search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Xiaomi"

    • ரெட்மி நோட் 12 4ஜி விலை குறைக்கப்பட்டு இருக்கிறது.
    • வங்கி சலுகைகளாக ரூ. 1500 வரை உடனடி தள்ளுபடி.

    இந்திய சந்தையில் ரெட்மி நோட் 13 சீரிஸ் மாடல்கள் ஜனவரி 4-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த சீரிசில் அனைத்து மாடல்களும் 5ஜி கனெக்டிவிட்டி கொண்டிருக்கும் என்று தெரிகிறது. புதிய நோட் சீரிஸ் மாடல்கள் வெளியாக இருக்கும் நிலையில், ரெட்மி நோட் 12 4ஜி விலை குறைக்கப்பட்டு இருக்கிறது.

    முன்னதாக ரூ. 14 ஆயிரத்து 999 விலையில் அறிமுகமான ரெட்மி நோட் 12 4ஜி விலை தற்போது குறைந்த விலையில் கிடைக்கிறது. இதன் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 16 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

     


    விலை குறைப்பின் படி ரெட்மி நோட் 12 4ஜி விலை தற்போது முறையே ரூ. 11 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 13 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த விலை ப்ளிப்கார்ட் வலைதளத்தில் ஏற்கனவே அப்டேட் செய்யப்பட்டு விட்டது. இதுதவிர ஹெச்.டி.எஃப்.சி., எஸ்.பி.ஐ. மற்றும் ஆக்சிஸ் வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 1500 வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    அதன்படி ரெட்மி நோட் 12 4ஜி விலை ரூ. 10 ஆயிரத்து 499 மற்றும் ரூ. 12 ஆயிரத்து 499 என்று மாறிவிடும். இந்த ஸ்மார்ட்போன் லூனார் பிளாக், சன்ரைஸ் கோல்டு மற்றும் ஐஸ் புளூ என மூன்றுவிதமான நிறங்களில் கிடைக்கிறது. 

    • சியோமி எலெக்ட்ரிக் கார் போர்ஷே டேகேன் மாடலுக்கு போட்டியாக அமைகிறது.
    • இது மணிக்கு 100 கிலோமீட்டர்கள் வேகத்தை 2.78 நொடிகளில் எட்டிவிடும்.

    சீனாவை சேர்ந்த நுகர்வோர் எலெக்ட்ரிக் நிறுவனம் சியோமி எலெக்ட்ரிக் வாகனங்கள் சந்தையில் களமிறங்குவது குறித்து ஏராளமான தகவல்கள் வெளியாகி வந்தது. அந்த வரிசையில், சியோமி தனது முதல் எலெக்ட்ரிக் கார் மாடலை அறிமுகம் செய்தது. SU7 என அழைக்கப்படும் சியோமி எலெக்ட்ரிக் கார் போர்ஷே டேகேன் மாடலுக்கு போட்டியாக அமைகிறது.

    அடுத்த ஆண்டு விற்பனைக்கு வர இருக்கும் சியோமி SU7 மாடல் முதற்கட்டமாக சீன சந்தையில் மட்டும் விற்பனை செய்யப்படவுள்ளது. அடுத்த 15 முதல் 20 ஆண்டுகளுக்குள் உலகளவில் டாப் 5 கார் உற்பத்தியாளர்கள் பட்டியலில் இடம்பிடிக்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளதாக சியோமி தலைமை செயல் அதிகாரி லெய் ஜூன் தெரிவித்துள்ளார்.

     


    புதிய சியோமி SU7 மாடலின் உற்பத்தி சீனாவில் உள்ள சியோமி ஆலையில் சோதனை அடிப்படையில் துவங்கிவிட்டது. இந்த எலெக்ட்ரிக் கார் 400 வோல்ட் மற்றும் 800 வோல்ட் எலெக்ட்ரிக் ஆர்கிடெக்ச்சர்களுக்கு ஏற்றார்போல் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதே போன்று புதிய SU7 மாடல் ஒற்றை மற்றும் இரட்டை என இருவித டிரைவ் டிரெயின்களுக்கும் ஏற்றதாக இருக்கும்.

