search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Wheat Recipes"

    தீபாவளி அன்று ஆரோக்கியமான இனிப்பு வகைகளை செய்து, சுவைத்து கொண்டாடுவோம். அந்த வகையில் இன்று கோதுமை ரவை கருப்பட்டி பாயாசம் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    கோதுமை ரவை - 50 கிராம்
    தேங்காய் துருவல் - அரை கப்
    கருப்பட்டி - முக்கால் கப்
    முந்திரி, திராட்சை - தேவையான அளவு
    சுக்கு பொடி - ஒரு சிட்டிகை
    ஏலக்காய் பொடி - ஒரு சிட்டிகை
    காய்ச்சிய பால் - ஒரு தம்ளர்
    நெய் - தேவையான அளவு

    செய்முறை:

    வாணலியில் நெய்விட்டு உருகியதும், முந்திரி, உலர்ந்த திராட்சை, தேங்காய் துருவல் சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.

    அதே வாணலியில், கோதுமை ரவை சேர்த்து வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்.

    ரவை வறுப்பட்டதும் 4 கப் வெந்நீர் சேர்த்து நன்றாக வேக வைக்கவும்.

    மற்றொரு பாத்திரத்தில் கருப்பட்டியுடன், தண்ணீர் சேர்த்து நன்றாக கரைக்கவும்.

    கோதுமை ரவை நன்றாக வெந்ததும், கருப்பட்டி ஜீரா சேரத்து கிளறிவிடவும்.

    கோதுமை ரவையுடன், கருப்பட்டி சேர்ந்து வெந்ததும் சுக்குப் பொடி, ஏலக்காய்ப் பொடி, வறுத்து வைத்த முந்திரி கலவையை சேர்க்கவும்.

    இறுதியாக, பால் சேர்த்து கொதி வந்ததும் இறக்கவும்.

    சுவையான கோதுமை ரவை கருப்பட்டி பாயாசம் ரெடி..!.

    இதையும் படிக்கலாம்...தீபாவளி ஸ்பெஷல்: பாதாம் பர்ஃபி
    பெரியோர் முதல் சிறியவர் வரை அனைவரும் சாப்பிட சத்தான உணவு கோதுமை ரவை புட்டு. இன்று இந்த புட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்  :

    கோதுமை ரவை - 3 கப்
    தேங்காய்த் துருவல் - 2 கப்
    வாழைப்பழம் - 2
    நாட்டு சர்க்கரை - தேவையான அளவு
    உப்பு - சிறிதளவு



    செய்முறை :

    கோதுமை ரவையை வெறும் கடாயில் போட்டு நன்றாக வறுத்து அகலமான பாத்திரத்தில் போடவும்.

    இதில் கொஞ்சம் சூடான நீர் தெளித்து ஈரப்பதத்துடன் பிசைந்து கொள்ளவும்.

    புட்டுக் குழலில் தேங்காய் துருவல் கொஞ்சம் போட்டு அடுத்து பிசைந்த ரவை போட்டு மீண்டும் தேங்காய் துருவல் என நிரப்பி 10 முதல் 12 நிமிடங்கள் வேக வைக்கவும்.

    வெந்ததும் வாழைப்பழம், நாட்டு சர்க்கரை போட்டு பிசைந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

    சூப்பரான கோதுமை ரவை புட்டு ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கேழ்வரகில் களி செய்து சாப்பிட்டு இருப்பீங்க. கோதுமை மாவிலும் களி செய்யலாம். இந்த களி சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் உகந்தது. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    கோதுமை மாவு - 1 கப்,
    உப்பு - சிறிது,
    எண்ணெய் - 1 டீஸ்பூன்,
    தண்ணீர் - 3 கப்.



    செய்முறை :

    கோதுமை மாவில் அரை கப் தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் கரைத்து கொள்ளவும்.

    அடிகனமான கடாயில் 2 1/2 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.

    கொதிக்கும் தண்ணீரில் எண்ணெயும் சிறிது உப்பும் சேர்க்கவும்.

    தண்ணீர் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் கரைத்து வைத்துள்ள கோதுமை மாவினை ஊற்றவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்றாக வேக விடவும்.

