search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "walk out"

    • குருவிகுளம் ஒன்றிய குழு கூட்டம் ம.தி.மு.க.வை சேர்ந்த ஒன்றிய குழு தலைவர் விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்றது.
    • அரசு அதிகாரிகளை மிரட்டும் தோரணையில் பேசியதை கண்டித்தும் வெளிநடப்பு செய்தனர்.

    சங்கரன்கோவில்:

    குருவிகுளம் ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் ம.தி.மு.க.வை சேர்ந்த ஒன்றிய குழு தலைவர் விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் 11-வது வார்டு கவுன்சிலர் மணிமாலா சுரேஷ், 17-வது வார்டு கவுன்சிலர் ராமலட்சுமி பாண்டியராஜ், 14-வது வார்டு கவுன்சிலர் வீரலட்சுமி செல்வக்குமார் ஆகியோர் கலந்து கொள்ளாமல் புறக்கணித்ததாக கூறப்படுகிறது.

    கூட்டத்தில் கலந்துகொண்ட தி.மு.க. கவுன்சிலர்கள் ஒன்றிய குழு தலைவர் முறைகேடுகள் செய்துள்ளதாகவும், ஒன்றியத்தின் தென் பகுதிகள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் ஒன்றிய குழு தலைவர் பகுதிகளில் பணிகள் தேர்வு செய்யப்படுவதாகவும் ஒன்றிய குழு தலைவர் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாகவும், நிதிகள் முறையாக செலவு செய்யப்பட வில்லை என்றும், ஒன்றிய பொறியாளர் ரமேஷ் என்பவர் ஆலோசனையின்படி பணிகள் தேர்வு செய்யப்படுவதாகவும் கவுன்சிலர்களை கலந்து கொள்ளாமலும் விவாத த்திற்கு கொண்டுவராமலும் தீர்மானங்களில் முறைகேடுகள் நடைபெறுவதாகவும் கூட்டத்தில் ஒன்றிய குழு தலைவர் அரசு அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை என்றும் அரசு அதிகாரிகளை மிரட்டும் தோரணையில் பேசியதை கண்டித்தும் வெளிநடப்பு செய்தனர். மேலும் ஒன்றிய குழு தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர உள்ளதாக கூறினர்.

    • தோகைமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளுக்கு, கடந்த 5 மாதங்களுக்கு மேலாக எந்தவிதமான பொது–மக்கள் அடிப்படை வசதிகளுக்குரிய தேவை–யான பணி செய்ய பொது நிதி ஒதுக்கீடு செய்ய வில்லை.
    • அதிகாரிகள் எவரும் ஒன்றிய குழு கூட்டங்களுக்கு வருவதில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டது

    கரூர்,

    குளித்தலை அருகே தோகைமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகக்கூட்டம் மன்றத்தில் ஒன்றிய குழு சாதாரண கூட்டம் ஒன்றிய குழு தலைவர் லதாரங்கசாமி தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் ஒன்றிய குழு தலைவர் ஒன்றிய குழு துணை தலைவர் பாப்பாத்தி சின்னவழியான் மற்றும் 13 ஒன்றிய கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மன்ற பொருளாக 22 தீர்மானங்கள்வாசிக்கப்பட்டது, தீர்மானங்கள் அனைத்தும் நிறைவேற்றக்கூடாது என்று ஒன்றிய குழு தலைவர் மற்றும் ஒன்றிய குழு துணைதலைவர் உட்பட 13 ஒன்றிய கவுன்சிலர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றக்கூடாது, என்றும்

    தொடர்ந்து தோகைமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளுக்கு, கடந்த 5 மாதங்களுக்கு மேலாக எந்தவிதமான பொதுமக்கள் அடிப்படை வசதிகளுக்குரிய தேவையான பணி செய்ய பொது நிதி ஒதுக்கீடு செய்யாததாலும், 15 வது நிதி குழு மானியம் நிதி ஒதுக்கீடு செய்தும் பணிகள் செய்வதற்கு ஒப்பந்தப்புள்ளி வைக்காததாலும், முக்கிய அதிகாரிகள் எவரும் ஒன்றிய குழு கூட்டங்களுக்கு வருவதில்லை என்றும் குற்றம் சாட்டி அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி அனைத்து மன்ற பொருள் தீர்மானங்களையும் நிறைவேற்றாமல் வெளியில் சென்றனர்,