    சியோமி SU7 மாடலில் அந்நிறுவனம் உருவாக்கிய எலெக்ட்ரிக் மோட்டார்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை ஐ.சி. என்ஜின்களில் சக்திவாய்ந்த ஒன்றாக விளங்கும் V சீரிஸ் பெயர் கொண்டிருக்கின்றன. அதன்படி V6 மாடலில் 299 ஹெச்.பி. திறன், 400 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இது 400 வோல்ட் ஆர்கிடெக்சரில் பயன்படுத்தப்படவுள்ளது.

     


    V6s மோட்டார் 800 வோல்ட் ஆர்கிடெக்சரில் இயங்குகிறது. இது 75 ஹெச்.பி. பவர், 100 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இவை இரண்டும் அதிகபட்சம் 21,000 rpm கொண்டிருக்கின்றன.

    டூயல் மோட்டார் கொண்ட SU7 மாடலில் V6 மற்றும் V6s இணைந்து வழங்கப்படுகின்றன. இவை 673 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இது மணிக்கு 100 கிலோமீட்டர்கள் வேகத்தை 2.78 நொடிகளில் எட்டிவிடும். இதில் வழங்கப்படும் ஹைப்பர் என்ஜின் 679 ஹெச்.பி. பவர், 634 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

    இதில் வழங்கப்படும் 101 கிலோவாட் ஹவர் லித்தியம் அயன் பேட்டரியை முழு சார்ஜ் செய்தால் 800 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதிகள் வழங்கப்படுகின்றன. அதன்படி சியோமியின் ரேபிட் சார்ஜிங் திறன் கொண்டு 5 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 220 கிலோமீட்டர்கள் வரை பயணிக்க முடியும். 

    • ரெட்மி நோட் 13 சீரிஸ் மாடல்கள் ஏற்கனவே சீனாவில் அறிமுகம்.
    • ரெட்மி நோட் 13 சீரிசில் மூன்று மாடல்கள் இடம்பெற்றுள்ளன.

    சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 13 சீரிஸ் கடந்த செப்டம்பர் மாதம் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. இதில் ரெட்மி நோட் 13, ரெட்மி நோட் 13 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் என மூன்று மாடல்கள் இடம்பெற்றுள்ளன. சீன வெளியீட்டை தொடர்ந்து ரெட்மி நோட் 13 சீரிஸ் இந்தியா மற்றும் சர்வதேச வெளியீடு பற்றிய தகவல்கள் வெளியாகி வந்தன.

    இந்த நிலையில், ரெட்மி நோட் 13 சீரிஸ் இந்திய வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி ரெட்மி நோட் 13 சீரிஸ் மாடல்கள் ஜனவரி 4-ம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுகிறது. சீனாவை போன்றே இந்தியாவிலும் ரெட்மி நோட் 13 சீரசின் மூன்று மாடல்களும் அறிமுகம் செய்யப்படலாம்.

     


    எனினும், இது குறித்து சியோமி இந்தியா இதுவரை எந்த தகவலும் இல்லை. மாறாக, ரெட்மி நோட் 13 சீரிஸ் வெளியீட்டு தேதி அடங்கிய போஸ்டர் மற்றும் சிறப்பு வலைப்பக்கத்தை திறந்துள்ளது. இந்த வலைப்பக்கத்தில் ரெட்மி நோட் 13 சீரிஸ் இந்திய வெளியீட்டு தேதி மட்டுமே இடம்பெற்று இருக்கிறது.

    இதுதவிர உலகம் முழுக்க 33.8 கோடி ரெட்மி நோட் சீரிஸ் மாடல்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. சீன சந்தையில் ரெட்மி நோட் 13 சீரிஸ் மாடலின் விலை இந்திய மதிப்பில் ரூ. 13 ஆயிரத்து 900 என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் மாடலின் விலை இந்திய மதிப்பில் ரூ. 22 ஆயிரத்து 800 ஆகும். 



    • ரெட்மி பேட் மாடலில் மீடியாடெக் பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.
    • இந்தியாவில் ரெட்மி பேட் மூன்று வித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    சியோமி நிறுவனத்தின் ரெட்மி பேட் டேப்லெட் இந்திய விலை அதிரடியாக குறைக்கப்பட்டு இருக்கிறது. கடந்த ஆண்டு ரெட்மி பிராண்டின் முதல் டேப்லெட் என்ற பெருமையுடன் ரெட்மி பேட் அறிமுகம் செய்யப்பட்டது.

    பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி பேட் மாடலில் 90Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே, 8000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் டால்பி அட்மோஸ் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. அறிமுகமாகி ஓராண்டு ஆகிவிட்ட நிலையில், ரெட்மி பேட் இந்திய விலை குறைக்கப்பட்டு இருக்கிறது.

     

    புதிய விலை விவரங்கள்:

    ரெட்மி பேட் (3 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி) ரூ. 13 ஆயிரத்து 999

    ரெட்மி பேட் (4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி) ரூ. 14 ஆயிரத்து 999

    ரெட்மி பேட் (6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி) ரூ. 16 ஆயிரத்து 999

    இதன் மூலம் ரெட்மி பேட் விலை அதிகபட்சம் ரூ. 2 ஆயிரம் குறைக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக ரெட்மி பேட் விலை ரூ. 14 ஆயிரத்து 999 என துவங்கியது. இதன் 4 ஜி.பி. ரேம் மற்றும் 6 ஜி.பி. ரேம் மாடல்களின் விலை ரூ. 17 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 19 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

     


    விலை குறைப்பு மட்டுமின்றி ரெட்மி பேட் வாங்குவோர் ஹெச்.டி.எஃப்.சி. வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போதோ அல்லது மாத தவணை முறைகளை பயன்படுத்தும் போதோ அல்லது ஐ.சி.ஐ.சி.ஐ. நெட் பேங்கிங் பயன்படுத்தும் போது ரூ. 1500 வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் பேஸ் வேரியண்டிற்கு மட்டும் ரூ. 1000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த சலுகை டிசம்பர் 31-ம் தேதி வரை வழங்கப்படுகிறது. 

    • ரெட்மி 13C ஸ்மார்ட்போன் இரண்டு வெர்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டது.
    • இரண்டு வெர்ஷன்களிலும் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

    சியோமி நிறுவனத்தின் முற்றிலும் புதிய ரெட்மி 13C 4ஜி மற்றும் ரெட்மி 13C 5ஜி மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. இதன் 4ஜி வெர்ஷன் கடந்த மாதம் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், 5ஜி வெர்ஷன் இந்தியாவில் வைத்து முதல்முறையாக சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

    தோற்றத்தில் இரு மாடல்களும் ஒரே மாதரியான டிசைன், வாட்டர் டிராப் நாட்ச், செல்ஃபி கேமரா, டூயல் பிரைமரி கேமரா சென்சார்கள், வட்ட வடிவ ரிங்குகள், பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது. ரெட்மி 13C மாடலில் 90Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 50MP பிரைமரி கேமரா சென்சார் வழங்கப்படுகிறது.

     


    ரெட்மி 13C 4ஜி மற்றும் 5ஜி அம்சங்கள்:

    6.74 இன்ச் HD+ 90Hz டிஸ்ப்ளே

    கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு

    4ஜி மாடலில் மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர், மாலி G52 GPU

    5ஜி மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 6100+ பிராசஸர், மாலி G57 GPU

    அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம்

    256 ஜிபி மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஆண்ட்ராய்டு 13 சார்ந்த MIUI 14

    5ஜி, 4ஜி, டூயல் சிம் ஸ்லாட்

    வைபை, ப்ளூடூத் 5.3

    3.5mm ஆடியோ ஜாக்

    ஸ்பிலாஷ் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட்

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    4ஜி மாடலில் 50MP பிரைமரி கேரமா, 2MP மேக்ரோ லென்ஸ், ஆக்சிலரி லென்ஸ்

    4ஜி மாலில் 8MP செல்ஃபி கேமரா

    5ஜி மாடலில் 50MP டூயல் கேமரா சென்சார், 5MP செல்ஃபி கேமரா

    5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி


    விலை விவரங்கள்:

    ரெட்மி 13C 4ஜி (4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி) விலை ரூ. 8 ஆயிரத்து 999

    ரெட்மி 13C 4ஜி (6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி) விலை ரூ. 9 ஆயிரத்து 999

    ரெட்மி 13C 4ஜி (8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி) விலை ரூ. 11 ஆயிரத்து 499

    ரெட்மி 13C 5ஜி (4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி) விலை ரூ. 10 ஆயிரத்து 999

    ரெட்மி 13C 5ஜி (6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி) விலை ரூ. 12 ஆயிரத்து 499

    ரெட்மி 13C 5ஜி (8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி) விலை ரூ. 14 ஆயிரத்து 999

    புதிய ரெட்மி ரெட்மி 13C 5ஜி மாடல் இந்தியாவில் கிடைக்கும் குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போன் என்ற பெருமையை பெற்று இருக்கிறது. 