    கையில் தண்ணீர் தொட்டு களியில் கை வைத்தால் கையில் ஒட்டாமல் இருக்க வேண்டும். இந்த பதம் வந்ததும் இறக்கவும்.

    சாம்பார், பொரியல், குழம்பு, ரசம், தயிர் பிசைந்து இதனை சாப்பிடலாம்.

    சத்தான கோதுமை மாவு களி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    நீரிழிவு நோயாளிகளுக்கு மிகச் சிறந்த உணவு கோதுமை களி. இது உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. இன்று இந்த களியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை மாவு - 1 கப்,
    உப்பு - சிறிது,
    எண்ணெய் - 1 டீஸ்பூன்,
    தண்ணீர் - 3 கப்.



    செய்முறை:

    கோதுமை மாவை சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும்.

    அடிகனமான பாத்திரத்தில் 2-1/2 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.

    கொதிக்கும் தண்ணீரில் எண்ணெயும் சிறிது உப்பும் சேர்க்கவும்.

    அடுத்து அதில் கரைத்து வைத்துள்ள கோதுமை கரைசலை ஊற்றி கைவிடாமல் கிளறி நன்றாக வேக விடவும்.

    கையில் தண்ணீர் தொட்டு களியில் கை வைத்தால் கையில் ஒட்டாமல் இருக்க வேண்டும். இந்த பதம் வந்ததும் இறக்கவும்.

    சாம்பார், பொரியல், குழம்பு, ரசம், தயிர் பிசைந்து இதனை சாப்பிடலாம்.

    சூப்பரான கோதுமை களி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சர்க்கரை நோயாளிகள் தினமும் கோதுமையை உணவில் சேர்த்து கொள்வது உடலுக்கு நல்லது. இன்று கோதுமை அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை - ஒரு கப்,
    அரிசி  - அரை கப்,
    துவரம்பருப்பு - கால் கப்,
    உளுந்தம்பருப்பு - சிறிதளவு,
    கடலைப்பருப்பு - கால் கப்,
    வெங்காயம் - 1,
    கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
    பெருங்காயம், காய்ந்த மிளகாய், எண்ணெய், உப்பு  - தேவையான அளவு,



    செய்முறை :

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கோதுமையை தனியாகவும், அரிசி, பருப்பு வகைகளை ஒன்றாகவும் 3 மணி நேரம் ஊற வைக்கவும்.

    பின்னர் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து பெருங்காயம், உப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைக்கவும்.

    அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்ட அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து நன்றாக கலந்து அரை மணிநேரம் தனியாக வைக்கவும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும மாவை அடைகளாக வார்த்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு வேகவிட்டு எடுக்கவும்.

    சத்தான சுவையான கோதுமை அடை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வித விதமான பூரி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று தக்காளி சேர்த்து சூப்பரான ருசியான பூரி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை மாவு - 1 கப்
    தக்காளி - 4
    காய்ந்த மிளகாய் - 3
    கொத்தமல்லி - சிறிதளவு
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
    நெய் - சிறிதளவு



    செய்முறை :

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெந்நீரில் ப.மிளகாய், தக்காளியை போட்டு 10 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். பின்னர் ஆறியதும் தோலூரித்து மிக்சியில் போட்டு விழுதாக அரைத்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு அதனுடன் அரைத்த தக்காளி, கொத்தமல்லி, ப.மிளகாய் விழுது, நெய், உப்பு சேர்த்து நன்றாக கலந்த பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.

    பின்னர் மாவை பூரிகளாக உருட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து ருசிக்கவும்.

    சூப்பரான தக்காளி பூரி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு இனிப்பு என்றால் மிகவும் பிடிக்கும். இன்று கோதுமை மாவில் ஸ்வீட் போண்டா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    கோதுமை மாவு - 1 கப்
    வெல்லம் - 1/2 கப்
    வாழைப்பழம் - 1
    ஏலக்காய் - 2
    ரவை - ஒரு கைப்பிடி
    பேக்கிங் சோடா - 1 சிட்டிகை
    உப்பு - 1 சிட்டிகை
    எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :

    வாழைப்பழம் தோல் நீக்கி மிக்சியில் போட்டு அதனுடன் வெல்லம், ஏலக்காய் போட்டு அரைத்து கொள்ளவும்.

