என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட்
ஸ்டபானி டெய்லர்
ஹெய்லி மேத்யூசை அவுட் ஆக்கிய மகிழ்ச்சியில் பூஜா வஸ்த்ராகர்
மகளிர் டி20 உலக கோப்பை: இந்தியாவுக்கு 119 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது வெஸ்ட் இண்டீஸ்

- ஸ்டபானி டெய்லர், ஷெமைன் காம்பெல்லே இருவரும் சிறப்பாக விளையாடி நம்பிக்கை அளித்தனர்.
- இந்தியா தரப்பில் தீப்தி சர்மா 3 விக்கெட்டும், பூஜா வஸ்த்ராகர் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று கேப் டவுனில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் சேர்த்தது.
கேப்டன் ஹெய்லி மேத்யூஸ் 2 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், ஸ்டபானி டெய்லர், ஷெமைன் காம்பெல்லே இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நம்பிக்கை அளித்தனர். ஸ்டபானி 42 ரன்களும், ஷெமைன் காம்பெல்லே 30 ரன்களும் சேர்த்தனர். செடீன் நேசன் 21 ரன்களும் (நாட் அவுட்), ஷபீகா 15 ரன்களும் அடித்தனர்.
இந்தியா தரப்பில் தீப்தி சர்மா 3 விக்கெட் கைப்பற்றினார். பூஜா வஸ்த்ராகர், ரேணுகா சிங் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்குகிறது.