    • அமேசான் வலைதளத்தில் மைக்ரோசைட் இடம்பெற்று இருக்கிறது.
    • முதல் ரெட்மி C சீரிஸ் ஸ்மார்ட்போன் இது ஆகும்.

    சியோமி நிறுவனத்தின் ரெட்மி 12C மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக ரெட்மி 13C ஸ்மார்ட்போன் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய சந்தையில் டிசம்பர் 6-ம் தேதி அறிமுகமாக இருக்கும் ரெட்மி 13C அமேசான் வலைதளத்தில் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதற்காக அமேசான் வலைதளத்தில் இடம்பெற்று இருக்கும் மைக்ரோசைட்டில் ஸ்மார்ட்போனின் விவரங்களும் தெரியவந்துள்ளது.

    அதன்படி ரெட்மி 13C ஸ்மார்ட்போனுடன் அதன் 5ஜி வெர்ஷனும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில், 5ஜி கனெக்விட்டியுடன் அறிமுகமாகும் முதல் ரெட்மி C சீரிஸ் ஸ்மார்ட்போனாக இது இருக்கும் என்று தெரிகிறது.

    அமேசான் வலைதள விவரங்களின் படி ரெட்மி 13C மாடல் ஸ்டார்டஸ்ட் பிளாக் மற்றும் ஸ்டார் ஷைன் கிரீன் என இரண்டு நிறங்களில் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது. இத்துடன் ஏ.ஐ. வசதி கொண்ட 50MP பிரைமரி கேமரா வழங்கப்படுகிறது. இதன் தோற்றம் நைஜீரிய மாடலை போன்ற காட்சியளிக்கிறது. அமேசான் தவிர Mi வலைதளம் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களிலும் இந்த ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்படலாம்.

     

    ரெட்மி 13C அம்சங்கள்:

    6.74 இன்ச் HD+ டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்

    கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு

    மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர்

    மாலி G52 GPU

    4 ஜி.பி., 6 ஜி.பி., 8 ஜி.பி. ரேம்

    128 ஜி.பி., 256 ஜி.பி. மெமரி

    ஆண்ட்ராய்டு 13 சார்ந்த எம்.ஐ.யு.ஐ. 14

    50MP பிரைமரி கேமரா

    2MP மேக்ரோ லென்ஸ்

    8MP செல்ஃபி கேமரா

    4ஜி, டூயல் சிம் ஸ்லாட், வைபை

    ப்ளூடூத் 5.3

    5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

    • சியோமி SU7 மாடலில் இருவித பேட்டரிகள் வழங்கப்படுகின்றன.
    • இந்த எலெக்ட்ரிக் கார் இருவித பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    சியோமி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் SU7 பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த எலெக்ட்ரிக் செடான் மாடல் பி.எம்.டபிள்யூ. i4 மற்றும் டெஸ்லா மாடல் 3 போன்ற கார்களுக்கு போட்டியாக அமைகிறது. இதன் விற்பனை சீனாவில் அடுத்த ஆண்டின் முதல் அரையாண்டு வாக்கில் துவங்க இருக்கிறது. புதிய சியோமி SU7 அளவீடுகளை பொருத்தவரை 4997mm நீளம், 1963mm அகலம், 1440mm உயரம் மற்றும் 3000mm வீல்பேஸ் கொண்டிருக்கிறது.

    இந்த எலெக்ட்ரிக் கார் இருவித பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் ரியர் வீல் டிரைவ் வெர்ஷன் 299 ஹெச்.பி. பவர் கொண்டிருக்கிறது. இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 210 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. டூயல் மோட்டார்கள் கொண்ட 4-வீல் டிரைவ் வேரியண்ட் 637 ஹெச்.பி. பவர் கொண்டிருக்கிறது. இந்த வேரியண்ட் மணிக்கு அதிகபட்சம் 265 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.

