என் மலர்

  செய்திகள்

  விம்பிள்டன்- மூன்றேகால் மணி நேரம் போராடி தோல்வியை சந்தித்த 3-ம் நிலை வீரர்
  X

  விம்பிள்டன்- மூன்றேகால் மணி நேரம் போராடி தோல்வியை சந்தித்த 3-ம் நிலை வீரர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் தொடரில் மூன்றேகால் மணி நேரம் போராடி தோல்வியை சந்தித்துள்ளார் 3-ம் நிலை வீரர் மரின் சிலிச். #Wimbledon2018 #Cilic
  விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த முறை 2-ம் இடம் பிடித்தவரும், 3-ம் நிலை வீரரும் ஆன குரோசியாவின் மரின் சிலிச், தரநிலை பெறாத அர்ஜென்டினாவின் கிடோ பெல்லாவை எதிர்கொண்டார்.

  முதல் இரண்டு செட்டுகளையும் மரின் சிலிச் 6-3, 6-1 என எளிதில் கைப்பற்றினார். இதனால் 3-வது செட்டை கைப்பற்றி 3-வது சுற்றுக்கு முன்னேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

  ஆனால் 2-வது செட் முடிவடைந்த பின்னர் பெல்லா ஆட்டத்தில் அனல் பறந்தது. மரின் சிலிச்சை அதிர வைத்தார். 3-வது செட்டை 6-4 எனக் கைப்பற்றினார். 4-வது செட்டிலும் கடும் போட்டி கொடுத்தார். மரின் சிலிச்சும் பதிலடி கொடுக்க ‘டை பிரேக்கர்’ வரை சென்றது. இறுதியில் பெல்லா 7(7) - 6 (3) என கைப்பற்றினார்.  இதனால் வெற்றியை தீர்மானிக்கும் 5-வது செட்டில் இருவரும் களம் இறங்கினார்கள். இதிலும் மரின் சிலிச்சால் ஜொலிக்க முடியவில்லை. 5-வது செட்டை 5-7 என இழந்தார். இதனால் கடைசி மூன்று செட்டுகளை தொடர்ந்து இழந்து 2-வது செட்டோடு விடைபெற்றார் மரின் சிலிச்.

  மரின் சிலிச்சை வெளியேற்றிய பெல்லா இதுவரை கிராண்ட் ஸ்லாம் தொடரில் 2-வது சுற்றை தாண்டியதே கிடையாது. தற்போது 3-ம் நிலை வீரரை வீழ்த்தி 3-வது சுற்றிற்கு முன்னேறியுள்ளார்.
  Next Story
  ×