search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிமுக பொதுக்குழு கூட்டம்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வரும் ஜூலை 11ம் தேதி அன்று மீண்டும் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன்அறிவித்தார்.
    • இரட்டை தலைமையை ரத்து செய்து, வலுவான ஒற்றை தலைமையை கொண்டுவர உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பரபரப்பான சூழலில் கூடிய அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படாமல் நிறைவு பெற்றது.

    இதற்கிடையே, பொதுக்குழு உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று வரும் ஜூலை 11ம் தேதி அன்று மீண்டும் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன்அறிவித்தார்.

    மேலும், இரட்டை தலைமையை ரத்து செய்து, வலுவான ஒற்றை தலைமையை கொண்டுவர உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்நிலையில், ஒற்றைத் தலைமை விவகாரத்தால் அதிமுக பொதுக்குழு கூட்டம் வானகரம் மண்டபத்தில் சலசலப்புடன் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பொதுக்குழு உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் ஜூலை 11-ம் தேதி மீண்டும் நடைபெறும்.
    • அதிமுக பொதுக்குழு கூட்ட மேடையிலிருந்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வெளியேறினர்.

    அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்று வந்த நிலையில், அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டது. பொதுக்குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவராக தீர்மானம் நிராகரிப்பை அறிவித்தனர்.

    பின்னர், பேசிய அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் பொதுக்குழு உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் ஜூலை 11-ம் தேதி மீண்டும் நடைபெறும் என அறிவித்தார்.

    இதையடுத்து, அதிமுக பொதுக்குழு கூட்ட மேடையிலிருந்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வெளியேறினர். ஈபிஎஸ் ஆதரவாளர்கள் ஓபிஎஸ்க்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அப்போது ஓபிஎஸ் மீது தண்ணீர் பாட்டில் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தற்காலிக அவைத்தலைவராக தேர்வு செய்யப்பட்ட தமிழ் மகன் உசேன் உரை.

    அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அவைத்தலைவராக தேர்வு செய்யப்பட்ட தமிழ் மகன் உசேன் உரையாற்றினார்.

    அப்போது பேசிய அவர், பொதுக்குழு உறுப்பினர்கள் கோரிக்கையை ஏற்று அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் ஜூலை 11-ம் தேதி காலை 9.15 மணிக்கு நடைபெறும் என்று அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் அறிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பொதுக்குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவராக தீர்மானங்களை வாசித்து வருகின்றனர்.
    • 23 தீர்மானங்களை பொதுக்குழு நிராகரிக்கிறது என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் காட்டமாக உரையாற்றினார்.

    பரபரப்பான சூழலில் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் வானகரம் ஸ்ரீவாருமண்டபத்தில் துவங்கியது. அதிமுகவின் தற்காலிக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் பொதுக்குழுகூட்டம் நடைபெறுகிறது.

    பொதுக்குழுவை அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் நடத்துவதற்கு பன்னீர் செல்வம் முன்மொழிந்தார். பன்னீர்செல்வம் முன்மொழிந்ததை எடப்பாடி பழனிசாமி வழிமொழிந்தார்.

    இந்நிலையில், பொதுக்குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவராக தீர்மானங்களை வாசித்து வருகின்றனர்.

    இப்போது 23 தீர்மானங்களை பொதுக்குழு நிராகரிக்கிறது என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் காட்டமாக உரையாற்றினார்.

    பின்னர் பேசிய கே.பி.முனுசாமி, அதிமுகவுக்கு ஒற்றைத்தலைமை தீர்மானம் எப்போது வருகிறதோ அப்போதுதான் 23 தீர்மானமும் நிறைவேறும் என்று கூறியுள்ளார்.

    • ஓபிஎஸ் ஒப்புதல் தந்த 23 தீர்மானங்கள் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட வாய்ப்பில்லை என்று தகவல்.
    • இதனால், அதிமுக பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை பற்றி மட்டுமே விவாதிக்கப்பட உள்ளதாகவும் திட்டம்.

    அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் தொடங்கியது. ஒரே மேடையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ள நிலையில் பொதுக்குழு கூட்டம் கூடியது.

    முன்னதாக, கூட்ட நெரிசல் காரணமாக ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகியோர் மாற்று வழியில் வானகரம் ஸ்ரீவாருமண்டம் வந்தனைந்தனர். இதனால் கூட்டம் தொடங்க தாமதமானது.