    சியோமி SU7 மாடலில் இருவித பேட்டரிகள் வழங்கப்படுகின்றன. அதன்படி என்ட்ரி லெவல் கார்களில் பி.ஒய்.டி.-இன் லித்தியம் ஐயன் ஃபாஸ்பேட் பேட்டரியும், விலை உயர்ந்த மாடலில் CATL ரக பேட்டரி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. எனினும், இந்த பேட்டரிகளின் திறன் மற்றும் ரேன்ஜ் பற்றிய விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

    டிசைனை பொருத்தவரை சியோமி SU7 மாடல் அதிநவீன மெக்லாரென் ரக கார்களை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன் ஹெட்லைட்கள் மெல்லியதாகவும், பொனெட் டேப்பர்கள் மெக்லாரென் மாடல்களில் உள்ளதை போன்றும் வழங்கப்பட்டுள்ளன. இந்த மாடல் 19-இன்ச் மற்றும் 20-இன்ச் வீல் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 

    • ரெட்மி நோட் 13 சீரிஸ் மாடல்கள் சீனாவில் விற்பனை செய்யப்படுகின்றன.
    • புதிய ரெட்மி நோட் சீரிஸ் விவரங்கள் லீக் ஆகி இருக்கிறது.

    சியோமி நிறுவனம் தனது ரெட்மி நோட் 13 5ஜி ஸ்மார்ட்போனினை கடந்த செப்டம்பர் மாதம் சீன சந்தையில் அறிமுகம் செய்தது. இத்துடன் ரெட்மி நோட் 13 ப்ரோ சீரிஸ் மாடல்களும் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த நிலையில், ரெட்மி நோட் 13 ப்ரோ சீரிசின் புதிய ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.

    புதிய ஸ்மார்ட்போன் ரெட்மி நோட் 13R ப்ரோ எனும் பெயரில் அறிமுகம் செய்யப்படும் என்று சீன டெலிகாம் வலைதளத்தின் மூலம் தெரியவந்துள்ளது. இத்துடன் ரெட்மி நோட் 13R ப்ரோ மாடலின் டிசைன் மற்றும் அம்சங்கள் பற்றிய தகவல்களும் வெளியாகி உள்ளன. அதன்படி இந்த மாடலில் 6.67 இன்ச் FHD+ ஸ்கிரீன் MT6833 பிராசஸர் வழங்கப்படும் என தகவல்.

    ரெட்மி நோட் 13R ப்ரோ அம்சங்கள்:

    6.67 இன்ச் FHD+ 1080x2400 பிக்சல் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே

    கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு

    ஆக்டா கோர் மீடியாடெக் 6080 பிராசஸர்

    மாலி G57 MC2 GPU

    12 ஜி.பி. ரேம்

    256 ஜி.பி. மெமரி

    ஆண்ட்ராய்டு 13 சார்ந்த MIUI14

    டூயல் சிம் ஸ்லாட்

    108MP பிரைமரி கேமரா

    2MP டெப்த் கேமரா

    16MP செல்ஃபி கேமரா

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    3.5mm ஆடியோ ஜாக்

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.3

    யு.எஸ்.பி. டைப் சி

    5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    ரெட்மி நோட் 13R ப்ரோ 5ஜி மாடல் மிட்நைட் பிளாக், டைம் புளூ மற்றும் டான் கோல்டு போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 1999 யுவான்கள் இந்திய மதிப்பில் ரூ. 23 ஆயிரத்து 525 என்று நிர்ணயம் செய்யப்படலாம். இந்த ஸ்மார்ட்போன் நவம்பர் 20-ம் தேதி அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

    • புதிய மாடல் ரெட்மி 12C ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.
    • புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் அமேசானில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது.

    சியோமி நிறுவனத்தின் முற்றிலும் புதிய ரெட்மி 13C 4ஜி ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. சமீபத்தில் தான் இந்த ஸ்மார்ட்போனின் வெளியீட்டை அந்நிறுவனம் உறுதிப்படுத்தியது. மேலும் இதன் டிசைன் மற்றும் எந்தெந்த நிறங்களில் கிடைக்கும் என்ற தகவல்களும் வெளியாகி இருந்தது.

    கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி 12C ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷனாக புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் அறிமுகமாகிறது. மேலும் இதன் அம்சங்கள் முந்தைய வெர்ஷனில் இருந்ததை விட மேம்பட்டு இருக்கும் என்று தெரிகிறது. ரெட்மி 13C வெளியீட்டு தேதி குறித்து சியோமி நிறுவனம் இதுவரை எந்த தகவலும் வழங்கவில்லை.

    இந்த நிலையில், ரெட்மி 13C ஸ்மார்ட்போன் அமேசான் வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. மேலும் ஸ்மார்ட்போனின் முழு சிறப்பம்சங்கள் மற்றும் விலை என அனைத்து விவரங்களும் இடம்பெற்று இருக்கிறது. அமேசான் வலைதள விவரங்களின் படி ரெட்மி 13C 4ஜி ஸ்மார்ட்போன் பிளாக் நிறத்தில் பட்டியலிடப்பட்டு உள்ளது.

    அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் 6.74 இன்ச் HD+ டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி99 பிராசஸர், ஆண்ட்ராய்டு 13 சார்ந்த MIUI 14, 4ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் 50MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் கேமரா, 5MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.

    5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் ரெட்மி 13C 16 வாட் வயர்டு சார்ஜிங் வசதி, யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கப்படுகிறது. இத்துடன் 3.5mm ஆடியோ ஜாக், கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. விலையை பொருத்தவரை ரெட்மி 13C மாடலின் 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை 140.54 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 11 ஆயிரத்து 700 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் இருவித மெமரி ஆப்ஷன்களில் உருவாகி இருக்கிறது.
    • ரெட்மி 13C ஸ்மார்ட்போன் நான்கு நிறங்களில் கிடைக்கும் என்று கூறப்பட்டது.

    சியோமி நிறுவனத்தின் புதிய ரெட்மி 13C ஸ்மார்ட்போன் அடுத்த சில நாட்களில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெளியீட்டுக்கு முன் இந்த ஸ்மார்ட்போன் அமேசான் வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு உள்ளது. இதில் புதிய ஸ்மார்ட்போனின் விலை, ரெண்டர்கள் மற்றும் அம்சங்கள் இடம்பெற்று இருக்கின்றன.

    அமேசான் வலைதள விவரங்களின் படி ரெட்மி 13C ஸ்மார்ட்போன் 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி, 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி என இருவித வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை 130 யூரோக்கள் மற்றும் 150 யூரோக்கள் என்று நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக் மற்றும் நேவி புளூ என இரண்டு நிறங்களில் உருவாகி இருக்கிறது.

    சமீபத்தில் வெளியான தகவல்களில் புதிய ரெட்மி 13C ஸ்மார்ட்போன் பிளாக், புளூ, லைட் கிரீன் மற்றும் லைட் புளூ என நான்குவிதமான நிறங்களில் கிடைக்கும் என்று கூறப்பட்டது.

    ரெட்மி 13C எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

    6.74 இன்ச் LCD ஸ்கிரீன், 720x1600 பிக்சல் HD+ ரெசல்யூஷன், 90Hz ரிப்ரெஷ் ரேட்

    மீடியாடெக் ஹீலியோ G85 பிராசஸர்

    அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    ஆண்ட்ராய்டு 13 சார்ந்த MIUI 14

    50MP பிரைமரி கேமர

    2MP டெப்த் மற்றும் மேக்ரோ லென்ஸ்

    8MP செல்ஃபி கேமரா

    4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1

    யு.எஸ்.பி. சி போர்ட்

    3.5mm ஆடியோ ஜாக்

    புதிய ரெட்மி 13C ஸ்மார்ட்போன் சமீபத்தில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட போக்கோ C65 மாடலின் ரிபிராண்டெட் வெர்ஷன் ஆகும்.

    • பல்வேறு சாதனங்களில் ஹைப்பர் ஒ.எஸ். பிரீ-இன்ஸ்டால் செய்யப்படுகிறது.
    • ஹைப்பர் கனெக்ட் மூலம் கனெக்டெட் சாதனங்கள் அனைத்தையும் கட்டுப்படுத்த முடியும்.

