search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Wimbledon 2018"

    விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் நடால், ஹாலெப் 2-வது சுற்றில் வெற்றி பெற்றனர். #Wimbledon2018 #SimonaHalep #RafaelNadal
    லண்டன்:

    ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் 2-வது சுற்றில் ‘நம்பர் ஒன்’ வீரர் ஸ்பெயினின் ரபெல் நடால் 6-4, 6-3, 6-4 என்ற நேர் செட்டில் கஜகஸ்தான் வீரர் மிகைல் குகுஷ்கினை தோற்கடித்தார். மற்றொரு ஆட்டத்தில் 3 முறை சாம்பியனான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-1, 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் ஹோராசியா ஜிபல்லோசை (அர்ஜென்டினா) பந்தாடினார்.

    2017-ம் ஆண்டு விம்பிள்டனில் இறுதிச்சுற்று வரை முன்னேறியவரான 5-ம் நிலை வீரர் மரின்சிலிச்(குரோஷியா) 6-3, 6-1, 4-6, 6-7 (3), 5-7 என்ற செட் கணக்கில் தரவரிசையில் 82-வது இடம் வகிக்கும் அர்ஜென்டினாவின் குடோ பெல்லாவிடம் வீழ்ந்தார். இந்த ஆட்டம் 3 மணி 13 நிமிடங்கள் நீடித்தது. இதே போல் இத்தாலி வீரர் தாமஸ் பாபியானோ 7-6 (7), 7-6(6), 6-3 என்ற நேர் செட் கணக்கில் முன்னணி வீரர் வாவ்ரிங்காவுக்கு (சுவிட்சர்லாந்து) அதிர்ச்சி அளித்தார்.



    பெண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) 3-6, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் கிளாரி லுவை (அமெரிக்கா) போராடி வீழ்த்தி 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    ‘நம்பர் ஒன்’ புயல் சிமோனா ஹாலெப் (ருமேனியா) தன்னை எதிர்த்த சாய்சாய் ஜெங்கை (சீனா) 7-5, 6-0 என்ற நேர் செட்டிலும், சுலோவக்கியாவின் சிபுல்கோவா 6-3, 6-4 என்ற நேர் செட்டில் ஹோகன்னா கோன்டாவையும் (இங்கிலாந்து) தோற்கடித்து 3-வது சுற்றை உறுதி செய்தனர்.

    ஆண்கள் இரட்டையர் முதலாவது சுற்றில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி- விஷ்ணு வர்தன் கூட்டணி 7-6 (7-5), 6-4, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் மார்கஸ் டேனியல் (நியூசிலாந்து)- வெஸ்லி கூலோப் (நெதர்லாந்து) இணையை வென்றது.

    மற்றொரு ஆட்டத்தில் சென்னையைச் சேர்ந்த ஜீவன் நெடுஞ்செழியன், அமெரிக்காவின் கிராஜிசெக்குடன் இணைந்து களம் இறங்கினார். இவர்கள் 6-7 (5), 6-7 (3), 6-7(2) என்ற நேர் செட் கணக்கில் நெதர்லாந்தின் சான்டர் அரென்ட்ஸ்- மிடில் கூப் இணையிடம் தோற்று வெளியேறினர்.  #Wimbledon2018 #SimonaHalep #RafaelNadal  #tamilnews
    விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் தொடரில் மூன்றேகால் மணி நேரம் போராடி தோல்வியை சந்தித்துள்ளார் 3-ம் நிலை வீரர் மரின் சிலிச். #Wimbledon2018 #Cilic
    விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த முறை 2-ம் இடம் பிடித்தவரும், 3-ம் நிலை வீரரும் ஆன குரோசியாவின் மரின் சிலிச், தரநிலை பெறாத அர்ஜென்டினாவின் கிடோ பெல்லாவை எதிர்கொண்டார்.

    முதல் இரண்டு செட்டுகளையும் மரின் சிலிச் 6-3, 6-1 என எளிதில் கைப்பற்றினார். இதனால் 3-வது செட்டை கைப்பற்றி 3-வது சுற்றுக்கு முன்னேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் 2-வது செட் முடிவடைந்த பின்னர் பெல்லா ஆட்டத்தில் அனல் பறந்தது. மரின் சிலிச்சை அதிர வைத்தார். 3-வது செட்டை 6-4 எனக் கைப்பற்றினார். 4-வது செட்டிலும் கடும் போட்டி கொடுத்தார். மரின் சிலிச்சும் பதிலடி கொடுக்க ‘டை பிரேக்கர்’ வரை சென்றது. இறுதியில் பெல்லா 7(7) - 6 (3) என கைப்பற்றினார்.