    கரூர் மாவட்ட பகுதியில் ஒன்றிய குழு சாதாரண கூட்டத்தில் அனைத்து தீர்மானங்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்து வெளியில் வந்தது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கரூர் மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியக்குழுக் கூட்டத்தில் தங்கள் வார்டுகளுக்கு நிதி ஒதுக்கவில்லை என அ.தி.மு.க. கவுன்சிலர்கள் குற்றஞ்சாட்டி வெளியேறினர்
    • கூட்டத்தில் கவுன்சிலர்களுக்கு பதில் அளித்த ஆணையர், என்னென்ன பணிகள் வேண்டும், எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் என கவுன்சிலர்களை எழுதித்தரக்கூறினார்

    கரூர்:

    கரூர் மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் தலைவர் வே.சிவகாமி தலைமையில் நடைபெற்றது. இதில் துணைத்தலைவர் பெரியசாமி மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    துணைத்தலைவர் பெரியசாமி மற்றும் அனைத்து ஒன்றியக்குழு உறுப்பினர்களும் தங்கள் பகுதிக்கு எவ்வித நிதியும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்றும், நிர்வாகமே ஒப்பந்தங்களை கோரி அவர்களே பணிகளை மேற்கொண்டு விடுவதாக குற்றச்சாட்டினார்.

    இதற்கு பதிலளித்த ஆணையர், என்னென்ன பணிகள் வேண்டும், எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் என கவுன்சிலர்களை எழுதித்தரக்கூறினார்.

    இதையடுத்து ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கு தாள்கள் வழங்கப்பட்ட நிலையில் யாரும் எதையும் எழுதி தரவில்லை. மேலும். துணைத்லைவர் பெரியசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சிவசாமி, ஜெயலட்சுமி, செல்வி ஆகிய 4 அ.தி.மு.க. ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தீர்மானத்தில் கையெழுத்திடாமல் வெளியேறினர்.

    அப்போது அவர்கள் கூறுகையில், தங்கள் வார்டு பணிகளுக்கு எவ்வித நிதியும் ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை. அப்படியே வார்டுகளில் பணிகள் மேற்கொண்டாலும் அந்த பகுதிக்கு அவர்களே ஒப்பந்தம் விட்டு அவர்களே செய்துக்கொள்கின்றனர். அதனால் தீர்மானத்தில் கையெழுத்திடவில்லை என்றனர்.

    • நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சி கூட்டம் சேர்மன் விஜய்கண்ணன் தலைமையில் நடைபெற்றது.
    • வேறு இடம் பார்த்து ரேசன் கடை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சி கூட்டம் சேர்மன் விஜய்கண்ணன் தலைமையில் நடைபெற்றது.

    ஆணையாளர் விஜய் குமார் பொறியாளர் ராஜேந்திரன், சுகாதார அலுவலர் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் பல வாசகங்களுடன் கூடிய தட்டிகளுடன் கூட்ட அரங்கில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் உள்ளே நுழைந்தனர். அ.தி.மு.க. உறுப்பினர் பழனிச்சாமி பேசும்போது, எங்கள் பகுதியில் உள்ள ரேசன் கடை பழுதாகி உள்ளதால் கடை உரிமையாளர் கடையை காலி செய்ய சொல்கிறார்.

    வேறு இடம் பார்த்து ரேசன் கடை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதேபோல் நகராட்சி தி.மு.க. உறுப்பினர் ஜேம்ஸ், ரேசன் கடைகளில் ரேகை வைக்கும் பிரச்சனை அனைத்து வார்டுகளில் பெரும் பிரச்சனையாக உள்ளது. இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என கூறினார்.

    கூட்டத்தில் தொடர்ந்து துணை சேர்மன் வெங்கடேசன், கவுன்சிலர்கள் சத்தியசீலன், அம்பிகா, ரங்கநாதன், வேல்முருகன், பாலசுப்ரமணி, கதிரவன், கோவிந்தராஜ், பரிமளா, மகேஸ்வரி, கிருஷ்ணவேணி, புஷ்பா, தீபா, சுமதி, செல்வி, உள்ளிட்ட பலர் வடிகால் வசதி, வாட்டர் டேங்க் முன் உள்ளமுள்செடிகள் அகற்றுதல், சாலை வசதி, மின் விளக்கு வசதி, சாக்கடை அடைப்பை சரி செய்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகள் குறித்து பேசினார்கள். இதனை தொடர்ந்து சேர்மன் விஜய்கண்ணன் உறுப்பினர்களின் கோரிக்ைக பரிசீலிக்கப்படும் என்றார்.

    முந்தைய கூட்டத்தில் உறுப்பினர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதன் காரணமாக இந்த கூட்டத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    ×