    சியோமி நிறுவனம் தனது பத்து ஆண்டுகள் பழைய எம்.ஐ.யு.ஐ.-க்கு மாற்றாக ஹைப்பர் ஒ.எஸ்.-ஐ அறிமுகம் செய்திருக்கிறது. இந்த ஒ.எஸ்.-ஐ சியோமி நிறுவனம் "ஹியுமன்-சென்ட்ரிக்" ஒ.எஸ். என்று குறிப்பிட்டு உள்ளது. புதிய ஹைப்பர் ஒ.எஸ். சியோமி நிறுவன ஸ்மார்ட்போன், கார் மற்றும் வீட்டுசாதன பொருட்களில் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    கடந்த 13 ஆண்டுகளில் சியோமி நிறுவனம் உலகளவில் 1.175 பில்லியன் பயனர்களை கடந்து, கிட்டத்தட்ட 200 பிரிவுகளில் சாதனங்களை விற்பனை செய்து வருவதாக தெரிவித்துள்ளது. எனினும், பல்வேறு சாதனங்களுக்கான ஒ.எஸ்.-களில் ஏராளமான பிரச்சினைகள் மற்றும் செயலாக்க இடர்பாடுகளை சந்தித்து வருவதாக தெரிவித்து இருக்கிறது.

    இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் தான் 2017-ம் ஆண்டு சியோமி நிறுவனம் தனது சாதனங்கள் அனைத்தையும் ஒருங்கிணைந்த சிஸ்டம் ஒன்றில் உள்ளடக்க திட்டமிட்டு ஹைப்பர் ஒ.எஸ்.-ஐ உருவாக்கி இருக்கிறது.

    சியோமி 14 சீரிஸ், சியோமி வாட்ச் S3, சியோமி டி.வி. S ப்ரோ 85 இன்ச் மினி எல்.இ.டி. உள்ளிட்டவைகளில் ஹைப்பர் ஒ.எஸ். பிரீ-இன்ஸ்டால் செய்யப்படுகிறது. இது முற்றிலும் புதிய யூசர் இன்டர்ஃபேஸ் அனுபவத்தை வழங்கும் என்று சியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது. நான்கு மிகமுக்கிய இலக்குகளை குறிவைத்து ஹைப்பர் ஒ.எஸ். உருவாக்கப்பட்டு இருப்பதாக அந்நிறுவனம் மேலும் தெரிவித்து இருக்கிறது.

    அதன்படி லோ-லெவல் ரி-ஃபேக்டரிங், கிராஸ்-எண்ட் இன்டெலிஜண்ட் கனெக்டிவிட்டி, ப்ரோ-ஆக்டிவ் இன்டெலிஜன்ஸ் மற்றும் என்ட்-டு-என்ட் செக்யுரிட்டி உள்ளிட்ட பிரிவுகளில் ஹைப்பர் ஒ.எஸ். பிரதானமாக கவனம் செலுத்துகிறது.

    ஸ்மார்ட்போன்களில் ஹைப்பர் ஒ.எஸ். ஆண்ட்ராய்டு ஓபன் சோர்ஸ் பிராஜக்ட் (AOSP) சார்ந்து உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது ஆண்ட்ராய்டு 14 முதல் வழங்கப்படுகிறது. ஸ்மார்ட் சாதனங்களுக்கான ஹைப்பர் ஒ.எஸ். சியோமி வெலா ஓபன்-சோர்ஸ் சிஸ்டத்தின் மீது உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஹைப்பர் ஒ.எஸ்.-இல் உள்ள ஹைப்பர் கனெக்ட் மூலம் கனெக்டெட் சாதனங்கள் அனைத்தையும் கட்டுப்படுத்த முடியும்.

    டி.இ.இ. ஹார்டுவேர் மற்றும் என்ட்-டு-என்ட் என்க்ரிப்ஷன் மூலம் ஹைப்பர் ஒ.எஸ். பயனரின் தகவல்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்துகிறது.

    வெளியீடு எப்போ தெரியுமா?

    சியோமியின் புதிய ஹைப்பர் ஒ.எஸ். சியோமி 14, சியோமி 14 ப்ரோ, சியோமி டி.வி. S ப்ரோ 85 இன்ச் மினி எல்.இ.டி. மற்றும் சியோமி வாட்ச் S3 போன்ற சாதனங்களில் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டே வழங்கப்படுகிறது.