    முதலில் ஓபிஎஸ் மண்டபத்திற்கு வருகை தந்த நிலையில், ஓபிஎஸ்சை வெளியே போகச் செல்லியும், ஒற்றைத்தலைமை வேண்டும் என்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் முழுக்கம் எழுப்பினர்.

    பின்னர், வானகர மண்டபத்திற்கு எடப்பாடி பழனிசாமி வந்தடைந்தார். எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

    முன்னதாகவே ஓபிஎஸ் வந்தாலும் அவர் மேடை ஏறாமல் இருந்த நிலையில், தாமதமாக வந்த ஈபிஎஸ் முதலில் மேடை ஏறினார்.

    இந்நிலையில், அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியுள்ளது. இதில், ஓபிஎஸ் ஒப்புதல் தந்த 23 தீர்மானங்கள் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட வாய்ப்பில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. உயர் நீதிமன்றம் புதிய தீர்மானங்களை கொண்டு வரக்கூடாது என உத்தரவிட்ட நிலையில் எந்த தீர்மானமும் கொண்டு வரப்படாது எனவும் கூறப்படுகிறது.

    இதனால், அதிமுக பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை பற்றி மட்டுமே விவாதிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகிவுள்ளது.

    • அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தனது வீட்டில் கோமாதா பூஜை நடத்தி வழிபட்டார்.
    • மதுரவாயல், வானகரம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

    அதிமுக பொதுக்குழு கூட்டம் வானகரத்தில் இன்று நடைப்பெற உள்ளது. அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க சென்னை இல்லத்தில் இருந்து அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி புறப்பட்டார். இவருக்கு வழிநெடுகிலும் அதிமுக தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்பளித்து வருகின்றனர்.

    அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தனது வீட்டில் கோமாதா பூஜை நடத்தி வழிபட்டார். பின்னர் ஓ.பன்னீர்செல்வமும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக புறப்பட்டார்.

    இவர்களை வரவேற்பதற்காக தொண்டர்கள் சாலை எங்கும் சூழ்ந்துள்ளனர். இந்நிலையில் மதுரவாயல், வானகரம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கோயம்பேடு மேம்பாலத்தில் இருந்து மதுரவாயல் வரை வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரி செல்வோர் போக்குவரத்து நெரிசலால் கடும் அவதிப்பட்டுள்ளனர்.

    மேலும், புழல்- தாம்பரம் வெளிவட்ட சாலையில் இருந்து கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    • 23-ந் தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் திட்டமிட்டபடி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
    • பொதுக்குழு கூட்டத்தை எப்படியாவது தடுத்து நிறுத்திவிட வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வமும், அவரது ஆதரவாளர்களும் மேற்கொண்ட முயற்சிகள் கை கொடுக்கவில்லை.

    சென்னை:

    அ.தி.மு.க. செயற்குழு, பொதுக்குழு கூட்டம் சென்னையில் ஜூன் 23-ந்தேதி நடைபெறும் என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தனர்.

    அந்த கூட்டத்தில் என்னென்ன தீர்மானங்கள் கொண்டு வருவது என்பது பற்றி ஆலோசனை நடத்துவதற்காக சமீபத்தில் அ.தி.மு.க. தலைமை கழகத்தில் கூட்டம் நடத்தப்பட்டது.

    அந்த கூட்டத்தில் அ.தி.மு.க.வுக்கு இரட்டை தலைமைக்கு பதில் ஒற்றை தலைமை கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. அ.தி.மு.க.வை முன்பு போல விறுவிறுப்பாக செயல்பட வைக்க ஒற்றைத் தலைமை முறையே சிறந்தது என்று எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் வலியுறுத்தினார்கள்.

    இதற்கு ஓ.பன்னீர் செல்வமும், அவரது ஆதரவாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அ.தி.மு.க.வில் மிகப்பெரிய பூகம்பம் வெடித்து உள்ளது. மீண்டும் அ.தி.மு.க. தலைவர்கள் இரு பிரிவாக பிரிந்து காரசாரமாக கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

    ஒற்றைத்தலைமை விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை சமரசம் செய்ய எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. இரட்டை தலைமையில் உறுதியாக இருக்கும் ஓ.பன்னீர் செல்வம் தனக்கு எதிராக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்படலாம் என்று கருதுகிறார்.

