search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அண்ணா விளையாட்டு அரங்கம்"

    • போட்டியானது, வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு தனித்தனியாக நடத்தப்பட உள்ளது.
    • நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து அணிகளும் இதில் கலந்துகொள்ளலாம்.

    நெல்லை:

    ஆக்கி யூனிட் ஆப் நெல்லை சார்பில் மாவட்ட ஆக்கி லீக் போட்டிகள் வருகிற 26-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை பாளை அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெறு கிறது. போட்டியானது, வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு தனித்தனியாக நடத்தப்பட உள்ளது. இதில் முதல் 2 நிலை களை பெறுபவர்களுக்கு வெற்றிக்கோப்பைகளும், பங்கேற்பாளர்களுக்கு பங்கேற்பு கேடயங்களும், அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்படும். நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து அணிகளும் இதில் கலந்துகொள்ளலாம். கலந்துகொள்ள வயது வரம்பு ஏதும் இல்லை. நுழைவு கட்டணம் இலவசம். கலந்துகொள்ள விரும்பும் அணிகள் 99403 41508, 90430 36967 என்ற வாட்ஸ் அப்பில் 20-ந்தேதிக்கு முன்னர் அணியின் பெயர்களை முன்பதிவு செய்யவேண்டும். இதற்கான விரிவான ஏற்பாடுகளை ஆக்கி யூனிட் ஆப் நெல்லை நிர்வாகிகள் சேவியர், முருகேசன், பீர் அலி, டாக்டர் மாரிக்கண்ணன், ஜான்சன், ராதாகிருஷ்ணன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

    • வெளியூரில் இருந்து இளைஞர்கள் குவிந்தனர்
    • இன்று இரவு 2-வது நாளாக ராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு முகாம் நடைபெறுகிறது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் அக்னிபத் திட்டத்தின் கீழ் ஆட்கள் சேர்ப்பு முகாம் நடக்கிறது‌.

    கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருச்சி, தஞ்சை, நாகை, சிவகங்கை, மயிலாடுதுறை, கரூர், திண்டுக்கல், விருதுநகர், காரைக்கால், பெரம்பலூர் உள்பட 17 மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் இந்த ஆள் சேர்ப்பு முகாமில் கலந்து கொள்ள உள்ளனர்.

    முதல் நாளான இன்று நடந்த ஆள்சேர்ப்பு முகாமில் 3000 பேர் கலந்து கொள்வதற்கு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. இதையடுத்து கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து மட்டும் இன்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான இளைஞர்கள் ஆள் சேர்ப்பு முகாமில் கலந்து கொண்டனர்.

    நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கிய ரானுவத்திற் கான ஆள் சேர்ப்பு முகாம் விடிய விடிய நடந்தது. அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டு இருந்ததால் 95 சதவீதத்திற்கும் மேற்பட்ட வர்கள் வந்திருந்தனர். இந்த முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு 1600 மீட்டர் ஓட்டம் மற்றும் உடல் தகுதிகள், சான்றிதழ்கள், சோதனை செய்யப்பட்டது. ஆள் சேர்ப்பு முகாமில் கலந்து கொண்ட ஏராளமான இளைஞர்கள் 1600 மீட்டர் தூரத்தை ஒட முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். 160-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் தேர்வு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கிய ஆட்கள் சேர்ப்பு முகாம் இன்று அதிகாலை 6 மணி வரை நடந்தது. தேர்வு பணி நடந்ததையடுத்து இரவை பகலாக்கும் வகையில் அண்ணா விளையாட்ட ரங்கத்தில் மின் விளக்கு அலங்காரங்கள் செய்யப் பட்டு இருந்தது. இன்று இரவு 2-வது நாளாக ராணு வத்திற்கான ஆள் சேர்ப்பு முகாம் நடைபெறுகிறது.

    இந்த முகாமில் கலந்து கொள்வதற்காக வெளி மாவட்டங்களில் இருந்து ஏராள மான இளைஞர்கள் காலையிலேயே நாகர்கோவி லுக்கு வந்தனர். பஸ் மற்றும் ெரயில் மூலமாக அவர்கள் இங்கு வந்து சேர்ந்தனர். வடசேரி பஸ் நிலையப் பகுதியில் ஏராளமான இளை ஞர்கள் வந்து அமர்ந் திருந்தனர்.