    இதைத் தொடர்ந்து ஓவர்-தி-ஏர் முறையில் ஹைப்பர் ஒ.எஸ். அப்டேட் டிசம்பர் மாதத்தில் இருந்து வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக ரெட்மி K60 அல்ட்ரா, சியோமி பேட் 6 மேக்ஸ் 14 இன்ச், சியோமி டி.வி. S ப்ரோ 65 இன்ச், சியோமி டி.வி. S ப்ரோ 75 இன்ச், சியோமி சவுண்ட் ஸ்பீக்கர், சியோமி ஸ்மார்ட் கேமரா 3 ப்ரோ உள்ளிட்ட சாதனங்களுக்கு வழங்கப்படுகிறது.

    சீன சந்தையில் ஹைப்பர் ஒ.எஸ். வெளியீட்டுக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கிவிட்டது. சர்வதேச சந்தையில் ஹைப்பர் ஒ.எஸ். அடுத்த ஆண்டின் முதலாவது காலாண்டு வாக்கில் வெளியிடப்பட இருக்கிறது.

    • சியோமி நிறுவனம் ஸ்மார்ட் பன்டில் பெயரில் சிறப்பு சலுகை வழங்குகிறது.
    • சிறப்பு சலுகை ப்ளிப்கார்ட், அமேசான் வலைதளங்களிலும் வழங்கப்படுகிறது.

    சியோமி நிறுவனம் பண்டிகை காலத்தை முன்னிட்டு இந்திய சந்தையில் புதிய சலுகையை அறிவித்து இருக்கிறது. புதிய சலுகையின் கீழ் ரூ. 33 ஆயிரத்து 696 மதிப்புள்ள சாதனங்களை வங்கி சலுகைகள் சேர்த்து ரூ. 19 ஆயிரத்து 999 விலையில் வாங்கிக் கொள்ள முடியும். சியோமி நிறுவனத்தின் நான்கு சாதனங்களை பயனர்கள் மிக குறைந்த விலையில் வாங்கிக் கொள்ளலாம்.

    சியோமி ஸ்மார்ட் டெக் பன்டிலில் வழங்கப்படும் சாதனங்கள்:

    ரெட்மி நோட் 12 5ஜி 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் மிஸ்டிக் புளூ, மேட் பிளாக், சன்ரைஸ் கோல்டு மற்றும் ஃபிராஸ்டெட் கிரீன்

    ரெட்மி வாட்ச் 3 ஆக்டிவ் சார்கோல் பிளாக், பிளாட்டினம் கிரே

    ரெட்மி பட்ஸ் 4 ஆக்டிவ் பேஸ் பிளாக், ஏர் வைட்

    10000 எம்.ஏ.ஹெச். எம்.ஐ. பாக்கெட் பவர் பேங்க் ப்ரோ பிளாக்

    சியோமி அறிவித்து இருக்கும் நான்கு சாதனங்களின் விலை ரூ. 33 ஆயிரத்து 696 ஆகும். ஆனால் குறுகிய காலத்திற்கு இவற்றை ரூ. 21 ஆயிரத்து 999 விலையிலேயே வாங்கிட முடியும். இத்துடன் ஐ.சி.ஐ.சி.ஐ. கிரெடிட் கார்டுகள், ஐ.சி.ஐ.சி.ஐ. நெட் பேங்கிங் மற்றும் ஹெச்.டி.எஃப்.சி. கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 2 ஆயிரத்து 250 உடனடி தள்ளுபடி பெற முடியும். அதன்படி பயனர்கள் இவற்றை ரூ. 19 ஆயிரம் பட்ஜெட்டிலேயே வாங்கிட முடியும்.

    ஸ்மார்ட் பன்டில் தவிர பயனர்கள் ரெட்மி நோட் 12 5ஜி மாடலை ரூ. 13 ஆயிரத்து 749 விலையில் வாங்கிட முடியும். சிறப்பு சலுகை வழங்கும் விற்பனை தற்போது Mi வலைதளம், அமேசான், ஃப்ளிப்கார்ட் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் நடைபெற்று வருகிறது.

    ×