search icon
என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    இந்தியாவில் ஹைப்பர்-ஒ.எஸ். உடன் அறிமுகமாகும் முதல் ஸ்மார்ட்போன் - எது தெரியுமா?
    X

    இந்தியாவில் ஹைப்பர்-ஒ.எஸ். உடன் அறிமுகமாகும் முதல் ஸ்மார்ட்போன் - எது தெரியுமா?

    • மென்பொருள் பற்றிய தகவலை அந்நிறுவனம் டீசராக வெளியிட்டு உள்ளது.
    • சியோமியின் ஹைப்பர்-ஒ.எஸ். வழங்கப்படுகிறது.

    போக்கோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது X6 சீரிஸ் மற்றும் M6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்களை ஜனவரி 11-ம் தேதி அறிமுகம் செய்வதாக ஏற்கனவே அறிவித்துவிட்டது. இதையொட்டி புதிய ஸ்மார்ட்போன்களின் அம்சங்களை அந்நிறுவனம் ஒவ்வொன்றாக டீசர் வடிவில் அறிவித்து வருகிறது.

    இந்த நிலையில், போக்கோ X6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் மென்பொருள் பற்றிய தகவலை அந்நிறுவனம் டீசராக வெளியிட்டு உள்ளது. அதன்படி போக்கோ X6 ப்ரோ 5ஜி மாடலில் சியோமியின் ஹைப்பர்-ஒ.எஸ். வழங்கப்படுகிறது. சியோமி நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஒ.எஸ். கொண்டு இந்தியாவில் அறிமுகமாகும் முதல் சாதனமாக இது இருக்கும்.



    இது தொடர்பான அறிவிப்பை போக்கோ இந்தியா தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் அக்கவுன்டில் தெரிவித்து உள்ளது. புதிய ஸ்மார்ட்போன் வெளியீட்டை தொடர்ந்து போக்கோ F5 மாடலுக்கும் ஹைப்பர்-ஒ.எஸ். அப்டேட் வழங்கப்பட இருக்கிறது. இதற்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியாகிவிட்டது. இதே போன்று சியோமி மற்றும் ரெட்மி ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களுக்கும் புதிய ஒ.எஸ். அப்டேட் வழங்கப்பட உள்ளது.

    அம்சங்களை பொருத்தவரை போக்க X6 ப்ரோ 5ஜி மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 8300 அல்ட்ரா பிராஸர் வழங்கப்படுகிறது. இதன் பேக் பேனலில் செவ்வக வடிவம் கொண்ட கேமரா மாட்யுல் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 5000 mm2 ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் வேப்பர் கூலிங் சேம்பர் வழங்கப்படுவது உறுதியாகி இருக்கிறது.

    Next Story
    ×