search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் ராணுவத்திற்காக ஆட்கள் தேர்வு விடிய விடிய நடந்தது
    X

    நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் ராணுவத்திற்காக ஆட்கள் தேர்வு விடிய விடிய நடந்தது

    • வெளியூரில் இருந்து இளைஞர்கள் குவிந்தனர்
    • இன்று இரவு 2-வது நாளாக ராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு முகாம் நடைபெறுகிறது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் அக்னிபத் திட்டத்தின் கீழ் ஆட்கள் சேர்ப்பு முகாம் நடக்கிறது‌.

    கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருச்சி, தஞ்சை, நாகை, சிவகங்கை, மயிலாடுதுறை, கரூர், திண்டுக்கல், விருதுநகர், காரைக்கால், பெரம்பலூர் உள்பட 17 மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் இந்த ஆள் சேர்ப்பு முகாமில் கலந்து கொள்ள உள்ளனர்.

    முதல் நாளான இன்று நடந்த ஆள்சேர்ப்பு முகாமில் 3000 பேர் கலந்து கொள்வதற்கு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. இதையடுத்து கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து மட்டும் இன்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான இளைஞர்கள் ஆள் சேர்ப்பு முகாமில் கலந்து கொண்டனர்.

    நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கிய ரானுவத்திற் கான ஆள் சேர்ப்பு முகாம் விடிய விடிய நடந்தது. அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டு இருந்ததால் 95 சதவீதத்திற்கும் மேற்பட்ட வர்கள் வந்திருந்தனர். இந்த முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு 1600 மீட்டர் ஓட்டம் மற்றும் உடல் தகுதிகள், சான்றிதழ்கள், சோதனை செய்யப்பட்டது. ஆள் சேர்ப்பு முகாமில் கலந்து கொண்ட ஏராளமான இளைஞர்கள் 1600 மீட்டர் தூரத்தை ஒட முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். 160-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் தேர்வு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கிய ஆட்கள் சேர்ப்பு முகாம் இன்று அதிகாலை 6 மணி வரை நடந்தது. தேர்வு பணி நடந்ததையடுத்து இரவை பகலாக்கும் வகையில் அண்ணா விளையாட்ட ரங்கத்தில் மின் விளக்கு அலங்காரங்கள் செய்யப் பட்டு இருந்தது. இன்று இரவு 2-வது நாளாக ராணு வத்திற்கான ஆள் சேர்ப்பு முகாம் நடைபெறுகிறது.

    இந்த முகாமில் கலந்து கொள்வதற்காக வெளி மாவட்டங்களில் இருந்து ஏராள மான இளைஞர்கள் காலையிலேயே நாகர்கோவி லுக்கு வந்தனர். பஸ் மற்றும் ெரயில் மூலமாக அவர்கள் இங்கு வந்து சேர்ந்தனர். வடசேரி பஸ் நிலையப் பகுதியில் ஏராளமான இளை ஞர்கள் வந்து அமர்ந் திருந்தனர்.

    வருகிற 1-ந்தேதி வரை ராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு முகாம் நடை பெறுகிறது. ராணுவத்திற் கான ஆள் சேர்ப்பு முகாம் நள்ளிரவு நடைபெற்று வருவதையடுத்து பொது மக்களுக்கு எந்த ஒரு இடையூறும் ஏற்படவில்லை பஸ்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டது.

    Next Story
    ×