    இதனால் வெற்றியை தீர்மானிக்கும் 5-வது செட்டில் இருவரும் களம் இறங்கினார்கள். இதிலும் மரின் சிலிச்சால் ஜொலிக்க முடியவில்லை. 5-வது செட்டை 5-7 என இழந்தார். இதனால் கடைசி மூன்று செட்டுகளை தொடர்ந்து இழந்து 2-வது செட்டோடு விடைபெற்றார் மரின் சிலிச்.

    மரின் சிலிச்சை வெளியேற்றிய பெல்லா இதுவரை கிராண்ட் ஸ்லாம் தொடரில் 2-வது சுற்றை தாண்டியதே கிடையாது. தற்போது 3-ம் நிலை வீரரை வீழ்த்தி 3-வது சுற்றிற்கு முன்னேறியுள்ளார்.
    விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் பெடரர், செரீனா 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். #Wimbledon2018 #Federer #SerenaWilliams
    லண்டன்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் ஒற்றையர் பிரிவில் நேற்று 2-வது சுற்று ஆட்டங்கள் நடந்தன. ஆண்கள் பிரிவில் 8 முறை சாம்பியனான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 6-4, 6-4, 6-1 என்ற நேர் செட்டில் லுகாஸ் லாக்கோவை (சுலோவக்கியா) தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார். பெடரர் அடுத்து ஜெர்மனியின் ஜான் லினார்ட் ஸ்டிரப்பை சந்திக்கிறார்.

    கனடா வீரர் மிலோஸ் ராவ்னிக் தன்னை எதிர்த்த ஆஸ்திரேலியாவின் ஜான் மில்மானை 7-6 (4), 7-6 (4), 7-6 (4) என்ற நேர் செட்டில் விரட்டினார். இதே போல் கேல் மான்பில்ஸ் (பிரான்ஸ்), மெக்டொனால்டு, சாம் குயரி (அமெரிக்கா) ஆகியோரும் 2-வது தடையை கடந்தனர்.

    பெண்கள் பிரிவில் குழந்தை பெற்றுக் கொண்டு களம் திரும்பியுள்ள அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்கில் டோமோவை (பல்கேரியா) பந்தாடினார். வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா), கரோலினா பிளிஸ்கோவா, சபரோவா (செக்குடியரசு), மேடிசன் கீஸ் (அமெரிக்கா) உள்ளிட்டோர் தங்களது 2-வது சுற்று ஆட்டங்களில் வெற்றி கண்டனர்.

    அதே சமயம் 2-ம் நிலை வீராங்கனையும், ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனுமான கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்) அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அவரை 6-4, 1-6, 7-5 என்ற செட் கணக்கில் ரஷியாவின் மகரோவா வீழ்த்தினார்.

    முன்னதாக, முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை ரஷியாவின் மரிய ஷரபோவா நேற்று முன்தினம் இரவு நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் 7-6 (3), 6-7 (3), 4-6 என்ற செட் கணக்கில் சக நாட்டவர் விடாலியா டையட்சென்கோவிடம் போராடி வீழ்ந்தார். இந்த ஆட்டம் 3 மணி 8 நிமிடங்கள் நீடித்தது.  #Wimbledon2018 #Federer #SerenaWilliams  #tamilnews
    விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் முதல்நாளில் முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தோல்வியை சந்தித்தனர். #wimbeldon 2018
    கிராண்ட் ஸ்லாம் டென்ஸ் தொடரில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நேற்று தொடங்கியது. நடப்பு சாம்பியனும், இந்தப் போட்டியின் முதல் வரிசை வீரருமான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), ரோனிக் (கனடா), சிலிச் (குரோஷியா), இஸ்னர் (அமெரிக்கா), ஆண்டர்சன் (தென்ஆப்பிரிக்கா) போன்ற முன்னணி வீரர்கள் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.

    உலக தரவரிசையில் 6-வது இடத்தில் இருக்கும் டிமிட்ரோவ் (பல்கேரியா) தொடக்க சுற்றிலேயே வெளியேறினார். சுவிட்சர்லாந்தை சேர்ந்த பிரபல வீரரான வாவ்ரிங்கா 1-6, 7-6, (7-3), 7-6, (7-5), 6-4 என்ற கணக்கில் டிமிட்ரோவை வீழ்த்தினார். காயம் காரணமாக நீண்ட நாட்களாக விளையாடாமல் இருந்த வாவ்ரிங்கா, டென்னிஸ் களத்திற்கு திரும்பியதும் 6-ம் நிலை வீரரை வீழ்த்தி அசத்தியுள்ளார். இதேபோல் 23-ம் நிலை வீரரான கேஸ்கட்டும் (பிரான்ஸ்) தோற்றார்.