    வருகிற 1-ந்தேதி வரை ராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு முகாம் நடை பெறுகிறது. ராணுவத்திற் கான ஆள் சேர்ப்பு முகாம் நள்ளிரவு நடைபெற்று வருவதையடுத்து பொது மக்களுக்கு எந்த ஒரு இடையூறும் ஏற்படவில்லை பஸ்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டது.

    • 205 அரசு ஊழியர்கள்-45 போலீசாருக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது
    • மாணவ-மாண விகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் சுதந்திர தினவிழா நிகழ்ச்சி நடந்தது. விழாவிற்கு வந்த கலெக்டர் அரவிந்த்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் வரவேற்றார். இதை தொடர்ந்து கலெக்டர் அரவிந்த் தேசிய கொடி ஏற்றி வைத்தார்.

    இதை தொடர்ந்து போலீ சார் அணிவகுப்பு மரியாதை திறந்த ஜீப்பில் சென்று பார்வையிட்டார். மூவர்ண கலரிலான பலூனை பறக்க விட்டார். புறாக்களும் பறக்க விடப்பட்டது. பின்னர் போலீசார், ஊர்க்காவல் படை, என்.சி.சி. மாண வர்களின் மரியாதையை ஏற்று கொண்டார்.

    இதை தொடர்ந்து நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. 14 பயனாளிகளுக்கு 5 லட்சத்து 17,ஆயிரத்து 261 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அரவிந்த் வழங்கினார். நிகழ்ச்சியில் சிறப்பாக பணிபுரிந்த 45 போலீ சாருக்கு நற் சான்றிதழ்களை கலெக்டர் அரவிந்த் வழங்கினார்.

    10 ஊர்க்காவல் படையினருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. நெதர்லாந் தில் நடந்த தடகளப்போட்டி யில் 3 தங்கம், 1 வெள்ளிப் பதக்கம் வென்ற போலீஸ் கிருஷ்ண ரேகாவிற்கும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் அரவிந்த் வழங்க னார்.

    ஊராட்சிகளில் சிறப் பாக பணிபுரிந்த ஊராட்சி களுக்கு கேடயங்க ளும் நற்சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. திங்கள் நகர் பேரூராட்சிக்கு கழிவு நீர் மேலாண்மை சிறப்பு செயல்பாட்டிற்காக கேடயம் வழங்கப்பட்டது.

    கிள்ளியூர் பேரூராட்சிக்கு மக்கள் இயக்கம் சிறப்பு செயல்பட்டிற்கும், ஆற்றூர் பேரூராட்சிகளில் பிளாஸ்டிக் தடை சிறப்பு செயல்பாட்டிற்கும், கப்பி யறை பேரூராட்சிக்கு திடக் கழிவு செயல்பாட்டிற்கு கேடயங்கள் வழங்கப்பட் டது.

    இதைத் தொடர்ந்து தீயணைப்பு துறை, மருத்துவ துறை, மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் துறை பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை, தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை, வேளாண்துறை, கல்வித்துறை உட்பட பல்வேறு துறைகளில் சிறப் பாக பணியாற்றிய 205 பேருக்கு சான்றிதழ்களை கலெக்டர் அரவிந்த் வழங்கினார்.

    10 ஆண்டுகள் விபத்து இன்றி பணிபுரிந்தவர்க ளுக்கு நற்சான்றிதழ்களும் வழங்கப் பட்டது. இதை தொடர்ந்து மாணவ-மாண விகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. 8 பள்ளிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் விஜய் வசந்த் எம்.பி., மேயர் மகேஷ், மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா, சப்-கலெக்டர் அலர்மேல் மங்கை, கலெக்டரின் மனைவி கிருத்திகா, மகன் சிவேஷ், மகள் மசிமா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் மனைவி வைஷாலி, மகள் மிஷ்விக், ஏ.டி.எஸ்.பி. ஈஸ்வரன், டி.எஸ்.பி.க்கள் நவீன்குமார், ராஜா, தாசில்தார் சேகர், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மீனாட்சி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×