    எனவே 23-ந்தேதி நடத்த திட்டமிட்டுள்ள அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை தள்ளி வைக்க வேண்டும் என்று இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, ஓ.பன்னீர் செல்வம் கடிதம் எழுதி உள்ளார். ஆனால் இதை ஏற்க எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக மறுத்து விட்டார்.

    23-ந் தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் திட்டமிட்டபடி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    பொதுக்குழு கூட்டத்தை எப்படியாவது தடுத்து நிறுத்திவிட வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வமும், அவரது ஆதரவாளர்களும் மேற்கொண்ட முயற்சிகள் கை கொடுக்கவில்லை. அ.தி.மு.க.வில் பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருப்பதால் அந்த அணியினர் பொதுக்குழு கூட்டத்தை நடத்தி முடிக்க ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    நேற்று அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் வானகரம் திருமண மண்டபத்துக்கு சென்று பொதுக்குழு கூட்டத்தை எப்படி நடத்துவது என்று ஆய்வு செய்தனர். இன்றும் அவர்கள் பொதுக்குழு உறுப்பினர்களில் யார், யாரை எந்தெந்த பகுதிகளில் அமர வைக்க வேண்டும் என்று ஆய்வு செய்தனர்.

    இதனால் 23-ந் தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூடுவது உறுதியாகி இருக்கிறது.

    இதற்கிடையே அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன. நேற்று அந்த மனுக்கள் மீதான விசாரணை நடந்தது. இன்று 2-வது நாளாகவும் வக்கீல்கள் வாதம் நடத்தினார்கள்.

    அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் தொடர்பாக கோர்ட்டு என்ன முடிவு எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கோர்ட்டு இதில் தலையிட மறுத்தாலோ அல்லது எடப்பாடி பழனிசாமி அணியினருக்கு ஆதரவாக தீர்ப்பளித்தாலோ அது ஓ.பன்னீர்செல்வம் அணியினருக்கு மிகப்பெரிய பின்னடைவாக மாறும்.

    இந்தநிலையில் எடப்பாடி பழனிசாமி அணியினர் பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதற்கு சட்ட ரீதியாகவும் தயாராகி வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக பொதுக்குழு உறுப்பினர்களிடம் இருந்து ஆதரவு கடிதங்கள் பெறப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க. பொதுக்குழுவில் சுமார் 2700 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் சுமார் 2300 பேர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து கடிதம் கொடுத்துள்ளனர். அந்தந்த மாவட்ட செயலாளர்கள் மூலம் இந்த கடிதம் பெறப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை 23-ந் தேதி திட்டமிட்டபடி நடத்த வேண்டும் என்று அந்த கடிதத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் எழுதி கையெழுத்திட்டுள்ளனர். மேலும் இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவும் அவர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

    இதனால் 90 சதவீதம் அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருப்பது உறுதியாகி இருக்கிறது. இதன் அடிப்படையில் அ.தி.மு.க. பொதுக்குழுவை உரிய நேரத்தில் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    ஏற்கனவே திட்டமிட்டப்படி தீர்மானக்குழு வரையறுத்துள்ள தீர்மானங்களை பொதுக்குழுவில் தாக்கல் செய்து ஒப்புதல் பெற எடப்பாடி பழனிசாமி அணியினர் முடிவு செய்து உள்ளனர். அப்போது ஒற்றைத்தலைமை தீர்மானமும் கொண்டு வரப்படும் என்று தெரிகிறது.

    குறிப்பாக பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அந்த பதவிக்கு தேர்தல் நடத்துவது தொடர்பாக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் கொண்டு வந்து நிறைவேற்றப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை தடுத்து நிறுத்த ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். அதற்கு வெற்றி கிடைக்குமா என்பது தெரியவில்லை. அதே நேரத்தில் அவர் தேர்தல் ஆணையத்திற்கும் கடிதம் எழுதி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அந்த கடிதத்தில் அவர், "இரட்டை தலைமையில் இருப்பவர்கள் கையெழுத்து போட்டு கொடுத்தால் மட்டுமே அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும். அ.தி.மு.க.வில் ஒற்றைத்தலைமை கொண்டு வரப்பட்டால் அதை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க கூடாது" என்று கூறி இருப்பதாக தெரியவந்துள்ளது. அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றும் நிலையில் ஓ.பன்னீர் செல்வத்தின் கோரிக்கையை தலைமை தேர்தல் ஆணையம் ஏற்குமா என்பது சந்தேகம் என்று அரசியல் நிபுணர்கள் கூறி உள்ளனர்.

    ×