்கினார். தொடர்ந்து அடுத்தடுத்த தவணைகளில் ரூ.10 லட்சம், ரூ.32 லட்சம் என மொத்தம் ரூ.50 லட்சத்து 50 ஆயிரத்தை பெற்றுக்கொண்டனர். காலம் கடந்தும் அவர்கள் முதலீட்டு பணத்துக்கான வட்டி எதையும் வழங்கவில்லை.

    முதலில் கனிவாக பேசிய 2 பேரும் பின்னர் பவுன்குமாரை மிரட்ட தொடங்கினர். அதன் பின்னரே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பவுன் குமார் திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சங்கர்பாபு, கிருஷ்ணபிரகாஷ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அவர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    • கல்வி கற்கும் மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
    • பட்டயக் கணக்காளர்களின் தேவை அதிகம் உள்ளது.

    கோவை

    பட்டய கணக்காளர் மையமாக கோவை திகழ்ந்து வருகிறது. நாடு முழுவதும் இக்கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து ள்ளது.

    இதுகுறித்து தென்னி ந்திய பட்டய கணக்காளர் நிறுவனத்தின் கோவையை சேர்ந்த முன்னாள் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    மத்திய அரசின் பெரு நிறுவன விவகாரங்கள் துறையின் கீழ் தன்னாட்சி அந்தஸ்துடன் செயல்பட்டு வருகிறது. இந்திய பட்டய கணக்காளர் நிறுவனம் (ஐசிஏஐ).

    நாடு முழுவதும் பட்டய கணக்காளர் கல்வி குறித்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படு த்துவதில் தொடங்கி தேர்வுகளை நடத்துவது, சி.ஏ-வாக பணியாற்ற தொடங்கிய பின் தேவையான பயிற்சிகளை அளித்தல், பணியை கண்காணித்தல், தவறு செய்பவ ர்களுக்கு தண்ட னை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு நடவடி க்கைகளை இந்தி ய பட்டய கணக்கா ளர் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

    பட்டயக் கணக்காளர்க ளின் தேவை அதிகம் உள்ளது.

    எனவே, எத்தனை லட்சம் பேர் தேர்ச்சி பெற்றாலும் நல்ல ஊதியத்துடன் வேலை வாய்ப்பு காத்திருக்கிறது. இந்தியாவில் முதல் முறையாக கடந்த 2018-ம் ஆண்டு தமிழக அரசுடன் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பட்டய கணக்காளர் கல்வி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.

    நுழைவுத்தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகளும் சென்னையி ல் தொடர்ந்து நடத்தப்ப ட்டு வருகிறது. இதற்கென பிரத்யேக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது,இத்திட்டத்தால் இன்று கிராமப்புற மாணவ, மாணவிகள் மத்தியில் பட்டய கணக்காளர் கல்வி குறித்த விழிப்புணர்வு பல மடங்கு அதிகரித்துள்ளது.

    நாடு முழுவதும் 3.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பட்டய கணக்காளர்கள் உள்ளனர். 7.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பட்டய கணக்காளர் கல்வி பயின்று வருகின்றனர். இதில் 40 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் மாணவிகள். நாட்டில் மொத்தம் பணியாற்றும் பட்டய கணக்காளர்களில் 28 சதவீதத்தினர் பெண்கள்.

    பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்படுவதால் பட்டய கணக்காளர் கல்வி மேற்கொள்ள விரும்பும் மாணவிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் பட்டய கணக்காளர் கல்வியின் மையமாக கோவை திகழ்கிறது.

    தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளாவில் இருந்தும் மாணவ, மாணவிகள் பலர் கோவையில் தங்கி பட்டய கணக்காளர் கல்வி பயின்று வருகின்றனர்.பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் ஏழை மாணவ, மாணவிகளுக்கு பட்டய கணக்காளர் கல்வி மேற்கொள்ள இந்திய பட்டய கணக்காளர் நிறுவனம் சார்பில் ஊக்கத்தொகை உள்ளிட்ட பல்வேறு நிதியுதவி திட்டங்கள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்திய ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டாலர் மதிப்பு உயர்வை நோக்கி பயணித்து வருகிறது.
    • அடுத்த 3 மாதங்களில் கிடைக்கும் டாலருக்குபார்வேர்டு கான்ட்ராக்ட் பாதுகாப்பு அளிப்பது நல்லது.

    திருப்பூர் :

    திருப்பூரில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பின்னலாடைகளுக்கு அன்னிய பண மதிப்பு அடிப்படையிலேயே விலை நிர்ணயிக்கப்படுகிறது. பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தில் 50 சதவீதத்துக்கு மேல் அமெரிக்க டாலரிலேயே நடக்கிறது.