    ஸ்டீபன்ஸ்

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் வில்லியம்ஸ் சகோதரிகள் (அமெரிக்கா) வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர். செரீனா வில்லியம்ஸ் 7-5, 6-3 என்ற கணக்கில் அரண்ட்சா ருஸ்சையும் (நெதர்லாந்து) வீனஸ் வில்லியம்ஸ் 6-7 (3-7), 6-2, 6-1 என்ற கணக்கில் ஜோகன்னா லார்சரையும் (சுவீடன்) வீழ்த்தினார்கள். மற்ற ஆட்டங்களில் வோஸ்னியாக்கி (டென்மார்க்), ரட்வன்ஸ்கா (போலந்து), மேடிசன் (அமெரிக்கா) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

    5-வது வரிசையில் இருக்கும் சுவிட்டோலினா (உக்ரைன்) முதல் சுற்றிலேயே அதிர்ச்சிகரமாக தோற்றார். ஜெர்மனியை சேர்ந்த மரியாவிடம் அவர் 6-7(3-7), 6-4, 1-6 என்ற கணக்கில் தோற்று வெளியேறினார். இதேபோல தரவரிசை 4-வது இடத்தில் இருக்கும் ஸ்டீபன்சும் (அமெரிக்கா) அதிர்ச்சிகரமாக தோற்றார்.
    உலகத் தரவரிசையில் 183-ம் இடத்தில் இருக்கும் செரீனா வில்லியம்ஸிற்கு விம்பிள்டன் தொடரில் 25-வது தரநிலை வழங்கப்பட்டுள்ளது. #wimbledon2018
    விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் ஜூலை 2-ந்தேதி முதல் ஜூலை 15-ந்தேதி வரை லண்டனில் உள்ள ஆல் இங்கிலாந்து கிளப்பில் நடக்கிறது. இந்த தொடருக்கான தரநிலை பெற்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பெயர் வெளியிடப்பட்டது. இதில் செரீனா வில்லியம்ஸ்க்கு 25-ம் இடம் வழங்கப்பட்டுள்ளது.

    7 முறை விம்பிள்டனையும், 23 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டத்தையும் வென்ற செரீனா வில்லியம்ஸ் கடந்த ஆண்டு ஆஸ்திரேலியா ஓபனை வென்ற பின், கர்ப்பம் காரணமாக டென்னிசில் இடம்பெறாமல் இருந்தார்.

    சுமார் ஒன்றைரை ஆண்டுகளுக்குப்பின் பிரெஞ்ச் கிராண்ட் ஸ்லாம் தொடரில் களம் இறங்கினார். இந்த தொடரின்போது அவருக்கு தரநிலை வழங்கப்படவில்லை. ஆனால், விம்பிள்டன் ஓபனில் தனக்கு தரநிலை வழங்கப்பட வேண்டும் என்ற விருப்பம் தெரிவித்திருந்தார்.



    இந்நிலையில் அவருக்கு 25-வது தரநிலை வழங்கப்பட்டுள்ளது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரவில் ரோஜர் பெடரர் முதல் நிலையை பெற்றுள்ளார். நடால் 2-ம் நிலையை பெற்றுள்ளார்.

    செரீனா வில்லியம்ஸ் தற்போது டென்னிஸ் தரவரிசையில் 183-வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரான விம்பிள்டனுக்கான தகுதிச் சுற்றில் இந்திய வீரர்கள் ராம்குமார், பிரஜ்னேஷ் தோல்வியை சந்தித்தனர். #wimbledon2018
    கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் ஜூலை 2-ந்தேதி முதல் ஜூலை 15-ந்தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்பதற்கான ஆண்கள் ஒற்றையர் பிரிவிற்கான தகுதிச் சுற்று நேற்று தொடங்கியது.

    இதில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன் இத்தாலியைச் சேர்ந்த சிமோன் பொல்லேலியை எதிர்கொண்டார். இதில் 3-6, 4-6 எனத் தோல்வியடைந்து வெளியேறினார்

    சுமித் நகல் போலந்தின் கமில் மஜ்ச்ர்சாக்கை எதிர்கொண்டார். இதில் சுமித் நகல் 2-6, 0-6 எனத் தோல்வியடைந்தார்.



    பிரஜ்னேஷ் ஜெர்மனியைச் சேர்ந்த தோபியாஸ் கம்கேவை எதிர்கொண்டார். இதில் பிரஜ்னேஷ் 1-6, 4-6 என படுதோல்வியடைந்தார்.
    ×