search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹைப்பர் ஒஎஸ்"

    • மென்பொருள் பற்றிய தகவலை அந்நிறுவனம் டீசராக வெளியிட்டு உள்ளது.
    • சியோமியின் ஹைப்பர்-ஒ.எஸ். வழங்கப்படுகிறது.

    போக்கோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது X6 சீரிஸ் மற்றும் M6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்களை ஜனவரி 11-ம் தேதி அறிமுகம் செய்வதாக ஏற்கனவே அறிவித்துவிட்டது. இதையொட்டி புதிய ஸ்மார்ட்போன்களின் அம்சங்களை அந்நிறுவனம் ஒவ்வொன்றாக டீசர் வடிவில் அறிவித்து வருகிறது.

    இந்த நிலையில், போக்கோ X6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் மென்பொருள் பற்றிய தகவலை அந்நிறுவனம் டீசராக வெளியிட்டு உள்ளது. அதன்படி போக்கோ X6 ப்ரோ 5ஜி மாடலில் சியோமியின் ஹைப்பர்-ஒ.எஸ். வழங்கப்படுகிறது. சியோமி நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஒ.எஸ். கொண்டு இந்தியாவில் அறிமுகமாகும் முதல் சாதனமாக இது இருக்கும்.



    இது தொடர்பான அறிவிப்பை போக்கோ இந்தியா தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் அக்கவுன்டில் தெரிவித்து உள்ளது. புதிய ஸ்மார்ட்போன் வெளியீட்டை தொடர்ந்து போக்கோ F5 மாடலுக்கும் ஹைப்பர்-ஒ.எஸ். அப்டேட் வழங்கப்பட இருக்கிறது. இதற்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியாகிவிட்டது. இதே போன்று சியோமி மற்றும் ரெட்மி ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களுக்கும் புதிய ஒ.எஸ். அப்டேட் வழங்கப்பட உள்ளது.

    அம்சங்களை பொருத்தவரை போக்க X6 ப்ரோ 5ஜி மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 8300 அல்ட்ரா பிராஸர் வழங்கப்படுகிறது. இதன் பேக் பேனலில் செவ்வக வடிவம் கொண்ட கேமரா மாட்யுல் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 5000 mm2 ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் வேப்பர் கூலிங் சேம்பர் வழங்கப்படுவது உறுதியாகி இருக்கிறது. 

    • பல்வேறு சாதனங்களில் ஹைப்பர் ஒ.எஸ். பிரீ-இன்ஸ்டால் செய்யப்படுகிறது.
    • ஹைப்பர் கனெக்ட் மூலம் கனெக்டெட் சாதனங்கள் அனைத்தையும் கட்டுப்படுத்த முடியும்.

    சியோமி நிறுவனம் தனது பத்து ஆண்டுகள் பழைய எம்.ஐ.யு.ஐ.-க்கு மாற்றாக ஹைப்பர் ஒ.எஸ்.-ஐ அறிமுகம் செய்திருக்கிறது. இந்த ஒ.எஸ்.-ஐ சியோமி நிறுவனம் "ஹியுமன்-சென்ட்ரிக்" ஒ.எஸ். என்று குறிப்பிட்டு உள்ளது. புதிய ஹைப்பர் ஒ.எஸ். சியோமி நிறுவன ஸ்மார்ட்போன், கார் மற்றும் வீட்டுசாதன பொருட்களில் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    கடந்த 13 ஆண்டுகளில் சியோமி நிறுவனம் உலகளவில் 1.175 பில்லியன் பயனர்களை கடந்து, கிட்டத்தட்ட 200 பிரிவுகளில் சாதனங்களை விற்பனை செய்து வருவதாக தெரிவித்துள்ளது. எனினும், பல்வேறு சாதனங்களுக்கான ஒ.எஸ்.-களில் ஏராளமான பிரச்சினைகள் மற்றும் செயலாக்க இடர்பாடுகளை சந்தித்து வருவதாக தெரிவித்து இருக்கிறது.

    இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் தான் 2017-ம் ஆண்டு சியோமி நிறுவனம் தனது சாதனங்கள் அனைத்தையும் ஒருங்கிணைந்த சிஸ்டம் ஒன்றில் உள்ளடக்க திட்டமிட்டு ஹைப்பர் ஒ.எஸ்.-ஐ உருவாக்கி இருக்கிறது.

    சியோமி 14 சீரிஸ், சியோமி வாட்ச் S3, சியோமி டி.வி. S ப்ரோ 85 இன்ச் மினி எல்.இ.டி. உள்ளிட்டவைகளில் ஹைப்பர் ஒ.எஸ். பிரீ-இன்ஸ்டால் செய்யப்படுகிறது. இது முற்றிலும் புதிய யூசர் இன்டர்ஃபேஸ் அனுபவத்தை வழங்கும் என்று சியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது. நான்கு மிகமுக்கிய இலக்குகளை குறிவைத்து ஹைப்பர் ஒ.எஸ். உருவாக்கப்பட்டு இருப்பதாக அந்நிறுவனம் மேலும் தெரிவித்து இருக்கிறது.

    அதன்படி லோ-லெவல் ரி-ஃபேக்டரிங், கிராஸ்-எண்ட் இன்டெலிஜண்ட் கனெக்டிவிட்டி, ப்ரோ-ஆக்டிவ் இன்டெலிஜன்ஸ் மற்றும் என்ட்-டு-என்ட் செக்யுரிட்டி உள்ளிட்ட பிரிவுகளில் ஹைப்பர் ஒ.எஸ். பிரதானமாக கவனம் செலுத்துகிறது.

    ஸ்மார்ட்போன்களில் ஹைப்பர் ஒ.எஸ். ஆண்ட்ராய்டு ஓபன் சோர்ஸ் பிராஜக்ட் (AOSP) சார்ந்து உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது ஆண்ட்ராய்டு 14 முதல் வழங்கப்படுகிறது. ஸ்மார்ட் சாதனங்களுக்கான ஹைப்பர் ஒ.எஸ். சியோமி வெலா ஓபன்-சோர்ஸ் சிஸ்டத்தின் மீது உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஹைப்பர் ஒ.எஸ்.-இல் உள்ள ஹைப்பர் கனெக்ட் மூலம் கனெக்டெட் சாதனங்கள் அனைத்தையும் கட்டுப்படுத்த முடியும்.

    டி.இ.இ. ஹார்டுவேர் மற்றும் என்ட்-டு-என்ட் என்க்ரிப்ஷன் மூலம் ஹைப்பர் ஒ.எஸ். பயனரின் தகவல்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்துகிறது.

    வெளியீடு எப்போ தெரியுமா?

    சியோமியின் புதிய ஹைப்பர் ஒ.எஸ். சியோமி 14, சியோமி 14 ப்ரோ, சியோமி டி.வி. S ப்ரோ 85 இன்ச் மினி எல்.இ.டி. மற்றும் சியோமி வாட்ச் S3 போன்ற சாதனங்களில் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டே வழங்கப்படுகிறது.

    இதைத் தொடர்ந்து ஓவர்-தி-ஏர் முறையில் ஹைப்பர் ஒ.எஸ். அப்டேட் டிசம்பர் மாதத்தில் இருந்து வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக ரெட்மி K60 அல்ட்ரா, சியோமி பேட் 6 மேக்ஸ் 14 இன்ச், சியோமி டி.வி. S ப்ரோ 65 இன்ச், சியோமி டி.வி. S ப்ரோ 75 இன்ச், சியோமி சவுண்ட் ஸ்பீக்கர், சியோமி ஸ்மார்ட் கேமரா 3 ப்ரோ உள்ளிட்ட சாதனங்களுக்கு வழங்கப்படுகிறது.

    சீன சந்தையில் ஹைப்பர் ஒ.எஸ். வெளியீட்டுக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கிவிட்டது. சர்வதேச சந்தையில் ஹைப்பர் ஒ.எஸ். அடுத்த ஆண்டின் முதலாவது காலாண்டு வாக்கில் வெளியிடப்பட இருக்கிறது.

    ×