    அரைத்த வாழைப்பழ விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் கோதுமை மாவு, ரவை, பேக்கிங் சோடா, 1 சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாக கரைத்து கொள்ளவும்.

    மாவு கையில் எடுக்கும் பதத்தில் கரைத்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை எடுத்து போண்டா போல் போடவும். ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

    சுவையான கோதுமை ஸ்வீட் போண்டா ரெடி

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பல்வேறு வகையான பக்கோடா செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று கோதுமை மாவில் பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை மாவு - 2 கப்,
    கடலை மாவு - ஒரு கப்,
    அரிசி மாவு - அரை கப்,
    வெங்காயம் - ஒன்று,
    பச்சை மிளகாய் - 6,
    இஞ்சி - சிறு துண்டு,
    சமையல் சோடா - ஒரு சிட்டிகை,
    கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



    செய்முறை:

    வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    இஞ்சியை தோல் சீவி, துருவிக்கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, கடலை மாவு, அரிசி மாவு போட்டு நன்றாக கலந்த அதனுடன் கறிவேப்பிலை, நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், இஞ்சி துருவல், கொத்தமல்லி, உப்பு, சமையல்சோடா சேர்த்துக் கலந்து, லேசாக தண்ணீர் தெளித்து, பகோடா மாவு போல பிசிறி கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசிறிய மாவை எடுத்து கிள்ளிப் போட்டு, பொரித்து எடுக்கவும்.

    சூப்பரான கோதுமை கோதுமை பக்கோடா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சர்க்கரை நோயாளிகள் தினமும் உணவில் கேழ்வரகு, கோதுமையை சேர்த்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். இன்று இந்த இரண்டு மாவையும் வைத்து அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை மாவு - 1 கப்,
    கேழ்வரகு மாவு - அரை கப்,
    சீரகம் - 1/2 டீஸ்பூன்,
    வெங்காயம் - 3,
    பச்சை மிளகாய் - 4,
    கறிவேப்பிலை - சிறிதளவு,
    உப்பு, கடலை எண்ணெய் - தேவைக்கு.



    செய்முறை :

    வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, கேழ்வரகு, சீரகம், கறிவேப்பிலை, வெங்காயம், பச்சைமிளகாய், உப்பு சேர்த்து ஒன்றாக கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அடை மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை அடைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து சூடாக பரிமாறவும்.

    சூப்பரான சத்தான கோதுமை கேழ்வரகு அடை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கோதுமையில் பல்வேறு சத்தான, சுவையான உணவுகளை தயார் செய்யலாம். இன்று கோதுமை ரவா தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை மாவு - முக்கால் கப்,
    அரிசி மாவு - கால் கப்,
    கோதுமை ரவை - அரை கப்,
    புளித்த மோர் - ஒரு கரண்டி,
    சீரகம் - ஒரு டீஸ்பூன்,
    வெங்காயம், பச்சை மிளகாய் - தலா ஒன்று,
    இஞ்சி - சிறு துண்டு,
    கொத்தமல்லி - ஒரு டேபிள்ஸ்பூன்,  
    கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு,
    எண்ணெய் - தேவையான அளவு,
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை:

    கோதுமை ரவையை வெறும் கடாயில் போட்டு வறுத்து கொள்ளவும்.

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    இஞ்சியை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, கோதுமை மாவு, ரவை, உப்பு, சீரகம், மோர், பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து, தண்ணீர் விட்டு, தோசை மாவை விட நீர்க்கக் கரைத்துக் கொள்ளவும்.

    அடுப்பில் நான்ஸ்டிக் தோசைக்கல்லை வைத்து சூடானதும் சிறிது எண்ணெயை தடவி, மாவை விளிம்பிலிருந்து வட்டமாக உள்புறம் ஊற்றவும். ஒரு டீஸ்பூன் எண்ணெயை சுற்றிலும் விட்டு, தோசை சிவந்ததும் திருப்பிப் போட்டு, முறுகலாக எடுத்துப் பரிமாறவும்.

