search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "women's t20 world cup"

    • வெஸ்ட் இண்டீஸ் அணி, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் சேர்த்தது.
    • கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ரிச்சா கோஷ் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

    மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று கேப் டவுனில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் சேர்த்தது.

    இதையடுத்து 119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனா 10 ரன்களும், ஷபாலி வர்மா 28 ரன்களும் எடுத்தனர். ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஒரு ரன் மட்டுமே எடுத்தார்.

    கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ரிச்சா ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது. கேப்டன் கவுர் 33 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ரிச்சா கோஷ் உடன், தேவிகா இணைய, இந்தியா 18.1 ஓவர்களில் இலக்கை எட்டியது.

    11 பந்துகள் மீதமிருந்த நிலையில், இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்ததால், 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரிச்சா கோஷ் 44 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 

    • ஸ்டபானி டெய்லர், ஷெமைன் காம்பெல்லே இருவரும் சிறப்பாக விளையாடி நம்பிக்கை அளித்தனர்.
    • இந்தியா தரப்பில் தீப்தி சர்மா 3 விக்கெட்டும், பூஜா வஸ்த்ராகர் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

    மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று கேப் டவுனில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் சேர்த்தது.

    கேப்டன் ஹெய்லி மேத்யூஸ் 2 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், ஸ்டபானி டெய்லர், ஷெமைன் காம்பெல்லே இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நம்பிக்கை அளித்தனர். ஸ்டபானி 42 ரன்களும், ஷெமைன் காம்பெல்லே 30 ரன்களும் சேர்த்தனர். செடீன் நேசன் 21 ரன்களும் (நாட் அவுட்), ஷபீகா 15 ரன்களும் அடித்தனர்.

    இந்தியா தரப்பில் தீப்தி சர்மா 3 விக்கெட் கைப்பற்றினார். பூஜா வஸ்த்ராகர், ரேணுகா சிங் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்குகிறது. 

    • முதலில் ஆடிய வங்காளதேசம் 107 ரன்கள் மட்டுமே எடுத்தது.
    • அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா அணி 111 ரன்கள் எடுத்து வென்றது.

    கிபெர்கா:

    8-வது பெண்கள் டி 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது.

    இதில் இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, வங்காளதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்காளதேசம் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய வங்காளதேசம் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுக்கு 107 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் நிகர் சுல்தானா 57 ரன்கள் எடுத்தார்.

    இதையடுத்து, 108 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. கேப்டன் மெக் லேனிங் பொறுப்புடன் ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

    இறுதியில், ஆஸ்திரேலியா அணி 18.2 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 111 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மெக் லேனிங் 48 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். ஆஸ்திரேலிய அணி பெறும் 2வது வெற்றி இதுவாகும்.

    • முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 132 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய நியூசிலாந்து அணி 67 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    பார்ல்:

    8-வது பெண்கள் டி 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது.

    பார்ல் நகரில் நடந்த இரண்டாவது ஆட்டத்தில் நியுசிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுக்கு 132 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டைரன் 40 ரன்கள் எடுத்தார்.

    நியூசிலாந்து அணி சார்பில் ஈடன் கார்சன், தஹுஹு ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. அந்த அணி தொடக்கம் முதல் விக்கெட்டுகளை இழந்து திணறியது.

    இறுதியில், நியூசிலாந்து அணி 18.1 ஓவரில் 67 ரன்களுக்கு சுருண்டது. இதன்மூலம் தென் ஆப்பிரிக்கா அணி 65 ரன்கள் வித்தியாசத்தில அபாரமாக வெற்றி பெற்றது.

    மற்றொரு லீக் போட்டியில் இங்கிலாந்து, அயர்லாந்து அணிகள் மோதின. முதலில் ஆடிய அயர்லாந்து 18.2 ஓவரில் 105 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து ஆடிய இங்கிலாந்து 6 விக்கெட்டுக்கு 107 ரன்கள் எடுத்து வென்றது.

    • முதலில் ஆடிய வங்காளதேச அணி 126 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய இலங்கை அணி 129 ரன்கள் எடுத்து வென்றது.

    கேப் டவுன் :

    8-வது பெண்கள் டி 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது.

    கேப் டவுன் நகரில் நடந்த இரண்டாவது ஆட்டத்தில் இலங்கை, வங்காளதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்காளதேசம் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய வங்காளதேசம் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுக்கு 126 ரன்கள் எடுத்தது.

