search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிபர் புதின்"

    • ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
    • அப்போது, உக்ரைன் போரில் பேச்சுவார்த்தை மட்டுமே ஒரே தீர்வு என வலியுறுத்தினார்.

    புதுடெல்லி:

    இந்தியா, ரஷியா உச்சிமாநாடு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியாவில் நடந்தது. அதில் கலந்து கொள்வதற்காக ரஷிய அதிபர் புதின் இந்தியா வந்திருந்தார். அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு இந்த உச்சி மாநாடு ரஷியாவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் உக்ரைன் போர் காரணமாக இந்தியா, ரஷியா உச்சி மாநாடு குறித்த அறிவிப்பை ரஷியா வெளியிடவில்லை.

    இந்நிலையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

    இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:

    உக்ரைன் போர் குறித்து அதிபர் புதினிடம் பிரதமர் மோடி பேசியுள்ளார். இந்த விவகாரத்தில் பேச்சுவார்த்தை மட்டுமே ஒரே தீர்வு என மோடி வலியுறுத்தி உள்ளார்.

    ஜி20 மாநாட்டிற்கு இந்தியா தலைமையேற்றது குறித்தும், இந்தியா-ரஷியா இடையிலான ஆற்றல் ஒத்துழைப்பு, வர்த்தகம், முதலீடுகள், மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து புதினிடம் பிரதமர் மோடி பேசியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், ரஷிய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பிரதமர் மோடியிடம் உக்ரைன் போர் தொடர்பான ரஷியாவின் அடிப்படை மதிப்பீடுகள் குறித்து ரஷிய அதிபர் புதின் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • உக்ரைன், ரஷியா இடையிலான போர் 7 மாதத்தைக் கடந்துள்ளது.
    • அமைதி பேச்சுவார்த்தைக்கு இந்தியாவும், சீனாவும் ஆதரவளித்தன என அதிபர் புதின் தெரிவித்தார்.

    மாஸ்கோ:

    உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24-ம் தேதி போர் தொடுத்தது. ஏழு மாதம் கடந்தும் போர் நீடித்து வருகிறது.

    இதற்கிடையே, உக்ரைனில் கைப்பற்றிய கிழக்கு மற்றும் தெற்கே உள்ள 4 பிராந்தியங்களை கடந்த 1-ம் தேதி ரஷியாவுடன் இணைத்துக் கொண்டார் அதிபர் புதின்.

    இந்நிலையில், ரஷிய அதிபர் புதின் கஜகஸ்தான் சென்றிருந்தார். அப்போது அவர் அளித்த பேட்டி:

    உக்ரைன் விவகாரத்தில் அமைதி பேச்சுவார்த்தை மூலம் முடிவு காணவேண்டும் என இந்தியாவும், சீனாவும் வலியுறுத்தி வருகிறது. இரு நாடுகளுமே எங்களின் நட்புறவு நாடுகள். அவர்களின் நிலைப்பாட்டை நன்கு உணர்ந்துள்ளேன்.

    இதில் உக்ரைனின் தற்போதைய நிலைப்பாடு என்ன என்பது தெரிய வேண்டியது அவசியம். எனவே இந்த விவகாரத்தில் அமைதி பேச்சுவர்த்தைக்கு இந்தியாவும், சீனாவும் தனது ஆதரவை அளித்தன. அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தேவையில்லை என தெரிவித்தார்.

    • உக்ரைன் மக்களுக்கு ரஷிய பாஸ்போர்ட்டுகளை ரஷியா வழங்கி வருகிறது.
    • உக்ரைனில் இருந்து ரஷியா வரும் மக்களுக்கு நிதியுதவி வழங்க அதிபர் புதின் உத்தரவிட்டார்.

    மாஸ்கோ:

    உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 6 மாதங்களைக் கடந்தும் சண்டை நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், உக்ரைனில் இருந்து ரஷியாவிற்கு வரும் மக்களுக்கு நிதியுதவி வழங்கும் ஆணையை ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் பிறப்பித்துள்ளார். பொதுமக்களுக்கு நிதியுதவி வழங்கும் ஆணையில் இன்று அவர் கையெழுத்திட்டார்.

