search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    உச்சகட்ட பரபரப்பில் கூடியது அதிமுக பொதுக்குழு
    X

    உச்சகட்ட பரபரப்பில் கூடியது அதிமுக பொதுக்குழு

    • ஓபிஎஸ் ஒப்புதல் தந்த 23 தீர்மானங்கள் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட வாய்ப்பில்லை என்று தகவல்.
    • இதனால், அதிமுக பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை பற்றி மட்டுமே விவாதிக்கப்பட உள்ளதாகவும் திட்டம்.

    அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் தொடங்கியது. ஒரே மேடையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ள நிலையில் பொதுக்குழு கூட்டம் கூடியது.

    முன்னதாக, கூட்ட நெரிசல் காரணமாக ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகியோர் மாற்று வழியில் வானகரம் ஸ்ரீவாருமண்டம் வந்தனைந்தனர். இதனால் கூட்டம் தொடங்க தாமதமானது.

    முதலில் ஓபிஎஸ் மண்டபத்திற்கு வருகை தந்த நிலையில், ஓபிஎஸ்சை வெளியே போகச் செல்லியும், ஒற்றைத்தலைமை வேண்டும் என்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் முழுக்கம் எழுப்பினர்.

    பின்னர், வானகர மண்டபத்திற்கு எடப்பாடி பழனிசாமி வந்தடைந்தார். எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

    முன்னதாகவே ஓபிஎஸ் வந்தாலும் அவர் மேடை ஏறாமல் இருந்த நிலையில், தாமதமாக வந்த ஈபிஎஸ் முதலில் மேடை ஏறினார்.

    இந்நிலையில், அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியுள்ளது. இதில், ஓபிஎஸ் ஒப்புதல் தந்த 23 தீர்மானங்கள் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட வாய்ப்பில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. உயர் நீதிமன்றம் புதிய தீர்மானங்களை கொண்டு வரக்கூடாது என உத்தரவிட்ட நிலையில் எந்த தீர்மானமும் கொண்டு வரப்படாது எனவும் கூறப்படுகிறது.

    இதனால், அதிமுக பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை பற்றி மட்டுமே விவாதிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகிவுள்ளது.

    Next Story
    ×