    சூப்பரான கோதுமை ரவா தோசை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சர்க்கரை நோயாளிகள் தினமும் கோதுமையை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று தக்காளி சேர்த்து கோதுமை தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தக்காளி - 2,
    கோதுமை மாவு - 1 கப்,
    பெரிய வெங்காயம் - 1,
    இட்லி மாவு - அரை கிராம்,
    கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு,
    காய்ந்தமிளகாய் - 2,
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு,
    சீரகம் - 1 டீஸ்பூன்.



    செய்முறை :

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தக்காளியை கோதுமை மாவுடன் சேர்த்து மிக்சியில் அரைத்து, அதனுடன் காய்ந்தமிளகாய், சீரகம், கறிவேப்பிலை சேர்த்து அரைக்கவும்.

    இட்லி மாவுடன் அரைத்த தக்காளி மாவு கலவை, உப்பு சேர்த்து நன்கு கலந்து, தேவையான தண்ணீர் சேர்த்து மாவை கரைத்துக் கொள்ளவும்.

    பின்பு நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லியை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுத்து பரிமாறவும்.

    சூப்பரான சத்தான தக்காளி கோதுமை தோசை ரெடி.

    தேங்காய் சட்னியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வடமாநிலங்களில் டோக்ளா மிகவும் பிரபலமான ஸ்நாக்ஸ். இன்று கோதுமை ரவையை வைத்து சூப்பரான டோக்ளா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை ரவை - ஒரு கப்,
    பச்சை மிளகாய் - ஒன்று,
    இஞ்சி - சிறிய துண்டு,
    கொத்தமல்லி (நறுக்கியது) - ஒரு டேபிள்ஸ்பூன்,
    புளித்த தயிர் - ஒரு டேபிள்ஸ்பூன்,
    ஈனோ ஃப்ரூட்சால்ட் பிளெயின் - சிறிதளவு,
    தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்,
    எலுமிச்சைச் சாறு - அரை டீஸ்பூன்,
    மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,
    கடுகு - அரை டீஸ்பூன்,
    சீரகம் - அரை டீஸ்பூன்,
    பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,
    பொடித்த சர்க்கரை - அரை டீஸ்பூன்,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



    செய்முறை:


    கோதுமை ரவையை வெறும் கடாயில் போட்டு லேசாக வறுத்தெடுக்கவும்.

    இஞ்சியை தோல் சீவி, பச்சை மிளகாயை காம்பு நீக்கி ஒன்றாக சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

    வறுத்த கோதுமை ரவையை ஒரு பாத்திரத்தில் போட்டு... உப்பு, இஞ்சி - பச்சை மிளகாய் விழுது, கொத்தமல்லி, ஈனோ ஃப்ரூட் சால்ட், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், சீரகம் சேர்த்து நன்றாக கலக்கவும்.

    இதனுடன் தயிர், சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டி இட்லி மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும். இதை அரை மணிநேரம் ஊறவிடவும்.

    ஒரு இஞ்ச் குழிவுள்ள வட்ட தட்டில் எண்ணெய் தடவி, கரைத்த மாவை பரப்பவும்.

    இட்லி பாத்திரத்தில் இதை 15 நிமிடம் ஆவியில் வேகவிடவும். பின்பு வெளியே எடுக்கவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளித்து மேலே பரவலாக போடவும்.

    அடுத்து அதன் மேலே கொத்தமல்லி, தேங்காய் துருவலையும் பரவலாக தூவவும்.

    பொடித்த சர்க்கரையில் சிறிது தண்ணீர், எலுமிச்சைச் சாறு கலந்து மேலாக ஊற்றவும்.

    கோதுமை ரவை டோக்ளா தயார்.

    இதை விருப்பப்படி துண்டுகள் செய்து, புதினா ஸ்வீட் சட்னியுடன் பரிமாறலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×