    இலங்கை அணி சார்பில் ரணசிங்கே 3 விக்கெட்டும், அடப்பட்டு 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. அந்த அணி 25 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

    தொடக்க வீராங்கனை ஹர்ஷிதா மதாவியுடன் நீலாக்ஷி டி சில்வா ஜோடி சேர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    இறுதியில், இலங்கை 18.2 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 129 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஹர்ஷிதா மதாவி அரை சதமடித்தார். அவர் 69 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். நீலாக்ஷி டி சில்வா 41 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    • பிஸ்மா மரூப் ரன்களும், ஆயிஷா நசீம் 43 ரன்களும் எடுத்தனர்.
    • இந்தியா சார்பில் ராதா யாதவ் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    8-வது பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. வருகிற 26-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

    'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசமும், 'பி' பிரிவில் இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்தும் இடம் பெற்றுள்ளன.

    ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இந்த போட்டி தொடரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கேப்டவுனில் இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன.

    இதில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி அந்த அணி முதலில் பேட்டிங் செய்தது.

    இதில், முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியின் தொடக்க வீராங்கனைகள் ஜவேரியா கான் 8 ரன்களும் ,முனீபா அலி 12 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    அடுத்து வந்த நிதாதர் 0 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். விக்கெட்டுகள் இழந்தாலும் அணியின் கேப்டன் பிஸ்மா மரூப் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தார். அவர் அரைசதம் அடித்து அசத்தினார்.

    இதனால் 20 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பிற்கு பாகிஸ்தான் அணி 149 ரன்கள் எடுத்தது. பிஸ்மா மரூப் 68 ரன்களும், ஆயிஷா நசீம் 43 ரன்களும் எடுத்தனர். இந்தியா சார்பில் ராதா யாதவ் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனை தொடர்ந்து 150 ரன்கள் இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.

    • 8-வது பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது.
    • இந்திய அணியில் தொடக்க வீராங்கனை ஸ்மிர்தி மந்தனா பயிற்சி ஆட்டத்தின்போது இடது கைவிரவில் ஏற்பட்ட காயத்தில் இருந்து முழுமையாக மீளவில்லை.

    கேப்டவுன்:

    8-வது பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. வருகிற 26-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசமும், 'பி' பிரிவில் இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ், அயர்லாந்தும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

    இந்த போட்டி தொடரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கேப்டவுனில் இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது.

    இந்திய அணியில் தொடக்க வீராங்கனை ஸ்மிர்தி மந்தனா பயிற்சி ஆட்டத்தின்போது இடது கைவிரவில் ஏற்பட்ட காயத்தில் இருந்து முழுமையாக மீளவில்லை. இதனால் அவர் இன்றைய ஆட்டத்தில் ஆடமாட்டார் என்று பொறுப்பு பயிற்சியாளர் கனித்கர் நேற்று தெரிவித்தார். இது இந்திய அணிக்கு ஒரு பின்னடைவாகும். அதேநேரத்தில் தோள்பட்டை காயத்தில் இருந்து மீண்டு இருக்கும் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ஆடுவார் என்றும் அவர் கூறினார்.

    அண்மையில் நடந்த முத்தரப்பு தொடரின் இறுதி ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவிடமும், பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடமும் தோல்வியை சந்தித்த இந்திய அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் ஏற்றம் காண வேண்டியது அவசியமானதாகும்.

    பிஸ்மா மரூப் தலைமையிலான பாகிஸ்தான் அணி பயிற்சி ஆட்டங்களில் வங்காளதேசத்தை தோற்கடித்ததுடன், தென்ஆப்பிரிக்காவிடம் வீழ்ந்தது. கடைசியாக கடந்த ஆண்டு நடந்த ஆசிய கோப்பை 20 ஓவர் போட்டியில் பாகிஸ்தான் அணி, இந்தியாவை வீழ்த்தி இருந்ததால் அந்த அணி நம்பிக்கையுடன் களம் இறங்கும்.

    இதுவரை உலகக் கோப்பை வெல்லாத இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இந்த போட்டி தொடரை வெற்றியுடன் தொடங்க அதிக தீவிரம் காட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. வழக்கம் போல இவ்விரு அணிகள் மல்லுக்கட்டும் இந்த போட்டி மீது அதிக எதிர்பார்ப்பு நிலவும் என்பதில் சந்தேகமில்லை.

