search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "widespread rain"

    • ஈரோட்டில் 2-வது நாளாக பரவலாக மழை பெய்தது.
    • அதிகபட்சமாக நம்பியூரில் 61 மி.மீ பதிவானது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் அக்னி நட்சத்திர வெயில் முடிந்த பிறகும் கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்து வந்தது. குறிப்பாக பகல் நேரங்களில் அனல் காற்றுடன் வெயில் கொளுத்தியது. வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்து வந்தனர்.

    இந்நிலையில் நேற்று மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நின்றதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் மாவட்டத்தில் 2-வது நாளாக நேற்றும் இடியுடன் கனமழை பெய்தது.

    ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று இரவு முழுவதும் இடியுடன் கூடிய மழை பெய்தது. கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. திட்ட பணிகளுக்காக தோண்டப்பட்ட குழிகள் மழைநீரால் நிரம்பியது.

    மேலும் பல்வேறு இடங்கள் குண்டும், குழியுமாக காட்சி அளித்தது. ஈரோடு வ.உ.சி. காய்கறிகள் மார்க்கெட்டில் வழக்கம்போல் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சி அளித்தது. இதன் காரணமாக பொதுமக்கள், வியாபாரிகள் கடும் அவதி அடைந்தனர்.

    இதேப்போல் மொடக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக நம்பியூர் பகுதியில் 61 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

    இதேபோல் பெருந்துறை, சென்னிமலை, வரட்டுப்பள்ளம், கொடுமுடி, கொடிவேரி போன்ற பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மழையால் வெப்பமான சூழ்நிலை மாறி குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

    ஈரோட்டில் நேற்று இரவு பெய்த மழை மில்லி மீட்டரில் வருமாறு:-

    நம்பியூர்-61, பெருந்துறை-37, சென்னிமலை-35, சத்தியமங்கலம்-16, மொடக்குறிச்சி-11, கொடுமுடி-8.2, கொடிவேரி-8, கோபி-7.6, குண்டேரிபள்ளம்-6.4, கவுந்தப்பாடி-6.4, ஈரோடு-5, அம்மாபேட்டை-1.2.

    தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததால் வெப்பம் தணிந்தது.

    கூடலூர்:

    தமிழகத்தில் வழக்கத்தை விட இந்த ஆண்டு வெயில் வாட்டி வதைத்து வருகிறது. தேனி மாவட்டத்தில் கோடை மழை பெய்யாததால் வறட்சி மேலோங்கி வருகிறது. இதனால் அணைகளின் நீர்மட்டம் குறைந்து கொண்டே வருகிறது.

    வழக்கமாக ஜூன் மாதத்தில் முதல்போக சாகுபடிக்காக முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். இந்த ஆண்டு குறித்த நேரத்தில் தண்ணீர் திறக்கப்படுமா? என்பது கேள்விக்குறியே? நேற்றும் பகல் பொழுதில் வெயில் சுட்டெரித்தது.

    இரவு நேரத்தில் திடீரென இடி மின்னலுடன் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டது. தேனி, கூடலூர், பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. பெரியாறு அணையின் நீர்மட்டம் 112.20 அடியாக உள்ளது. 7 கன அடி நீர் வருகிற நிலையில் 100 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    வைகை அணையின் நீர்மட்டம் 36.78 அடியாக உள்ளது. 37 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 60 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 36.10 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 93.15 அடி. வரத்து இல்லை. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    பெரியாறு 2.6, தேக்கடி 15.8, கூடலூர் 14.4, உத்தமபாளையம் 22.6, சண்முகாநதி அணை 6, வீரபாண்டி 22, வைகை அணை 23, மஞ்சளாறு 32 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதால் டெல்டா பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. #Rain

    தஞ்சாவூர்:

    வங்கக் கடலில் உருவான கஜா புயல் கடந்த 16-ந்தேதி அதிகாலை நாகை - வேதாரண்யம் பகுதியில் கரையை கடந்தது. இதனால் தஞ்சை, நாகை, திருவாரூர், உள்பட டெல்டா மாவட்டங்களை கஜா புயல் சூறையாடி சென்றது.

    புயல் வந்து சென்றதால் வீடுகள், மரங்கள் சேதமாகி பெரும் அழிவை சந்தித்தது. இதனால் மக்களின் அன்றாட பணி பாதிக்கப்பட்டு தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.

    இந்த நிலையில் புதிதாக வங்கக் கடலில் உருவான காற்றழுத்தம் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதால் இன்று முதல் வட தமிழகத்தில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    கஜா புயல் தற்போது அரபிக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது. அதன் தாக்கமாக தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இதைத் தொடர்ந்து புதிய காற்றழுத்த மண்டலம் உருவாகி வட தமிழகத்தில் மழை பெய்யும் என்ற அறிவிப்பு டெல்டா பகுதி மக்களுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

    ஆனால் நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட டெல்டா பகுதிகளில் நேற்று மாலை முதலே மழை பெய்ய தொடங்கியது. தஞ்சை மாவட்டத்தில் நேற்று மாலை மேகம் இருள் சூழ்ந்து மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் இரவு லேசான மழை பெய்து அது பலத்த மழையாக கொட்டி தீர்த்தது.

    திருவாரூர் மாவட்டத்தில் நேற்று காலை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மழை வரும் என்று எதிர்ப்பார்த்திருந்த நிலையில் மாலை வரை மழை வரவில்லை.

    பின்னர் திடீரென லேசான தூரல் விழுந்தது. இரவு வரை லேசான மழை நீடித்து கொண்டே இருந்தது. இன்று காலையுமம் லேசான மழை பெய்தது. பின்னர் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

    நாகை மாவட்டத்தில் நேற்று மாலை முதலே லேசான மழையும் ஒரு சில இடங்களில் பலத்த மழையும் பெய்தது. நாகை, வேதாரண்யம், தரங்கம்பாடி, மயிலாடுதுறை, சீர்காழி உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலையும் லேசான மழை பெய்தது.

    மேலும் வைத்தீஸ்வரன் கோவில், கொள்ளிடம், பழையாறு, திருவங்காடு, பூம்புகார் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழையாக பெய்தது. இதைத் தொடர்ந்து திருமருகல் பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான திட்டச்சேரி, திருச்சங்காட்டங்குடி, மருங்கூர், திருப்பயத்தங்குடி, ஏனங்குடி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை முதலே லேசான மழை பெய்தது.

    இன்று காலை பலத்த மழையாக பெய்தது. மேலும் இன்னமும் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. இதனால் எந்த நேரமும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    கஜா புயலினால் தங்கள் வீடுகளை இழுந்து நடு தெருவில் நின்று கொண்டிருக்கும் மக்கள் இன்னும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பாத நிலையில் தற்போது புதிய காற்றழுத்த மண்டலத்தால் பெய்து வரும் மழை அவர்களை மேலும் துயரத்தில் ஆழ்த்துகிறது.

    இதனால் மக்கள் முன் கூட்டியே அத்தியாவசிய பொருட்கள் பால், மெழுகுவர்த்தி, உணவு பொருட்கள் உள்ளிட்டவை வாங்கி இருப்பு வைத்து கொள்வதற்கு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.  #Rain

    ×