    இந்திய ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டாலர் மதிப்பு உயர்வை நோக்கி பயணித்து வருகிறது. கடந்த மார்ச் மாத துவக்கத்தில் 76.91 ரூபாயாக இருந்த ஒரு டாலரின் மதிப்பு தற்போது 78.17 ரூபாயை எட்டியுள்ளது. டாலரில் மேற்கொள்ளப்படும் ஏற்றுமதி மூலம் திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்களுக்கு லாபத்தை ஈட்டித்தரும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

    ஆனாலும் எவ்வளவு காலம் வரை டாலர் மதிப்பில் இதேநிலை நீடிக்கும் என்பது யாராலும் கணிக்க முடியாததாக உள்ளது. தற்போதைய மதிப்பிலிருந்து டாலர் மதிப்பு மேலும் உயரவும் வாய்ப்பு உள்ளது. சரிந்து விழுந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.இப்படி ஒரு குழப்பமான சூழலில் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் எத்தகைய பாதுகாப்பு வழிமுறைகளை கையாளவேண்டும் என விளக்குகிறார் ஆடிட்டர் தனஞ்செயன்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    உக்ரைன் போர் எதிரொலியாக அன்னிய பண மதிப்புகளில் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. குறிப்பாக இந்திய ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டாலர் மதிப்பு 78 ரூபாயை எட்டியுள்ளது. இதனால்திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பிய ஆடைக்கு, கூடுதல் தொகை கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.டாலர் மதிப்பு இதே நிலை தொடரும் என நிச்சயமாக சொல்லிவிட முடியாது.

    வரும் நாட்களில் மேலும் உயர்ந்து 90 ரூபாயை எட்டலாம். 70 ரூபாயாக சரியவும் செய்யலாம்.தற்போதைய சூழல் என்பது மிகவும் சிக்கல் நிறைந்தது என்பதை திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் உணர்ந்துகொள்ளவேண்டும்*ச.துர்யமாக செயல்படுவது மிகவும் அவசியம். ஏற்றுமதி ஆர்டர்களுக்கு வங்கிகள் வழங்கும் பார்வேர்டு கான்ட்ராக்ட் வசதி மூலம் பாதுகாப்பு அளித்துக்கொள்ளவேண்டும். வரும் நாட்களில் டாலர் மதிப்பு குறைந்தாலும் ஏற்றுமதி நிறுவனத்துக்கு உரிய தொகை கிடைத்துவிடும். இழப்பு ஏற்படாமல் தப்பித்துக்கொள்ளலாம். அலட்சியம் காட்டினால், டாலர் மதிப்பு குறையும்பட்சத்தில் ஏற்றுமதியாளர்கள் பெரும் நஷ்டத்தை சந்திக்கவேண்டிவரும்.

    அடுத்த 3 மாதங்களில் கிடைக்கும் டாலருக்குபார்வேர்டு கான்ட்ராக்ட் பாதுகாப்பு அளிப்பது நல்லது. நீண்ட கால பார்வேர்டு கான்ட்ராக்ட் மேற்கொள்வது இப்போதைய சூழலில் ஆபத்தில் தள்ளிவிடும்.அதாவதுஅடுத்த ஓராண்டுக்குப்பின் குறிப்பிட்ட அளவு டாலர் கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் பார்வேர்டு கான்ட்ராக்ட் மேற்கொள்ள கூடாது. 78 ரூபாயாக உள்ள டாலர் அடுத்த ஓராண்டில் 80 அல்லது 90 ரூபாயாக உயரலாம். அப்போதுஅந்த மதிப்பு அடிப்படையிலேயே ஆடை தயாரிப்புக்கான பொருட்களை இறக்குமதி செய்யவேண்டிவரும். இதனால் ஆடை உற்பத்தி செலவினமும் அதிகரிக்கும்.நீண்ட காலத்துக்கான பார்வேர்டு கான்ட்ராக்ட் மேற்கொண்டால் எதிர்காலத்தில் டாலர் மதிப்பு உயர்ந்தாலும் 78 ரூபாய்தான் கிடைக்கும்.

    இது ஏற்றுமதி நிறுவனங்களுக்கு பெரும் லாபம் இழப்பை ஏற்படுத்திவிடும். நஷ்டத்தை சந்திக்கவேண்டிவரலாம்.ஒவ்வொரு ஏற்றுமதியாளர்களும் தங்கள் நிறுவனத்துக்கு உகந்த பாதுகாப்பு வழிகளை பின்பற்றி இழப்பு ஏற்படாமல் பாதுகாத்துக்கொள்ளவேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். 

    தமிழகத்தில் சிறந்த ஆடிட்டர்களை உருவாக்க பிளஸ் 2 முடித்தவுடன் ஆடிட்டர் படிப்பிற்கு 25 ஆயிரம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். #MinisterSengottaiyan
    கோபி:

    கோபியில் கீரிப்பள்ள ஓடை, ஈரோடை அமைப்பு சார்பில் தூர்வாரப்பட உள்ளது. இன்று காலை தொடங்கிய இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார்.

    அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கலந்து கொண்டு பணியைத் துவக்கி வைத்தார்.

    தொடர்ந்து நிருபர்களிடம் அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:-

    தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோரின் தலைமையில் இந்த அரசு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இந்தியாவில் 2.85 லட்சம் ஆடிட்டர்கள் தான் உள்ளனர். தமிழகத்தில் சிறந்த ஆடிட்டர்களை உருவாக்க பிளஸ் 2 முடித்தவுடன் மாணவர்களுக்கு ஆடிட்டர் படிப்பிற்கு தமிழகத்தில் முதற்கட்டமாக 25 ஆயிரம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

    பின்னர், அவர்களுக்கு சிறந்த ஆடிட்டர்களைக் கொண்டு முதன்மைத் தேர்வு எழுத பயிற்சியளிக்கப்படும்.



    தமிழகத்தில் 52 ஆயிரம் குழந்தைகளுக்கு எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் அரசு பள்ளிகளில் துவக்கப்பட உள்ளன. இதற்கு தாய்மொழிதான் முன்னுரிமை அளிக்கப்படும். பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை ஆங்கில் வழியில் படிக்க வைக்க வேண்டும் என விரும்பினால் ஆங்கில வழி கல்வியும் கற்றுத் தரப்படும். அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் வழியில் செயல்படும் இந்த அரசு இருமொழி கொள்கையைப் பின்பற்றும்.

    பள்ளிகளில் மாணவிகள் பாலியில் தொந்தரவுக்கு ஆளானால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பழைய வரலாறு மாறாத வகையில் பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும். கோபியை குப்பையில்லாத நகரமாக மாற்ற ரூ.3 கோடியே 86 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    குடிநீர் திட்டப் பணிகளுக்காக ரூ.51 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ரூ.52 லட்சம் மதிப்பீட்டில் கீரிப்பள்ள ஓடையை கான்கிரீட் தளமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #MinisterSengottaiyan

    டாக்டர்கள் மற்றும் ஆடிட்டர்களையும் வருமான வரி கட்ட வைக்க மத்திய நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளது. #IncomeTax #CentralGovernment

    புதுடெல்லி:

    நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக, வரி வருவாயை அதிகரிக்கச் செய்யும் முயற்சிகளில் மத்திய நிதி அமைச்சகம் தீவிரமாக மேற்கொண்டுள்ளது.

    கடந்த 4 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட கடுமையான நடவடிக்கைகள் காரணமாக சுமார் 7 கோடி பேர் வருமான வரி செலுத்தும் பட்டியலுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். இதன் மூலம் வரி செலுத்தும் தனி நபர்கள் எண்ணிக்கை 68 சதவீதம் உயர்ந்துள்ளதாக வருமான வரித்துறை கூறி உள்ளது.

    வருமான வரி செலுத்துபவர்களில் 90 சதவீதம் பேர் பணிகளில் இருப்பவர்கள்தான். தொழில் செய்பவர்களில் கணிசமானவர்கள் வருமான வரி வளையத்துக்குள் வராமல் உள்ளனர். இது பற்றிய தகவல்களை வருமான வரித்துறை திரட்டியுள்ளது.

    இந்தியாவில் சுமார் 9 லட்சம் டாக்டர்கள் உள்ளனர். இவர்களில் சுமார் 50 சதவீதம் பேர் வருமான வரி செலுத்தும் பட்டியலில் இல்லை.

    அதுபோல நாடு முழுவதும் சுமார் 13 லட்சம் வழக்கறிஞர்கள் உள்ளனர். இவர்களில் வெறும் 2 லட்சத்து 60 ஆயிரம் பேர்தான் முறையாக கணக்கு காட்டி வருமான வரி கட்டுவதாக தெரிய வந்துள்ளது.

    நாடு முழுவதும் சுமார் 3 லட்சம் ஆடிட்டர்கள் உள்ளனர். பெரிய, பெரிய தொழில் நிறுவனங்களின் நிதி கணக்கை கையாள்வது இவர்கள்தான். இதற்காக மாதம் தோறும் லட்சக்கணக்கில் சம்பளம் பெறுகிறார்கள்.

    ஆனால் இவர்களில் 3-ல் ஒருவர்தான் வருமான வரி செலுத்துவது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த வகையில் பல லட்சம் டாக்டர்கள், ஆடிட்டர்கள் முறையாக வருமான வரி செலுத்தாமல் இருப்பது தெரிய வந்துள்ளது.

    எனவே இவர்களை வருமான வரி செலுத்த வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. #IncomeTax #CentralGovernment

    ×