    இவ்விரு அணிகளும் சர்வதேச 20 ஓவர் போட்டியில் இதுவரை 13 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 10-ல் இந்தியாவும், 3-ல் பாகிஸ்தானும் வெற்றி பெற்று இருக்கின்றன. இதில் 20 ஓவர் உலகக் கோப்பையில் இரு அணிகளும் 6 முறை மோதியதில் 4-ல் இந்தியாவும், 2-ல் பாகிஸ்தானும் வெற்றி பெற்றது அடங்கும்.

    இரவு 10.30 மணிக்கு தொடங்கும் மற்றொரு லீக் ஆட்டத்தில் சமாரி அட்டப்பட்டு தலைமையிலான இலங்கை-நிகார் சுல்தானா தலைமையிலான வங்காளதேச அணிகள் சந்திக்கின்றன. தொடக்க லீக் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவுக்கு அதிர்ச்சி அளித்து இருந்த இலங்கை அணி தனது உத்வேகத்தை தொடர முயற்சிக்கும். அதேநேரத்தில் வங்காளதேச அணி போட்டியை வெற்றியுடன் தொடங்க முழு திறமையையும் வெளிப்படுத்தும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. சர்வதேச 20 ஓவர் போட்டியில் இவ்விரு அணிகளும் இதுவரை 8 முறை நேருக்கு நேர் மோதியதில் 6-ல் இலங்கையும், 2-ல் வங்காளதேசமும் வெற்றி கண்டுள்ளன. இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    • பார்ல் நகரில் இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன.
    • இந்த ஆட்டங்களில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் வென்றன.

    பார்ல்:

    8-வது பெண்கள் டி 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது.

    பார்ல் நகரில் நடந்த முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுக்கு 135 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இங்கிலாந்து அணி 14.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 138 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது

    மற்றொரு போட்டியில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 173 ரன்கள் எடுத்தது. ஹீலி அரை சதமடித்தார்.

    அடுத்து ஆடிய நியூசிலாந்து 14 ஓவரில் 76 ரன்னில் சுருண்டது. இதன்மூலம் ஆஸ்திரேலியா 97 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    • துணை கேப்டன் மந்தனா நாளைய போட்டியில் விளையாடாதது அணிக்கு பின்னடைவாகவே கருதப்படுகிறது.
    • கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் முழுமையாக குணமடைந்துள்ளதாக பயிற்சியாளர் கூறினார்.

    கேப் டவுன்:

    மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி நாளை பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ளது. இதற்காக இந்திய வீராங்கனைகள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டனர்.

    இந்நிலையில், இந்திய அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா, கைவிரல் காயம் காரணமாக பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இருந்து விலகியுள்ளார். சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில், பீல்டிங் செய்தபோது ஸ்மிருதி மந்தனாவின் கைவிரலில் காயம் ஏற்பட்டது. இதனால் வங்காளதேசத்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை. தற்போது காயம் குணமடையாததால், பாகிஸ்தானுக்கு எதிராக நாளை நடைபெறும் போட்டியிலும் அவர் பங்கேற்கமாட்டார்.

    இதுபற்றி பயிற்சியாளர் கனித்கர் கூறுகையில், 'ஸ்மிருதிக்கு விரலில் காயம் ஏற்பட்டு இன்னும் குணமடைந்து வருவதால், அவர் பெரும்பாலும் விளையாட மாட்டார். இது எலும்பு முறிவு அல்ல. எனவே, இரண்டாவது லீக் ஆட்டத்தில் இருந்து அவர் விளையாடுவார் என நம்புகிறோம்' என்றார்.

    மேலும், வெஸ்ட் இண்டீ1 மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முத்தரப்பு தொடரின்போது ஏற்பட்ட தோள்பட்டை காயத்திலிருந்து கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் முழுமையாக குணமடைந்துள்ளதாகவும் பயிற்சியாளர் கூறினார். துணை கேப்டன் மந்தனா நாளைய போட்டியில் விளையாடாதது அணிக்கு பின்னடைவாகவே கருதப்படுகிறது.

    உலக கோப்பையில் இந்திய அணி பி பிரிவில் இடம்பெற்றுள்ளது. இந்த பிரிவில் இடம்பெற்றுள்ள மற்ற அணிகளான இங்கிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து ஆகிய அணிகளுடன் இந்தியா லீக் சுற்றில் மோத உள்ளது.

    • மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் தொடங்கியது.
    • முதல் போட்டியில் இலங்கை அணி தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது.

    கேப்டவுன்:

    8-வது மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் தொடங்கியது.

    இன்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்தது. கேப்டன் சமாரி

    அடப்பட்டு பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 68 ரன்னில் அவுட்டானார். விஷ்மி குணரத்னே 38 ரன்கள் எடுத்தார்.

    இதையடுத்து, 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. தொடக்கம் முதல் அந்த அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் வீழ்ந்தன.

    கடைசி ஓவரில் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் தென் ஆப்பிரிக்கா அணி 9 ரன்களை மட்டுமே எடுத்தது.

    இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 9 விக்கெட்டுக்கு 126 ரன்களை எடுத்தது. இதன்மூலம் 3 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி திரில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகி விருது சமாரி அடப்பட்டுக்கு வழங்கப்பட்டது.

    • மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் தொடங்குகிறது.
    • இந்திய பெண்கள் அணி இதுவரை உலக கோப்பையை வென்றதில்லை.

    கேப்டவுன்:

    8-வது மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் இன்று முதல் 26-ம் தேதி வரை நடக்கிறது. கடந்த ஆண்டு இறுதியில் நடக்க இருந்த இந்த போட்டி உலக கோப்பை கால்பந்து போட்டி காரணமாக தள்ளிவைக்கப்பட்டு இப்போது நடக்கிறது. மொத்தம் 23 ஆட்டங்கள் கேப்டவுன், பார்ல், கெபேஹா ஆகிய நகரங்களில் அரங்கேறுகிறது.

    மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. அவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசமும், 'பி' பிரிவில் இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ், அயர்லாந்தும் இடம் பெற்றுள்ளன.

    ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

    இன்று நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் சன் லூஸ் தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணி, சமாரி அட்டப்பட்டு தலைமையிலான இலங்கை அணியுடன் மோதுகிறது. இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது.

    இந்திய அணி தனது முதலாவது லீக்கில் பரம எதிரியான பாகிஸ்தானை நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) சந்திக்கிறது.

    சமீபத்தில் முதலாவது ஜூனியர் பெண்கள் உலகக் கோப்பை போட்டியில் இந்திய இளம் படை மகுடம் சூடி வரலாறு படைத்தது. அதேபோன்று சீனியர் போட்டியிலும் சாதிக்கும் உத்வேகத்துடன் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி தயாராகி வருகிறது. அதே நேரத்தில் 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணிக்கே கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் கணித்துள்ளனர். இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளும் சவால் அளிக்கக்கூடியது என்பதில் சந்தேகமில்லை.

    உலக கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.8¼ கோடியும், 2-வது இடத்தை பெறும் அணிக்கு ரூ.4¼ கோடியும் பரிசாக வழங்கப்படுகிறது. போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • இந்திய அணியின் கேப்டனாக ஹர்மன்பிரீத் கவுர் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • ஸ்மிருதி மந்தனா துணை கேப்டனாக நியமனம் செய்யப்பட்டார்.

    புதுடெல்லி:

    ஐ.சி.சி. சார்பில் பெண்களுக்கான 8-வது டி 20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு தென் ஆப்ரிக்க மண்ணில் பிப்ரவரி 10-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை நடக்கவுள்ளது.

    மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடருக்கான போட்டி அட்டவணையை ஏற்கனவே ஐசிசி வெளியிட்டது. இந்த தொடரில் இந்திய அணி 'குரூப் 2'ல் இடம் பெற்றுள்ளது. இதில் இங்கிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து அணிகளும் உள்ளன.

    இந்திய அணி பிப். 12-ம் தேதி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை சந்திக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் (பிப். 15), இங்கிலாந்து (பிப். 18), அயர்லாந்து (பிப். 20) அணிகளை இந்திய அணி சந்திக்கிறது.

    இந்நிலையில், இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் கேப்டனாக ஹர்மன்பிரீத் கவுர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி விவரம் வருமாறு:

    ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ஷபாலி வர்மா, யாஸ்திகா பாட்டியா, ரிச்சா கோஷ், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்லீன் தியோல், தீப்தி ஷர்மா, ராதா யாதவ், ரேணுகா தாக்கூர், அஞ்சலி சர்வானி, பூஜா வஸ்த்ரகர், ராஜேஸ்வரி கெய்க்வாட், ஷிகா பாண்டே

    ×