search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Wheat Recipes"

    மாலை நேரத்தில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு செய்து கொடுக்க ஆரோக்கியமான டிபன் இந்த கோதுமை வெல்ல தோசை. இன்று இந்த தோசை செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை மாவு - 2 கப்,
    அரிசி மாவு - அரை கப்,
    வெல்லம் (பொடித்தது) - அரை கப்,
    ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்,
    தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,
    ரிஃபைண்ட் ஆயில் - கால் கப்,
    உப்பு - ஒரு சிட்டிகை.



    செய்முறை :

    வெல்லத்தை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.

    இதனுடன் கோதுமை மாவு, அரிசி மாவு, தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள், உப்பு சேர்த்துக் கலந்து, தோசை மாவை பதத்தில் கரைத்து கொள்ளவும்.

    அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடானதும் எண்ணெயை தடவி, ஒரு கரண்டி மாவை ஊற்றி (அடுப்பை 'சிம்’மில் வைக்கவும்) மெல்லிய தோசையாக வார்க்கவும்.

    சுற்றிலும் எண்ணெய் ஊற்றி, சிவந்ததும் தோசையை திருப்பிப் போடவும். இருபுறமும் சிவந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.

    சூப்பரான கோதுமை வெல்ல தோசை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சர்க்கரைநோயாளிகளுக்கு உகந்த கோதுமை சேமியாவை வைத்து எளிய முறையில் சூப்பரான பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை சேமியா - 250 கிராம்,
    பெரிய வெங்காயம் - ஒன்று,
    தக்காளி - ஒன்று ,
    பீன்ஸ் - 3,
    கேரட் - ஒன்று,
    பிரிஞ்சி இலை - ஒன்று,
    பச்சைப் பட்டாணி - ஒரு கைப்பிடியளவு,
    காலிஃப்ளவர் - சிறிதளவு (காலிஃப்ளவரில் இருந்து நறுக்கிய சிறிய பூக்கள்),
    உருளைக்கிழங்கு - ஒன்று,
    இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,
    மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,
    தனியாத்தூள் (மல்லித்தூள்) - கால் டீஸ்பூன்,
    கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்,
    கொத்தமல்லி - சிறிதளவு,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    கொத்தமல்லி, வெங்காயம், தக்காளியை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

    சுடுநீரில் கோதுமை சேமியாவைப் போட்டு இரண்டு நிமிடங்கள் கழித்து வடிகட்டி எடுக்கவும்.

    உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ் ஆகியவற்றை சிறிய துண்டுகளாக நறுக்கவும்.

    பாத்திரத்தில் கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, காலிஃப்ளவர் பூக்கள், பச்சைப் பட்டாணி சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு வேகவைத்து எடுதுது கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய்விட்டு பிரிஞ்சி இலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து இதனுடன் வேகவைத்த காய்கறி, மிளகாய்த்தூள், உப்பு, கரம் மசாலாத்தூள், தனியாத்தூள் சேர்த்து மேலும் வதக்கவும்.

    பிறகு, கோதுமை சேமியா சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து மிதமான தீயில் மூடி வைத்து வேக வைக்கவும்.

    வெந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான சத்தான கோதுமை சேமியா பிரியாணி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×