    ஓய்வூதியம் பெறுவோர், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் உள்பட உக்ரைனை விட்டு ரஷியாவிற்கு வரும் அனைவருக்கும் நிதியுதவி வழங்கப்படும். கடந்த பிப்ரவரி 18 முதல் உக்ரைன் பிரதேசத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ள மக்களுக்கு 10,000 ரூபிள் மாதாந்திர ஓய்வூதியம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    கிழக்கு உக்ரைனில் பிப்ரவரியில் ரஷியாவால் சுதந்திர பிராந்தியங்களாக அங்கீகரிக்கப்பட்ட ரஷிய ஆதரவு பிராந்தியங்களான சுய ஆட்சி நடைபெறும் டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதியிலிருந்து வருவோருக்கும் நிதியுதவி வழங்கப்படும்.

    ஏற்கனவே, உக்ரைன் மக்களுக்கு ரஷிய பாஸ்போர்ட்டுகளை ரஷியா வழங்கி வருகிறது.

    • உலகின் பல்வேறு பகுதிகளில் பதற்றமான சூழலை அமெரிக்கா உருவாக்கி வருகிறது.
    • உக்ரைன், தைவானில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழலுக்கும் அமெரிக்காவே காரணம் என்றார் அதிபர் புதின்.

    மாஸ்கோ:

    உக்ரைனில் நீண்ட நாட்களாக நடைபெறும் சண்டை உள்பட உலகின் பல்வேறு பகுதிகளில் பதற்றமான சூழலை அமெரிக்கா உருவாக்கி வருகிறது என ரஷிய அதிபர் புதின் குற்றம்சாட்டினார். மேலும், அமெரிக்க சபாநாயகர் பெலோசியின் தைவான் பயணத்தைக் குறிப்பிட்டு பேசினார். இதுதொடர்பாக, அதிபர் புதின் கூறியதாவது:

    மோதல் பகுதிகளில் போரை நீட்டிக்கும் நோக்கத்துடன் அமெரிக்கா நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. இந்த மோதலை நீடிக்க அமெரிக்கா முயல்வதையே உக்ரைன் நிலைமை காட்டுகிறது.

    ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கா பகுதிகளிலும் அமெரிக்கா அதையே செய்ய முயற்சிக்கிறது.

    தைவானுக்குச் சென்ற அமெரிக்க சபாநாயகர் பெலோசியின் பயணம், ஒரு தனிப்பட்ட பொறுப்பற்ற அரசியல்வாதியின் பயணம் மட்டுமல்ல, தைவான் பிராந்தியத்திலும் உலகின் பிற பகுதிகளிலும், நிலைமையை சீர்குலைத்து குழப்பமடையச் செய்யும் நோக்கத்துடன் செயல்படும் அமெரிக்க உத்தியாகும் என தெரிவித்தார்.

    • ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் ஈரான் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
    • அங்கு அவர் ஈரான், துருக்கி அதிபர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    டெஹ்ரான்:

    ரஷியா நடத்தி வரும் போரில் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை அளித்து ஆதரவு தெரிவித்து வருகின்றன. மேலும், போர் தொடுத்துள்ள ரஷியா மீது பல்வேறு பொருளாதார தடைகளை மேற்கத்திய நாடுகள் விதித்துள்ளன.

    இதற்கிடையே, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார தடைகளைச் சமாளிக்க ஆசியா, வளைகுடா நாடுகளுடனான உறவை வலுப்படுத்த ரஷியா முயற்சித்து வருகிறது.

    இந்நிலையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் அரசுமுறை பயணமாக ஈரான் சென்றுள்ளார். அங்கு அதிபர் புதின் ஈரான் தலைவர் அயதுல்லா அலி காமேனி, ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி மற்றும் துருக்கி அதிபர் தையூப் எர்டோகன் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின்போது பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    கடந்த சில நாட்களுக்கு முன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல், சவுதி அரேபியாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த நிலையில் ரஷிய அதிபர் புதின் தற்போது ஈரானுக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

    ×